ஜெயிப்பவர்கள் எல்லோரும் போற்றப்படவேண்டியவர்கள். ஏன் அழகானவர்களும் கூட.
ரெஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி . ஆனால் Dany Boyl இந்தியா என்ற களத்தை தேர்ந்தெடுத்தது ஏன் என்று யாருக்காவது தெரியுமா ?.
அவார்டே கிடைக்காத Anil kapoor மேடையில் காட்டும் உணர்ச்சி வேகம் நம்மையும் தொற்றி கொள்கின்றன. A true Indian.
------------------------------------
நன்றி சுரேஷ்,
உன்னுடைய Wikipedia Map என்னை மிகவும் பாதித்தது . பல இடத்தின் பெயர்கள் மீண்டும் நினைவுக்குள் நிழல் ஆடின . ஆண்டாள்புரம் , ஜெய் ஹிந்த்புரம் , வசந்த் நகர் , பழங்காநத்தம் , சத்யசாய் நகர் , அழகப்பன் நகர் , சந்தானம் ரோடு .
உச்சரிக்கும் போது நாக்கில் மெலிதாக இனிப்பை உணர்ந்தேன் .நம் நண்பர்களும் , போட்டியாளர்களும் ( விரோதின்னு சொன்னா நல்ல இருக்காது ) ,தோழிகளும் ,அக்காக்களும், காதலிகளும் ,அண்ணன்களும் , ஆசான்களும் நிறைந்த இடம் .
வாழ்வில் மறக்க முடியாத பகுதி .
 
 
2 comments:
Dany Boyl இப்படி படம் எடுத்ததுதான் தவறா? இதே படத்தை ஒரு இந்தியன் எடுத்திருந்தால், “குப்பை” என தூக்கி எறிந்திருப்போம். பிரிட்டிஷ்காரன் எடுத்ததால் இந்தப் புகழும், பெருமையும்.அமிதாப் பச்சனும் இதே ரீதியில் தன் வலைபதிவில் எழுதி பின்பு ஒரு சப்பை கட்டு கட்டினார். There is always a underbelly in every country. படத்தில் அப்படி என்ன இல்லாததை, இந்தியாவில் நடக்காததை Dany காட்டியிருக்கிறார்?
ஸ்லம் டாக் மில்லேனியர் திரைப்படத்த பாத்துட்டு அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு யோசிக்கிறத விட, இத நாம பாத்துட்டு நம்ம நாட்டுக்கு என்ன பண்ணப்போறொம்ங்கறத யோசிக்கலாம். டாட்டா, அம்பானி இருக்கிற நாடு தானே இப்படியும் இருக்கு? என்ன பண்ணலாம் சொல்லுங்க?
ஜெயமோகனின் இந்த விமர்சனம் கொஞ்சம் சரியான விததில் இருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது.
//தோழிகளும் ,அக்காக்களும், காதலிகளும் ,அண்ணன்களும் , ஆசான்களும் நிறைந்த இடம் //
எனக்கு தெரிந்து ஸ்பர்ஜன்ஞானமுத்து (எ) போஜமகாராஜா அழகப்பன் நகரில்(?) இருந்து அண்ணா நகரிலோ கே கே நகரிலோ(?) இருக்கும் தனது பாட்டி வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் தன் காதலியை பார்க்க தீடிரென்று இரவு 7 மணிக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பி போய் வந்ததை கேள்விப்பட்டிருக்கிறேன்.
(டிஸ்க்ளெய்மர்: இதனால் போஜமகாராஜா குடும்பத்தில் குழப்பம விழைந்ததாக என்னை குற்றம் சொல்ல கூடாது).
பத்த வச்சுட்டியே பரட்ட
Post a Comment