Showing posts with label VTN. Show all posts
Showing posts with label VTN. Show all posts

Monday, August 24, 2009

கடும் தண்டனை

வகுப்ப கட் அடிக்கரது, கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லாம இருக்கரது இதெல்லாம் இந்த பள்ளில ஏற்றுக்கொள்ள முடியாத ஒழுங்கீனங்கள்.

பதில் சொல்லாதவர்கள்:

பரத்வாஜ்
கண்ணன்
சத்யா
சங்கரி
முத்தையா
லலிதா
(தியாக)ராஜு

Let me tell you one thing, பதில் சொல்லலேன்னாலும் ஏன் பதில் சொல்ல முடியல என்று ஒரு விளக்கமாவது எழுத வேண்டும், உதாரணம்:

எழுத வந்தபோது கரண்ட் போயிடுச்சு

நெட் வொர்க் ஊத்திக்கிச்சு

எழுதி ஒரு கோப்புல (file) சேமிச்சு வெச்சிருந்தேன் அத காணோம்.

என் கம்ப்யூட்டர்ல ஒரு மாசமா வைரஸ் இருக்கரதால டாக்டர் கம்ப்யூட்டர் கிட்ட போக வேண்டாம்னு சொல்லீட்டாரு.

மெளஸ் ஓடி போயிடிச்சி இல்ல மெளஸ பூன திண்ணுடுச்சி

Let me tell you another thing

இது தவிர வகுப்புல சேர்ரதுக்கு அட்மிஷன் கார்டு அனுப்பிச்சும் இது வரை வந்து சேராதவர்கள் பட்டியல் நீளம்:

ஆஷா, செந்தில், ப்யுலா, துரை, ஸ்பர்ஜன், குரு, வித்யா, ரத்னவேல், சாமுவேல்..

இவிங்கள என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டிருக்கேன்..

Friday, March 20, 2009

வகுப்பறை மேம்பாடு

வெரி குட் வெரி குட், க்ளாஸ் லீடரா லெக்ஷ்சனமா ஏப்ரல்ல மீட்டிங்குன்னு கேள்விப்பட்டு ரொம்ப சந்தாஷம். போனா போகட்டும் யாரும் அதுவரைக்கும் பதிவு எழுதலலேன்னாலும் எக்ஸ்க்யுஸ் பண்ணிடறேன். ஆனா மீட்டிங்க்கு பின்னால ஒவ்வொருத்தரும் மாசம் ஒரு பதிவாவது எழுதியே ஆகனும்.

வகுப்புக்கு யாரு வந்தாங்கன்னு காமிக்க cluster map இணைக்கப்பட்டுள்ளது. அப்புறம் ரொம்ப நீளமா போகுதேன்னு listஆ இருந்த குறிச்சொற்க்களை (labels) குறிச்சொல்-மேகமாக்கியாச்சு (label cloud) அப்புறம் கீழ காப்புரிமையும் போட்டாச்சு, விஷயத்த யாரும் சுட்டுரக்கூடாதுன்னு. (யாருப்பா அது, இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரிலன்னு.. மொன மொனக்ரது)

ஆக அப்பப்ப இதுமாதிரி எதாவது புதுசா இருக்கான்னு பாக்கவாவது க்ளாசுக்கு வாங்க மக்களே!

Friday, February 27, 2009

User guide-2

மக்களே,

நான் எதிர்பார்த்ததை விட இந்த தளம் மிகவும் நன்றாகவே இயங்கிக்கொண்டிருக்கிறது. (கண்ணு பட்டுர போவுது, உள்ளுர் மக்கா யாராவது உச்சினி மாகாளியம்மன் கோவில்ல சுத்திப் போடடுங்கடே)

நீங்க பதிவு எழுதிய பின், post editor windowவின் கீழ் வலது பக்கம் உள்ள Lablesல் (கீழே படத்தில் உள்ளபடி)




உங்கள் பெயரை கொடுத்தால் பலவிதங்கள்ல் உபயோகப்படும். ஒரு நபரோ அல்லது ஒரு தொடுப்பு வார்த்தை, உதா: கவிதை, சம்பதப்பட்ட பதிவுகளை மட்டும் தேட முடியும். ஏற்கனவே சிலரின் பெயரை கொடுத்துள்ளேன். விட்டுப்போனவர்கள் தங்களின் எல்லாப் பதிவுகளிலும் பெயரை கொடுக்கவும்.

பழைய பதிவுகளில் label கொடுத்தபின் publish பொத்தானை சொடுக்கவும். ஒன்றுக்கு மேற்பட்ட லேபில்களும் கொடுக்கலாம் உதாரணம்:

VTN,அனுபவம்,பயணம்

சந்தேகம் இருந்தால் (இல்லாவிட்டாலும்) பின்னூட்டமிடவும்.


பிகு: தமிழில் எழுத ஈகலப்பையை போலவே NHMன் இந்த மென்பொருள் மிகவும் சுலபமானது, முயன்று பார்க்கவும்.

Friday, February 20, 2009

நமது பள்ளியின் படம்

மாணவ(வி)களே

தளத்தின் வலது புறம் மதுரை ஆண்டாள்புரத்தில் உள்ள நமது பள்ளியின் படத்தை இணைத்துள்ளேன். இது விக்கிமேப்பியாவின் மூலம் கிடைத்தது. மிகவும் சுவாரசியமான தளம். நமது பள்ளிப் படத்தின் மீது க்ளிக்கி பார்க்கவும்.

உங்கள் வீடு மதுரையில், இல்லை வேறு எங்கிருந்தாலும் அதனை கூட கட்டம் போட்டு விக்க்மேப்பியாவில் இணைக்கமுடியும். செய்து பார்க்கவும்.

Wednesday, February 18, 2009

ஆக வகுப்பு தலைவர் வந்த பின்

Very good Very good. வகுப்புக்கு தலைவர் வந்த பின் மற்ற எல்லோரும் விரைவில் வந்து சேர்வார்கள் என நம்புகிறேன்.

சில தகவல் பறிமாற்றங்களை yaahoogroupல் இடாமல் இந்த தள பதிவு பின்னூட்டத்தில் இட்டால நமக்கு பின்னே வந்து சேரப்போகும் நண்பர்களுக்கு கடந்து போனவைகளை படிக்க வசதியாக இருக்கும் இதுவே ப்ளாகின் மிகப்பெரும் வசதி/பலம். புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.

யாரோ goood girl என்று அநாமதேயமாக நம் வகுப்பில் பின்னூட்டம் விட்டு, வயசாயிட்டதால சரியா பாக்காம அத அனுமதிச்சுட்டேன். அது ஏதோ பலான தளத்துக்கு விடும் தூண்டில், நம் வகுப்பு மாணவியாக இருக்கும் என நினைத்தது தவறு. ஆக this matter is as such omitted.

நம்மில் ஒருவர் மாதம் ஒரு பதிவாவது எழுத அழைக்கலாம் என என்னுகிறேன்.அவரவர் அனுபங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம், உங்கள் கருந்து என்ன சொல்லுங்கப்பா?

Tuesday, January 27, 2009

நற்செய்தி

இந்த தளத்தின் உபயோகர் பெயரை மறந்து தொலைத்துவிட்டேன். ஆனால் இன்று பாருங்கள் தீடீரென்று ஞாபகம் வந்துவிட்டதால்..வயசாயிடுச்சு பாருங்கோ!

ஆக வகுப்பு தொடரும்..

அது யாருப்பா புதுசா இருக்கே வகுப்புல? ..gooood girlங்கறது யாரு?

Friday, October 24, 2008

வகுப்பறை பற்றி

வகுப்பறையுன் புதிய உறுப்பினர் குமார முத்தையாவுக்கு வாழ்த்துக்கள்.

இன்னும் சிலர் வகுப்புக்கு வராம "கட்" அடிப்பதை கடுமையாக கண்டிக்கிறேன்.

இந்த வாகுப்பறையில் நான் ஒன்றும் கூறப்போவது இல்லை. இது நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் அனுபவங்களை, எண்ணங்களை இங்கே பகிர்ந்துகொண்டால்தான் இது நடக்கும். புரிஞ்சிந்தா?

Thursday, September 25, 2008

Warning!!

It appears some of the people never attend this class regularly. If it happens again, I warn those who "cut" my class will be excluded and omitted from memory.

Order

VTN

Class teacher 10 Std C /Asst HM

Tuesday, September 23, 2008

இது நம் வகுப்பறை

ஒவ்வொரு புதிய நண்பர்கள் வந்து சேரும் போதும் மீண்டும் மீண்டும் நம்மை அறிமுகப்படுத்துவது கடினம். ஆகவே இந்த பதிவில் நாம் எழுதிவைத்தால் புதிதாய் வந்து சேருபவர்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

உங்களைப் பற்றி, உங்கள் அனுபவம் பற்றி, நீங்கள் எடுத்த புகைப்படம் என நீங்கள் இங்கே பகிந்து கொள்ளலாம். மொழி தடையில்லை ஆங்கிலம்/தமிழில் இருக்கலாம் (அதுக்காக தெலுங்கு, கன்னடம் ஹிந்தின்னு இறங்கிரப்பிடாது).

வாருங்கள் இந்த இடம் உங்களுடையது.