Showing posts with label Damu. Show all posts
Showing posts with label Damu. Show all posts

Tuesday, October 20, 2009

குழந்தையின் சிரிப்பில் இறைவனை காண்போம் !

ஸ்ரீ குமாரின் குழந்தைகள் குறித்த பதிவிற்கு பின் எனக்குள் சில சம்பாஷனைகள்.

குறிப்பாக தந்தையிடமிருந்து தாயின் கரு முட்டையை தாக்குவதற்கு பல மில்லியன் உயிரணுக்கள் நீந்துகின்றன .விவரம் தெரிவதற்கு முன்னரே போட்டிகள் ஆரம்பமாகிவிடுகின்றன.அதில் ஒருவனுக்கு / ஒருத்திக்கு மட்டும் தான் முட்டையை சினை படுத்த அனுமதி .ஒன்று உட்புகுந்த பிறகு மற்றவர்களுக்கு அனுமதி இல்லை .இது இயற்கையின் நியதி .

விஷயம் என்னவென்றால் நம் உடன் நீந்தி வந்த அந்த பல மில்லியன் சகோதர சகோதரிகள் எங்கே . ஏன் இந்த இந்த அநீதி .இந்த பூமியில் வாழ்வதற்கு கூட கருவறைக்குள் போட்டி உண்டு .அங்கே ஜெயித்தால்தான் இங்கே oxygen கிடைக்கும்.

So, ஜனித்தவ்னின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்று .அதை அவன் தேர்ந்தெடுக்கவில்லை , கொடுக்கப்பட்டது.

பிறவி எடுத்த பின்பும் எக்குறையும் ( கூன் , குருடு, செவிடு என்று என்னென்னவோ கூறுகின்றார்களே ) இல்லாத பிறவி பெரும் பாக்கியம் .

இங்கேதான் இறை நம்பிக்கை தேவை படுகிறது .

தந்தையின் வீரியத்தில் இருந்து கிளம்பி கும்பலோடு கும்பலாக நீந்தி முண்டியடித்து கரு முட்டையை தாக்கி .மற்றவர்களுக்கு பெப்பே காண்பித்து , பத்து மாதம் ஏகப்பட்ட பரினாமங்களில் உள் வசித்து (அதான் science ). பின்னர் வெளிவந்து ஆங்காரமாக நாபியில் oxygen என்ற முதல் உணவை எடுத்தவுடன் ... வந்துட்டானய்யா வந்துட்டான்... என்று மொத்த உலகமும் கூவும். மொத்த உலகம் என்பது மனிதர்கள் மட்டுமல்ல மற்றனைத்து ஜீவராசிகள் கூடத்தான்

" குழந்தையின் சிரிப்பில் இறைவனை காண்போம் "

அது இயற்கையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை இறைவனின் குழந்தை தான் .அது எப்போது தந்தை, தாயின் கட்டுப்பாட்டிற்கு வருகிறதோ .அதற்கு புரியாத வேறு சில பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றன .

பெரியோர்களின் இயலாமைக்கு இவர்கள் தான் குறியா ?

தந்தையும் , தாயும் அவர்களின் அடிப்படை பிரச்சனைகளை தன்னலமற்ற நோக்கத்தில் எதிர் கொண்டால் ,மற்றவற்றை இயற்கை பார்த்து கொள்ளும்.

இது மனிதர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் .ஆடு மாடு மற்ற பிற அல்ல. அவை தன கடமைகளை செவ்வன செய்கின்றன. எனக்கென்னமோ கலாச்சாரமே மனிதன் இவர்களை பார்த்து தான் கற்று கொண்டிருப்பான் என்று தோன்றுகிறது .

Tuesday, June 30, 2009

தோழியே ,உன் மனதை தேற்றிக்கொள் !


திரு. மகாலிங்கம் அவர்களுக்கு,
உங்களை சந்தித்தது இல்லை.

நீங்கள் எங்களுக்கு தெரிந்தவரின் நெருங்கியவர் என்பது தெரிவதற்கு முன்னரே உங்களை குறித்து தகவல்கள் இந்தியாவையே பதற வைத்தது. ஆனால் நீங்கள் சில இழப்புகளுக்கு பிறகு கிடைப்பீர்கள் என்று நம்பிக்கை கொண்டிருதோம்.

நடந்ததோ... நேர்மாறனவை!

ஒரு நாளின் துவக்கத்தை இயற்கையை அங்கீகரப்பதின் மூலம் தொடங்கி வைக்கிறோம் .நீங்களும் அதைத்தான் மழை பெய்தாலும் சரி என்று குடை எடுத்து புறப்பட்டீர்கள்.

இயற்கையின் திட்டமோ வேறாக இருந்திருக்கிறது.

இங்கே அனைவருக்கும் கடமைகள் மிச்சமிருப்பதால்
ஓட்டிக்கொண்டிருக்கிறோம் .உங்களுக்கு கடமைகளில் இருந்து விடுதலை . இருந்தாலும் உங்களுக்குள் இருந்த அந்த கடைசி நொடி எங்களை பதற வைக்கிறது .

எப்படி முடித்து கொண்டீர்கள் ? ஈஸ்வரா .... என்றா?

என்ன இருந்து என்ன .உங்களை காப்பற்ற, உருவி போட வேஷ்டி கூட இல்லையே .

இதுதான் நிஜம் .....

எங்கள் உடன் படித்த தோழியே ,உன் மனதை தேற்றிக்கொள் . இந்த நிஜத்தை ஒப்புக்கொள். உனக்கு கடமைகள் இன்னும் மிச்சமிருக்கிறது.

தாமு

------

My Heartfelt Condolences to Vinayagasundari and Family.I came to understand this fatal incident thro' Asha and I was shellshocked.The other day when we all met I still remember the bright smiling face of hers and I cant imagine to see her without those.Eventhough I dont know her much I join with the entire friend(student) community in giving her support and strength which will give her lots of hope for her future.

Very saddened.

Sathya

--------

Very sorry vinayaka sundari... My heartfelt condolences to you and your family members.May the mans soul rest in peace.

Raju



Thursday, May 28, 2009

ரத்தினவேல் கிடைச்சாச்சு !

ஒருமுறை நம்ம சிவா LinkedIn அனுப்பிஇருந்தான். அதில் அவன் நட்பு வட்டத்தை துளாவியபோது. ரத்தினவேல் கிடைத்தான்.
So, first I convey my thanks to Shiva.
Hope he will call us soon.
I have removed his e-mail please refer the yahoo group

-------------------
LinkedIn
INTRODUCTION: ACCEPTED
Ratnavelsamy Kalyanasundaram has accepted your request.
Title: A School Friend
Dear Damo,
How are you? Glad to hear the message from you ...it is been a long time...
Thanks
Ratnavelsamy
On 5/19/09 11:05 PM, Damodaran J wrote:
--------------------
Hi,
Ratnavel
எப்படி இருக்கே ?
Eppedira irukke?.
----------------------------------------------
என்னமோ போங்கப்பா... புதுசு புதுசா யாரையாவது சேர்த்தாலாவது எழுதுரீங்கலான்னு பாப்போம் .

Tuesday, April 21, 2009

யாவரும் நலம் !

27 வருடங்களுக்கு முந்தய நினைவுகளுடன் 19 ஆம் தேதி கூடிய நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி .


கிட்டத்தட்ட ஒரு generation gap என்று கூறலாம் .( 3 Decades= 1 Generation).


வாழ்கையில் கலப்பு நிகழ்வுகளான மகிழ்ச்சி ,இழப்பு, துக்கம் என பல கட்டங்களை கடந்திருந்தாலும், அந்த Nostalgic moments என்ற போதையில் கட்டுண்டவர்கள் ஓடி வந்து கலந்து கொண்டது அந்த 19 ஆம் தேதி . ஒவ்வொருவரின் முகத்திலும் இன்னும் அந்த குறும்புத்தனம் மிச்சம் இருக்கிறது .

அந்த ஒரு நாள் அனைவரும் பள்ளி சென்று வந்தோம் .

ஒவ்வொருவரின் தனிப்பட்ட இந்தக்கால உருவ அமைப்பையும் மீறி குறும்புத்தனம் தெரிந்தது. அன்று பார்த்தது போல் இன்றும் இருந்தவர்கள் பல பேர்.

முதலில் லெட்சுவுக்கும் அவர் நண்பர் சதீஷுக்கும் இடம் ஒதுக்கி பூரணமாக ஒத்துழைத்தமைக்கு மிக்க நன்றி.

பின்பு இதற்காக வெளி ஊரிலிருந்து வந்தவர்கள் .

1. Shankari
2.Lalitha
3. Visaalakshi.
4. Samuel Nirmal Kumar
5. Vinayaga Sunthari.
6. K.S.Vidya.
7. Kannan
8. Spurgeon
9.Buela Charlet
10.Kumar Muthiah

Chennaites:

1. Lakshmanan
2. Sathyaraj
3. Damodaran
4. M.S.Vasan ( முன்னாள் அம்மா பய்யன், இப்போ... ?
5.Sree Kumar
6. Shankar (அப்பாஜி )
7. Muthuraman ('D' Section)
8. D.Murali ('D' section )
9. Meena ('B' Section)
10. R.Asha
11. Deivaanai.
12. S.Vidya
13. Jayanthi Narayanan
14. G.L.Rema
15. Gurudatt Kannan.

NRIக்கள்:

1. Bharadwaj- Singapore
2. Sivakumar- Santa Carla USA
3. Suresh - Edinburgh UK


யாரையாவது விட்டு போயிருந்தால் please include in the list.

அந்த நாள் NRI க்களின் நிலை எதிர் பார்த்துதான். ஆனாலும் அவர்களுக்குள் உரையாட வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி தெரிவிக்கவும் .

இந்த Meeting யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதற்காக அல்ல .மறந்து போன நட்பை புதுப்பித்து கொள்வதற்க்காக மட்டுமே .

Wednesday, April 15, 2009

தமிழ் புத்தாண்டே வருக !


இனிய நட்பு வட்டத்திற்கு என்னுடைய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Tuesday, March 31, 2009

"49-O"

"49-O" : நல்ல கேள்வி சுரேஷ் . இது எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று .

நமது சட்ட அமைப்பில் Section "49-O" விளம்புவது என்னவென்றால் (as per 1969 act). " நான் யாருக்கும் ஓட்டளிக்கமாட்டேன் " என்று கூறுவதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு . இதை நீங்கள் முறைப்படி polling booth சென்று .உங்கள் அடையாள அட்டையை காண்பித்து , சுட்டு விரலில் மை குறி வாங்கி கூறலாம் .

இதை ஏன் நீங்கள் polling booth சென்று கூற வேண்டும்?.

உதாரனத்திற்கு உங்கள் தொகுதி வேட்பாளர் 500 ஒட்டு வித்யாசத்தில் ஜெயித்திருந்தால் . இந்த "49-O" ஒட்டு வித்யாசத்தில் அதிகமாக இருந்தால் அந்த வேட்பாளர் தோற்றதாக கருதி re -election வைப்பதற்கு வாய்ப்பு உண்டு . இன்னொன்று அதே வேட்பாளர் மீண்டும் தேர்தலில் நிற்பதற்கு வாய்ப்பு கிடையாது .

இது குண்டர்கள் தேர்தலில் நிற்கும்போது நாம் எல்லோரும் ஒன்று கூடி செய்ய வேண்டிய காரியம் "49-O" .நமக்கு அரசியல் சட்ட அமைப்பில் ஒதுக்கப்பட்டுள்ளது

Wednesday, March 25, 2009

பெண் பார்க்கும் படலம் !

எல்லோருக்கும் பெண்பார்க்க செல்லும்போது கொஞ்சம் வித்யாசமான அனுபவமாகத்தான் இருக்கும். அதை பின்னர் பார்போம் .

நேற்று மனதில் சில குழப்பங்களுடன் வீடு சேர்ந்தேன் . TV ஆன் செய்து பேசாமல் அமர்வது என் வழக்கம் .பொதுவாக மனம் அதில் லயிப்பதில்லை . சிந்தனையில் யாரும் பேசி குறுக்கிடாமல் இருப்பதற்காக TV ஒரு துணை . இருந்தாலும் என்னை ஒரு விளம்பரம் மிகவும் ஈர்த்தது . (Fanta advt.). அதில் அசினை பெண் பார்க்கும் போது பாட தெரியுமா ஆட தெரியுமா என்று கேட்பதற்குமுன்னரே " யம்மாடி ... ஆத்தாடி.. "என்று ஆரம்பித்து விடுவாள் . பின்னர் மாப்பிள்ளையும் எழுந்து அவளோடு ஒரு குத்து பாட்டு ஆடுவான் பாருங்க .

சூப்பர் !.

கொஞ்ச நேரம் மனது விட்டு சிரிக்க முடிந்தது .

Friday, March 20, 2009

திருவேங்கட (அத்தான்).

நம் தோழர் திருவேங்கடத்தானை எல்லோருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அவன் பெயர் Batchmates.com இல் பார்க்க முடிகிறது . நான் அவனுக்கு விண்ணப்பம் அனுப்பியும் பதில் வரவில்லை . தற்போது மும்பையில் இருப்பதாக தெரிகிறது . மற்ற batchmates.com உறுப்பினர்கள் முயற்சி செய்து பாருங்கள் .

என் பெயரை மறந்திருக்கலாம் .

வகுப்பறையில் ஆசிரியர் ஏதாவது கேட்பதற்காக எழ சொன்னால் . முன்னும் பின்னும் இருக்கிற பெஞ்ச் மட்டும் கேட்கும்படியாக திட்டிக்கொண்டே எழுந்திரிப்பான் .முகம் மட்டும் சீரியசாக இருக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் சிரிப்பை அடக்க முடியாது. அதனால் அவன் குறும்பு வாத்தியாருக்கு தெரிந்து விடும் .

சில கேரக்டெர்களை நான் சந்திக்கும்போதெல்லாம் இவனெல்லாம் என் ஞாபகத்திற்கு வருவான் .

கல்யாணராமன் இவனை "கடப்பாரை " என்று செல்லமாக விளிப்பதும் உண்டு .

திருவேங்கடத்தான் தந்தை நம் எல்லோருக்கும் இன்னொரு கணித ஆசிரியர். நெற்றியில் திருநாமத்துடன் வரும் இந்த கம்பீரமான வைஷ்ணவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் famous வாக்கியம் " அந்த கடோஸி பையனை எழ சொல்லு " ( உபயம் : குமார் முத்தையா ).

இவர் இருமுறை MA செய்ததால் . இவரை வேறுமாதிரி கூப்பிடுவதும் உண்டு (எல்லாம் சக ஆசிரியர்களின் ஆத்திரம் தான் ).

Thursday, March 5, 2009

கனசொந்து ஸ்ஸுருவாகிதெ !

"நின்னந்தலே... நின்னந்தலே... கனசொந்து ஸ்ஸுருவாகிதெ ! "
Hello! don't get scared. I am not scolding any body.
சமிபத்தில் நம் வகுப்பு தோழி ஒருவரை தோழி பேசியில் விளித்தேன். அவரின் ring tone பாடல் இது. கன்னட மொழி பாடல் . நான் சில காலம் பெங்களூரில் இருந்ததால் எனக்கும் கன்னட பாடல்கள் மீது ஒரு மோகம் உண்டு .
அர்த்தம் : உன்னாலே ... உன்னாலே ... கனவு ஒன்று ஆரம்பமானதே.
நீங்களும் இந்த பாடலை கேட்கவேண்டும் என்றால் , கூப்பிடுங்கள் பெங்களூர் வாழ் தமிழச்சியை.
வயது ஏற ஏற மனசு லேசாகுதுன்னு நினைக்கிறேன்.

Sunday, March 1, 2009

Me then… and today…



As requested by Sathya ,I place my two photos One is during my first year graduation and the other one is the latest. If you click on the photos you will get a better image.

Atleast we can catch each other in public. இல்லேனா அறுவை கிட்ட இருந்து தப்பிச்சு போய்டலாம் .

Damu

Friday, February 27, 2009

முதல் விமர்சனம்...

தமிழ் அம்மாவையும் ,திரு AN அவர்களையும் ஞாபகம் செய்த சுரேஷுக்கும் ஜெய்யுக்கும் நன்றி.

அவர்களை பற்றி எனக்குள் சில நினைவுகள்.

ஒருமுறை திரு AN (A.Narayanan) 1982 இல் வகுப்பறையில் மதுரை Map தெரியுமா என்று கேட்க நான் எதோ கேள்வி ஞானத்தில் கையை தூக்க ,என்னிடம் chalk கொடுத்து வரைய சொன்னார் .நானும் திட்டினாலும் பரவாயில்லை என்று கட்டம் போட்டு காட்டினேன் .அவரும் good என்று பாராட்டி அனுப்பினார் .அவ்வபொழுது எனக்கு அத்தி பூத்தார் போல் வகுப்பறையில் பாராட்டு கிடைக்கும்.

ஒரு முறை திரு AN. டேபிளில் சாய்ந்த வன்னம் இடது கையால் நெஞ்சை பிடித்து கொண்டு நின்று விட்டார் . மொத்த வகுப்பறையும் ஸ்தம்பித்துவிட்டது. ஸ்ரீ குமாரும் அனந்துவும் பதைத்து போய் கிளாசுக்கும் வாசலுக்கும் அல்லாடினார்கள் . கடைசியில் பக்கத்தில் இருந்த மகாதேவனை அழைக்க .அவர் வந்து அலட்டாமல் என்ன என்று கேட்க .இவரும் பாவம் gas என்று முடித்துக்கொண்டார் .

உப்போ..உப்பு.. என்று நீட்டு தொடருக்கு உயிர் கொடுத்து கற்று கொடுத்த வாசனின் அம்மா நம் எல்லோருக்கும் தமிழ் அம்மா . "கைக்கிளை" என்ற இலக்கண வார்த்தை கூறி உதாரணம் கேட்க "ஒரு தலை ராகம்" என்று தங்கபாண்டியன் கூறி முதல் சொட்டு வாங்கினான் . இன்று வரை எனக்கு அவர்கள் கற்பித்த பகுபத இலக்கணம் புரியவில்லை . திருக்குறளை பகுதி ,விகுதியாக பிரிக்க தெரியாது .

விமர்சனம் தொடரும் ...

Tuesday, February 24, 2009

எண்ணங்கள் ....

ஜெயிப்பவர்கள் எல்லோரும் போற்றப்படவேண்டியவர்கள். ஏன் அழகானவர்களும் கூட.
ரெஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி . ஆனால் Dany Boyl இந்தியா என்ற களத்தை தேர்ந்தெடுத்தது ஏன் என்று யாருக்காவது தெரியுமா ?.

அவார்டே கிடைக்காத Anil kapoor மேடையில் காட்டும் உணர்ச்சி வேகம் நம்மையும் தொற்றி கொள்கின்றன. A true Indian.
------------------------------------

நன்றி சுரேஷ்,

உன்னுடைய Wikipedia Map என்னை மிகவும் பாதித்தது . பல இடத்தின் பெயர்கள் மீண்டும் நினைவுக்குள் நிழல் ஆடின . ஆண்டாள்புரம் , ஜெய் ஹிந்த்புரம் , வசந்த் நகர் , பழங்காநத்தம் , சத்யசாய் நகர் , அழகப்பன் நகர் , சந்தானம் ரோடு .

உச்சரிக்கும் போது நாக்கில் மெலிதாக இனிப்பை உணர்ந்தேன் .நம் நண்பர்களும் , போட்டியாளர்களும் ( விரோதின்னு சொன்னா நல்ல இருக்காது ) ,தோழிகளும் ,அக்காக்களும், காதலிகளும் ,அண்ணன்களும் , ஆசான்களும் நிறைந்த இடம் .

வாழ்வில் மறக்க முடியாத பகுதி .

Friday, February 6, 2009

மனதை பிசைந்தது











TO THE HONOUR OF THE ARMY OF INDIA WHICH FOUGHT IN FRANCE AND BELGIUM 1914-1918 AND IN PERPETUAL REMEBRANCE OF THOSE OF THEIR DEAD WHOSE NAMES ARE HERE RECORDED AND WHO HAVE NO KNOWN GRAVE.

Dear All,

Recently I visited France officially and there for three weeks 06-01-09 to 26-01-2009.

In northern part of France I located one Indian cemetry. It lies between Lepasse and Merville or Four kilometres east of a place called Bethune.

இங்கே நம் தாதாக்களின் பெயரை தேடி பார்த்தேன்..ஒரு ஷண்முகம் , ஆறுமுகம் , பெருந்தகை , வந்தியத்தேவன் ....
வெறும் சீக்கியர்களும் முகமதியர்களின் பெயர் மட்டும் தெரிந்தது .


Not even a single south Indian.


என்னமோ இந்த இடம் என் மனதை பிசைந்தது .... பகிர்ந்து கொள்ள ஆசைபட்டேன்...


Tuesday, December 16, 2008

நம்மாலும் முடியும் ..!


நோக்கமெல்லாம் சரி ..

what is the plan?

Without plan nothing can be executed.

I can understand you (?) want to start the things with a group.

The main issue is people to be educated. Here present education setup is only for the future survival. I hope no one will deny this.

இங்கே தன்மானம்ன்கிற போர்வையிலே வேறு முகங்கள் .ஓசியில கிடைக்கிற விஷயத்த வாங்க யாரும் தயாரா இல்லை . தன்னை உன்னுடன் நிறுத்தி பார்ப்பதுதான் தற்போதைய நிலை.

எதற்கு கூறுகின்றேன் என்றால் கிராம வாழ்க்கை மிகுதியாக குறைந்துவிட்டது .

எப்போவுமே சில நல்ல காரியங்களுக்கு group சேக்க தேவை இல்லை..இது என்னுடைய கணிப்பு . நல்ல நோக்கத்துடன் ஆரம்பித்தால் பின்னால் தன்னிச்சையாக கூட்டம் சேரும் .

இன்னொரு விஷயம் நமது நட்பு வட்டத்திலேய இந்த மாதிரி காரியங்கள் யாரும் செய்ய வில்லை என்று எப்படி நிச்சயமாக கூற முடியும் ?

என்னை பொறுத்த வரையில் வெறும் அறிவுப்பு இருந்தால் போதும் சேருபவர்கள் தானாக சேருவார்கள் .


நம்மாலும் முடியும் ..!





Saturday, November 15, 2008

சுரேஷ்,

என்ன இது ஒருத்தரோட சத்ததயம் காணோம் ।

Are you all really busy or just avoiding the group.

Atleast, send some individual mails yaar.

Damu

Friday, October 24, 2008

கோள்.... சொல்ல விரும்பு !

யாருப்பா அது டீச்சர் கிட்ட கோள் சொல்லுறது.... நேரில பேசச் சொல்லுங்க ....இன்னும் ஸ்கூல் புத்தி விடல .

Saturday, October 11, 2008

காதலா.. காதலா ...

"நாற்பது வயதில் உலகத்தை நாசுக்கக்காக பார்க்க வேண்டும் " ("நாய் குணத்தோடு அல்ல")
One thing,envying your schooldays friend is not at all possible.. " வாழ்கையில் நெறைய
போட்டி போட்டாச்சு".. Become tired of running in the race.

இந்த உலகத்தில் எல்லோர் மீதும் காதல் ஏற்பட ஒரு காரணம் உண்டு.
காதல் அன்பை விட சிறந்தது.

அன்பு செலுத்தி பார் என்பார்கள் (பேச்சளவில்தான்).காதலில் தான்
உண்மையான வலி தெரியும்,அந்த வலி தான் இயற்கை.

தாயிடம் கற்பது ஒன்று, தந்தையிடம் கற்பது ஒன்று, ஆசானிடம் கற்பது ஒன்று,கடைசியில் கற்றுகொடுக்கும் நபர் இயற்கை தான்.

வலி கொடுத்து கற்று கொடுப்பது இயற்கை.

பிறப்பின் காரண காரியம் என்னவென்று கற்று கொடுப்பது இயற்கை.

உயர்வதும் தாழ்வதும் அவனவன் மேற்கொள்ளும் முயற்சி (an attempt) பொறுத்த விஷயம்.விருப்பம் பலவாக இருக்கலாம்.ஆனால் "KARMASANYAASAM" மிக முக்கியமானது.

போகின்ற பாதையில் வாகனம் பழுது அடைந்தாள் , நாம் கட்டாயமாக ஓர் இடத்தில் கிடத்தபடுகின்றோம் (forced to sit on a culvert or below neem/banyan/tamarind tree).
கட்டாய ஓய்வு . ( போதி மரத்துக்கு கீழ் இருப்பவன் எல்லாம் புத்தர் அல்ல.... அது வேற கதை ).
ரசிக்க, சிந்திக்க சில அவகாசங்கள். முடிவில் யாரையாவது அல்லது எதையாவுது காதலிக்க தோன்றும்.அது அந்த நேரத்தில் ஏற்படும் என்ன ஓட்டங்களை பொறுத்து.

அதேல்லாம் சரி முதல்ல நீ pointukku வா.. கேட்கிறது புரியுது.

காதலின் தாத்பர்யம் புரியாமல், விரும்பியவர்களின் மனதை புண்படுத்தி.சரி தவறு புரியாமல் கொள்கை என்ற பெயரில் என்னையே ஏமாற்றி ...all nonsense . பலபேரை காதலித்து, முடிவில் எனக்கு இதுதான் லாயக்கு என தீர்மானித்தது தற்போதைய வாழ்கை.

Too.. philosophical to say the truth.

Sorry guys, don't scold me.
-Damu



Wednesday, October 1, 2008

Teacher is absent

Guys,

Teacher not available.

Search him in the library. Probably scr...wng the librarian.

-Damu

Saturday, September 27, 2008

Where is this Duraiswamy?

Is he living in some other planet.
Without him,I can't attend the class

My dear Benchmate, where are U?

-Damu

Friday, September 26, 2008

திரு கிவியன் அவர்களுக்கு,

Sub: மௌனம்
ஏப்ரல் 19,2008 -எடின் பரொவ் நகர்வலம்


  • ஜ கே ரௌலிங்கைஃ பற்றி தெரியாத விஷயங்கள் பல அறிந்தேன். நன்றி
  • உச்சா போனாஅது என்ன ஜிக்கு ஷாக்கு . இது குறித்து என்னால் மிகுதியாக விமர்சனம் செய்ய இயலும் . ஆனால், வேண்டாம்.

துளசி தளம் & சின்ன அம்மணி - நல்ல எழுத்து நடை .

உங்கள் விசிறி வட்டத்தில் துளசி கோபால், கிரி,தமிழ் பையன் பார்த்தேன் . என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் .


Ref: நடந்தவை ,நடப்பவை -6, ஏப்ரல் 29, 2008

வந்தேன். ஏன் இதற்கு 3.50 பவுண்டுகள் என புரிந்தது. மிகப் பிரமாண்டம். கிட்டதட்ட நம்ம சிவாஜி "சஹானா பாடல் செட் மாதிரி". வெப்ப மண்டலம், மழைக்காடுகள், வரண்ட பகுதி, பாம் (palm) மரங்கள் என இந்த பூமி உருண்டையில் உள்ள அத்தனை சீதோஷ்ன நிலைகளையும் உள்ளடக்கிய பகுதிகள கொண்டது. கீழே உள்ள படம் மழைக்காட்டு பகுதியில் நுழைந்தபோது கண்ணாடியில் படியும் நீராவி எஃபெக்ட் மொபைலின் லென்சில் படிந்து அதனாலேயே அழகாக வந்த படம்.

  • நீங்கள் கூறிய கண்ணாடி மண்டபம் திரையில் பார்த்தபோது ,இன்னொரு முறை கல்யாணம் செய்ய தூண்டியது
  • நல்ல புகை படங்கள்
  • Daffoidal Flower (Red or Yellow one?)

மீண்டும் நன்றி, மீதி படித்து விமர்சித்தல் நன்று.

-தாமு