Showing posts with label Rema. Show all posts
Showing posts with label Rema. Show all posts

Wednesday, November 4, 2009

After a long time.............................Its rema again

Hai everybody,

Sorry after a long time I have just logged in. Frankly, I don't get time to see even mails. Please dont think otherwise, its just hectic with office work and handling family affairs and more than anything else the commuting. Blessed are those who are house wives. I really envy them. Day by day its becoming hectic to cope up with the pressures from all ends.

Coming to the point the good news is our classmate Asha has fixed up the marriage for her elder daughter. I am very happy for her.

Its nice to note that this classroom is gearing up of the next meet on December. Friends can we all make it on a Saturday or Sunday so that I can attend. Working days may not be possible with me.

Sorry I am writing this in english since I am not able to find the ways and means of typing in tamil.

Thursday, July 23, 2009

ரேமாவின் பதில்கள்


1. சமீபத்தில் எப்போது மன்னிப்பு (sorry) கேட்டாய்? இல்லை கேட்டிருக்கலாம் என்று பின்பு தோன்றிய சம்பவம்?

சமீபத்தில் என்றல் ம்ம்ம்ம்ம்........

போன வாரம் என் husband உடன் உடன் சின்ன சண்டை. தப்பு அவரதுதான் என்றாலும், மனைவியான கட்டுபாடிர்காக குடும்பம் சுமுகமாக செல்வதற்காக, நான் சாரி சொன்னேன். ( அவர் சண்டை ஓய்ந்தபின் என்னிடம் தனியாக sorry சொன்னார் என்பது வேர விஷயம்) . என்ன செய்வது அவர் என்னுடன் இருப்பதே monthly 4-5 days தான். அதிலும் சண்டை போட்டு வீட்டின் நிம்மதி கெடக்கூடாது அல்லவா?

2. தேர்தலில் ஓட்டு போட்டது உண்டா? இல்லை என்றால் ஏன் போடவில்லை என்று விளக்க முடியுமா? அப்படி ஓட்டு போடாத போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நீங்கள் விமர்சிப்பது சரியா?

நான் இது வரை ஓட்டு ஒருமுறை தான் போட்டுள்ளேன். அதன்பின் எப்போதும் என் பெயர் list ல் இருந்ததில்லை.
ஓட்டு போடாத போது அரசாங்கத்தை விமர்சித்திருக்கிறேன், என் பெயர் listல் சேர்காததற்கு .

3. கடவுள் நம்பிக்கை உண்டா?

நிறைய உண்டு. எந்த நிலையிலோ இருந்த என்னை இந்து இந்த நிலைமைக்கு கொண்டுவந்ததற்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்லாத நாளே இல்லை எனலாம். எனது எல்லா வெற்றிக்கும் அந்த கடவுள் தான் காரணம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நிறைய பூஜைகள், பிரார்த்தனைகள் எல்லாம் செய்வேன். கோவில்கள் தான் mostly எனது holiday outing.

4. வழகத்திகலிருந்து மாறுபட்டு எப்போதாவது எதையாவது புதிதாக முயற்சித்தது உண்டா?

வழக்கத்திற்கு மாறாக என்று சொன்னால் இப்பொழுதெல்லாம் யாருடனும் அளவுக்கு மேல் பேசுவதை குறைத்துகொண்டிருக்கிறேன். முன்பெல்லாம் யார் என்ன பேசினாலும், ஏன்டா வம்பு என்றாலும் சேர்ந்து அரட்டை அடிப்பேன். இப்பொழுதெல்லாம் அதில் நாட்டம் குறைந்து விட்டது. இயன்ற வரை to the point பேச முடிவெடுத்துள்ளேன் . வழக்கத்துக்கு மாறாக இப்பொழுது Yogasanaa பயின்று வருகிறேன்.

5. சமீபத்தில் எதாவது விளையாட்டில் (வீட்டுக்கு வெளியே) ஈடுபட்டது உண்டா? இல்லை என்றால் ஏன் விளையாட தோண்றவில்லை என்று யோசித்தது உண்டா?

என் daughters கூட ( summer holidays) இல் shuttle கார்க் விளையாடினேன் விளையாட்டில் நாட்டமுண்டு. விளையாட நேரம் தான் இல்லை.

6. கடைசியாக அழுதது எப்போது இல்லை மனம்விட்டு சிரித்தது??

நான் ரொம்ப emotional type அதனால் ஒரு நல்ல பாட்டு கேட்டால் கூட அழுவேன். கோவில் சென்றால் அந்த தெய்வத்துக்கு நன்றி சொல்லும்போது என்னை அறியாமலே என் கண்களில் நீர் சுரக்கும். என் வீட்டில் எல்லோரும் என்னை எப்பொழுதும் கேலி செய்வார்கள் ( நான் என் இரு கண்களிலும் கருங்கடல், செங்கடல் வைத்துள்ளேன் என்று )

சமீபத்தில் மனம் விட்டு சிரித்தது அந்த Chennai 10th & 12th சந்திப்பில். உண்மையை சொன்னால் நானும் என் ஹஸ்பெண்டும் எங்கள் சின்ன சின்ன சண்டைக்குப்பின் அவர் என்ன சிரிக்கவைக்க சொல்லும் ஜோக்குகளுக்கு நிறையவே மனம் விட்டு சிரித்து இருக்கிறேன்.

7. என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள், இல்லை கடைசியாக படித்தது (பேப்பர்னு சொல்ல கூடாது)??

சமீபத்தில் என்றால் இப்பொழுது நான் Lalitha Sahasrama பாஷ்யம் படித்துக்கொண்டிருக்கிறேன். என்னவோ sudden ஆக Lalitha sahasranama த்தின் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

8.உங்களுக்கு ஏதாவது தனி திறமை இருக்கிறதா??

தனி திறமை என்று பெரிதாக ஒன்றும் இல்ல. இருந்தும் நான் சுமாராக பாடுவேன். Also I have done a lot of Counselling for drug addicts, students
and family issues. என் in-laws வீட்டில் எந்தவொரு விஷயம் என்றாலும் என்ன ஆலோசனை கேட்டு செய்வார்கள்.

9. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம் (அ) போக விரும்பும் இடம் (அ) வீட்டிலிருந்து அதிக தூரம சென்ற இடம்??

Life ஒரு தடவையாவது அந்த Naigra Falls பார்க்கவேண்டும் என்ற ஆசை. நிறைவேறுமா என்று தெரியாது. இயற்கையின் படைப்புகளில் மிக சிறந்த ஒன்றாக, பிரமிக்கவைக்கும் ஒன்றாக நான் அதை கருதுகிறேன்.

அதிக தூரம் சென்ற இடம்
Car - Kanyakumari
train , Flight - Delhi
Out of India - Nepal & Bhutan

10. வாழ்வில் சந்தோஷம் என்பது?

இயன்ற வரை பிறருக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வது. அரசாங்க பணியில் இருப்பதால் கறை படியாமல் இருப்பது.
இருப்பதை கொண்டு நிறைவாக வாழ்வது. I always feel contented Life is the success of happiness. I believe in போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

P.S. மக்களே எப்பொழுதும் போல் என் தமிழில் எதாவது குறை இருப்பின் என்னை மன்னியுங்கள் . ஆமென்

Wednesday, April 22, 2009

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! ! !

எப்படி தொடங்குவதென்பதே தெரியவில்லை. அத்தனை இன்பமாக இருந்தது . நம்மோடு படித்தவர்கள் எல்லாம் மிக்க நல்ல நிலைமையில் இருப்பதை அறிய ஒரு சந்தர்ப்பமாகவே நான் இந்த சந்திப்பை நினைத்தேன். முதல் 2 மணிநேரம் வெறும் அரட்டையில் கழிந்தது . 27 வருட இடைவெளியை தீர்க்க வேண்டாமா? அதன்ப்பின் நம்ம NRI களுடன் சிறிது பேச முடிந்தது மிக்க மகிழ்ச்சியே!.

அடுத்த ஒருமணிநேரம் போனதே தெரியவில்லை. இந்த 27 வருடத்தில் (அதாவது நாம் 10 ஆவது முடித்தப்பின்) யார் யார் என்ன செய்தோம், இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை அறிய ஒரு நல்ல மேடையானது.

அதன்பின் எல்லோருமாக உணவருந்தியது கூடுதல் சந்தோஷம் ஏன்னெனில் நாம் படிக்கும்போது கூட இப்படி சேர்ந்து சாப்பிட வாய்ப்பு கிடைத்ததில்லை. (கிடைத்திருந்தாலும் அதை அனுபவிதிருப்போமா என்பது கேள்விக்குறியே).
உணவு வேளைக்குபின் நாம் பகிர்ந்து கொண்டது ஒரு சுவாரஸ்யம் . சிலரது அனுபவங்கள், எதிர்கொண்ட சவால்கள் எல்லாம் நாம் எல்லோரும் அறிய ஒரு வாய்ப்பு மேடை . குறிப்பாக ஸ்பர்ஜன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் என்னை மிகவும் சிந்திக்கவைத்தது. எப்படி இருந்த நாம் எப்படி ஆகிவிட்டோம் என்று ஆச்சர்யப்பட வைத்து.

நான் தாமு, லெச்சு, ஜெயந்தி நால்வரும் முன்பே போனில் பேசியதுபோல் நமது புதிய கூட்டணி எதாவது ஒரு நல்ல காரியம் செய்யவேண்டும் என்ற கருத்தையொட்டி இந்தவருடம் நம்மால் முடிந்தளவு பள்ளிசெல்லும் குழந்தைகளுக்கு books & Notebooks வழங்கலாம் என்றுள்ளோம். இந்த விஷயம் எல்லோராலும் ஏற்கப்பட்டது என்றே நான் நினைக்கிறேன். யாரால் என்ன முடிந்ததோ அந்தாளவு funds குடுக்கலாம். ( NRIs please note this). லக்ஷ்மணன் சொன்னபடி ஒரு charity account open செய்தபின் இந்த பணி தொடரும்.

மேகுரிய விஷயங்களுடன் நம் மீட்டிங் முடிந்தது. இதில் என்ன விசேஷம் என்றால் நமது XC அல்லாத நால்வர் இதில் கலந்து கொண்டது. நாம் படிக்கும் நாட்களில்கூட இத்தனை ஒற்றுமையாக இருந்தோமா என்பது எனக்கு ஞாபகம் இல்லை.

என்னவோ போ ! மொத்தத்தில் நாம் டைரியில் குறிக்கவேண்டிய ஒரு முக்கியமான நாளாகிவிட்டது இந்த ஏப்ரல் 19th. இந்த வாய்ப்பை அமைத்து குடுத்த லெச்சு, தாமு, சத்யராஜுக்கு என் உளமார்ந்த நன்றிகள். நனது இந்த சந்திப்பு ஒரு நல்ல வாய்ப்புக்கு அடிகோலாக இருக்கும் என்று கருதுகிறேன். A special thanks to Lakshman for the space, patience and arrangements. புதிய XC க்கு Three Cheers போடலாமே!. Hippip Hurray ! Hippip Hurray ! Hippip Hurray.

Once Again thank you all of you to make this possible.

Thursday, March 5, 2009

புது ஆட்கள் இன்னும் ஏன் சேரவில்லை

என்ன நண்பர்களே
தாமு அனுப்பிய லிஸ்டுல நிறைய பேர் இருக்காங்க ஆனா ப்ளோக்ல ரொம்ப கம்மி பேர் தான் சேர்ந்திருக்காங்க. எல்லாரையும் கூப்பிட ஒரு வழி கண்டுபிடியுங்கப்பா. பாய்ஸ் எல்லாம் போட்டோ போட்டு அசத்தறாங்க. ஆனா girls போட்டோ எப்படி போடறது. Web ல போட்டோ போட பயமா இருக்கு. நாம விரைவில் ஒரு மீட்டிங் ஏற்பாடு பண்ணுங்கப்பா. இப்ப என் தமிழ் சரியா இருக்கா?

Friday, February 27, 2009

நேத்து ராத்திரி யம்மா

என்னப்பா ஸ்ரீ உன்பொண்னு கலக்கறா. எப்படிப்பா இவ்வளவு தைரியம். கொஞ்சம் கூட பயமே இல்லாம நிக்கறா. Amazing நான் எல்லாம் அப்படி ஒரு பாம்ப பார்த்தாலே ஓடிடுவேன். Hats off to her.

ஹே உங்களுக்கு எல்லாம் நயாஞாபகம் இருக்கா. சு சு க்ளாஸில்ச்சுக்கு வந்து யாரவது கொட்டாவி விட்டா உடனே " நேத்து ராத்திரி யம்மா பாடுவாரு". ஸாரீ என் தமிழ் ரொம்ப மோசமா இருந்தா என்னை மன்னிச்சிடுங்க. தமிழ் அம்மா கிட்ட சொல்லி கொடுந்த்துடாதீதேங்க

Wednesday, February 25, 2009

Nostalgic memories

Thats fantastic to join the team of golden/ olden days. I am gald that you all have taken time and energy to reunite the team. Hats off to you. Hey Jayanthi can you pls sms your contact no. so that I can call you. My cell no by private mail. Pls keep in touch.