Showing posts with label Srisnake. Show all posts
Showing posts with label Srisnake. Show all posts

Sunday, October 17, 2010

யானைக்கும் அடி (முட்டி) சறுக்கும்!!

சென்ற மாதம், முதுமலை புலிகள் சரணாலய எல்லைக்குள் ஒரு காட்டு யானைக்கு நடந்த கொடுமை!! சீகூர் வனப்பகுதியில் , இடது கால் முட்டியில் சீழ் பிடித்த புண்ணுடன் ஓர் ஆண் யானை நடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. வனத்துறை, தேர்ச்சி பெற்ற யானைகளை கொண்டு அதனை கட்டுப்படுத்தி, சிகிழ்ச்சை அளிக்க முயற்சித்தது. சிகிழ்ச்சை பலனின்றி அந்த காட்டு யானை, பரிதாபமாக இறந்தது.










பிரேத பரிசோதனையில், கால் முட்டி எலும்புகள் துகள்கள் ஆகி இருந்தது தெரிய வந்தது. அது, துப்பாக்கியால் சுடப்படிருக்கலாம். விவசாய கட்டுக்கள் உணவுக்காக வரும் காட்டு யானைகளை விஷமி விவசாயிகள் இவ்வாறு சிறு (உடனே கொல்லும் வலிமை இல்லாத) துப்பாக்கிகளால் சுடுவது வழக்கம். இதன் 'பயன்கள்' என்னவென்றால்,

1. சுடப்பட்ட யானை, உடனே சாவதில்லை. அதனால் விவசாயிக்கு பிரச்னை குறைவு.
2. சுடப்பட்ட யானை இறந்தாலும், அது பல மயில்களுக்கு அப்பால் நிகழும்
3. சுடப்பட்ட யானை பிழைத்தாலும் அது மீண்டும் அந்த தோட்டத்துக்கு வராது




என்ன கொடுமை சரவணா!! நெஞ்சு பொறுக்குதில்லையே!




Monday, May 31, 2010

தென்னிந்திய ஏககால யானை கணக்கெடுப்பு அனுபவங்கள்



மே 15, 16 தேதிகளில் நடந்தது. காட்டில் சுமார் 5 சதுர கி. மி. பரப்பில் எத்தனை யானைகள் உள்ளன என்று ஒவ்வொரு குழுவும் நடந்து சென்று கணக்கு எடுக்க வேண்டும். முதல் நாளே எழுதி வாங்கிக்கொள்கிறார்கள், யானை மிதித்து சட்னியானால் வனத்துறை பொறுப்பல்ல என்று!!

எங்களுக்கு, முதுமலை புலிகள் சரணாலய சரகத்தில் வரும், கேரளா ஓரத்தில் உள்ள sector 37 ஒதுக்கப்பட்டது.




மிக அருமையான அனுபவம்!! நடுக்காட்டில் உள்ள 'ஜோடிபாலம்' 'வேட்டையாடல் தடுப்பு மையத்தில்' (anti-poaching camp) இரண்டு நாட்கள் வாசம்!! சுற்றி அடர்ந்த காடு. இரவு யானைகள் உள்ளே வராமல் தடுக்க ஏழு அடி அகழி.

இரவு வெளியே 'torch' அடித்தால் மின்னும் மான்களின் கண்கள்!! நாகரிக சௌகரியங்கள் ஒண்ணுமே (மின்சாரம், toilet) கிடையாது. பெரும்பாலான கைப்பேசி சேவைகளின் தொடர்புக்கு வெளிய!! அங்கேயே புளிசாதம் சமைத்து பொட்டலம் கட்டி கொடுக்கிறார்கள். காலை 6.30 மணிக்கு நடை ஆரம்பம்...


காலனிகளிலும், காலுறை (!!??) socks இலும் KAS ரத்தினம் பட்டணம் பொடி தாராளமாய் தூவி கொண்டு புறப்படுகிறோம் (ஏன்னு அப்புறம் சொல்றேன்) !! கூட Dr. வெங்கி (வெங்கடரமணன்), திரு. காலன் (வனக்காவலர்) மற்றும் திரு. மாறன் (பழங்குடி) . நடந்தோம், நடந்தோம், காட்டின் ஓரத்துக்கே நடந்தோம். 'என்னடா இங்கேயும் வந்திட்டிங்க " என்று சலித்துக்கொண்டு மான்கள் கூட்டம் ஓடியது. திடீர்னு திரு. காலன் கையை உயர்த்தி நிற்க சைகை செய்கிறார்...."யானைகள்! 50 மீட்டர் தூரத்தில்..நம்மை முகர்ந்து கொண்டிருக்கு!! சுற்றி வரலாம்". அந்த இடத்தை சுற்றி, காற்று நம்மிடம் வருமாறு (down wind) மாறி நடந்தோம்.


எங்கள் வாசம் (நாற்றம் என்று யானை சொல்லுமோ?) போனவுடன், ஒரு தாய் யானையும், இரண்டு குட்டிகளும், கட்டை விட்டு வெளியே வந்து, புல் தரையில் மேய தொடங்கியது. கணக்கு ஆரம்பம்!! கொஞ்ச தூரம் சென்றதும் காட்டில் 'machine gun' சத்தம் அரட்டியது (துர்ரடுர்ரடுராடுர்ற)!!. திரு. காலன் "பயப்பட வேண்டாம். மர அணில், நம்மை கண்ட பயத்தில் கத்துகிறது"....அப்பாடா!!



சாயங்காலம் 4.30 மணி வரை சுமார் 18 கி. மி. நடந்தோம்....10 யானைகள் கணக்கில் சேர்த்து!! கடைசியாய் பார்த்தது ஒரு 'ஒற்றை கொம்பன்' (ஒரு கொம்பு உள்ளது அல்ல! தனியாய் வலம் வரும் ஆண் யானை!!)...

மிக 'danger party' என்று முதல் நாளே சொல்லி இருந்தார்கள். எங்களை பார்த்ததும் தலையை சிலுப்பி எங்களை நோக்கி இரண்டு அடி நடந்தது...பின் உஷாராய் மேய தொடங்கியது. எனக்கு பரவாயில்லை...ரத்தம் 'taste' சரியில்லையோ என்னமோ....அட்டை கடி கம்மிதான்!! பாவம் Dr. வெங்கி!! ஒரு முழு பாக்கெட் மூக்கு பொடி கொட்டியும் கூட, அட்டைகள் போட்டு சாத்தி விட்டது!!




இரண்டாம் நாள், 'line transect' என்ற கணக்கு முறையில் , இரண்டு கி. மி. தூர கயிற்றின் இரு பக்கமும் உள்ள யானை சாணியின் அளவுகள் கொண்டு ஒரு காட்டில் உள்ள யானை அடர்த்தியை (elephant density) ஐ ஒரு 'algorithm' கொண்டு கணக்கிட்டோம். மதியத்திற்கு மேல், "base camp' சென்று 'data sheet' ஒப்படைத்தோம்!! என்ன ஒரே குறை...புலி, சிறுத்தை தென்படவில்லை...புதியதாக பதியப்பட்ட புலி கால் தடம் பார்த்த திருப்தி!! ராஜநாகம் உள்ள காடு...ஒரு நீர்க்கோலி கூட கண்ணில் படலே!!




In my opinion, you should also participate in this exercise as a volunteer at least once...a nice, great way to detox your mind!!

Sureshன் கேள்விகளும் என் பதில்களும்:
1. இந்த யானை கணக்கெடுப்பை வீ.இ.மு., வீ.இ.பி. என பிரிக்கலாமா?

அதாவது வீரப்பன் இறப்பதற்கு முன்னும், பின்னும்? நிச்சயமாக.....நாங்கள் பார்த்த ஒற்றை கொம்பன் சின்ன வயசு யானை...சமீப காலமாகத்தான் இவற்றை பார்க்க முடிகிறது....

2. யானை புல் மேயுமா? கொஞ்சம் பெரிய சைஸ் புல் மட்டும்தான் முடியும்னு நெனக்கிறேன்

என்ன இப்படி கேட்டுட்டே!! யானையால் மிக மிக மெல்லிசான புல்லையும் லாவகமாகப் பறித்து, நிதானமாக மண்ணை தட்டி சாப்பிட முடியும்!! ஒரு மரத்தை சாய்க்கும் தும்பிகையாலே 25 பைசா நாணயத்தை எடுத்து, அதற்காக ஒரு கும்பிடு போட முடியும்!!

3. மூக்கு பொடிக்கு இப்படி ஒரு உபயோகமா? ரத்தத்தில் சக்கரை சாஸ்த்தியா இருந்தா அட்டை விழுந்து புடுங்கும்னு காட்டெரும சரித்திரத்தில் படிச்ச ஞாபகம் ஒரு வேள அதுனாலயோ?
ஹையா!! எனக்கு சர்க்கரை வியாதி இல்லை!!

4. Synchronizeக்கு ஒருங்கிணைக்கப்பட்ட சரியில்லை. சமகாலம் அல்லது ஏககாலம் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கும்.
ஒருங்கிணைப்பு என்பது United/ Union, combined, conjugated, cooperative போன்றவற்றுக்கு சரியாக இருக்கும்.
socks - காலுறை (ஆணுறை போல) கால்குழல் இல்லை.
algorithm- நெறிமுறை அல்லது வழிமுறை.
நன்றி...நன்றி ....corrections made!!

5.நம்மக்கு தெரிஞ்சது சோடாகோலிதான் அது என்ன நீர்கோலி? சற்று படம் போட்டு விவரிக்க முடியுமா?
தண்ணிப்பாம்பை செல்லமா நீர்க்கொலின்னு சொல்வாங்க!!
அட ஆமா இல்லே!! படம் போட மறந்திட்டேன்!!

Sunday, September 13, 2009

Spama

மக்களே ....TVSHSS தொகுப்பு மெயில் லே ரொம்பவே விவகாரமான spams எனக்கு வருது. உங்களுக்கு எப்படி? உதாரணத்துக்கு சில...
To: 1@yahoo.com; tvshss1982batch@ yahoogroups. com
Sent: Monday, 24 August, 2009 7:12:07
Subject: [tvshss1982batch] You've been taken for a ride by suria_repunzel8

From: Melissa Stenger
To: 3@yahoo.com; tvshss1982batch@ yahoogroups. com
Sent: Thursday, 27 August, 2009 15:45:31
Subject: [tvshss1982batch] I sent you a gift.

கொஞ்சம் உஷாராவே mails open பண்ணுங்க!!

Saturday, August 1, 2009

கடவுளே!!

கடவுள் பற்றிய கேள்வி, மற்றும் அதனால் எழுந்த விவாதங்கள் அருமை!! நானும் என் பங்குக்கு சொதப்பலாம்னு இருக்கேன்!!ஜெயந்தியின் பதிவிற்கு சுரேஷின் பதில்களுக்கு என் 'ஷொட்டு '!! என் பதிவு ஒரு வகையான குறிக்கோள் இல்லாத, 'சத்தமான சிந்தனைகள்'.....
கேள்வியில் சொல்லப்படாதது 'கடவுள்' என்றால் என்ன என்பது. தோராயமாக கடவுளை இப்படி சொல்லலாமா?

1. கிரீடம் மற்றும் ஆபரணங்கள் அணிந்து அசத்தலாய் இருப்பார்
2. வானமண்டலத்தில் எங்கோ சஞ்சரித்திருப்பார்...கோவிலிலும் இருப்பார்
3. பூஜை புனஸ்காரம் செய்தால் ஏற்று மகிழ்வார்...பலன் தருவார்
4. மேல்கண்ட பூஜைகளை தவறாய் செய்தால் கோபிப்பார் (தெய்வ குற்றம்?)
5. எலி, புலி முதலான மிருகங்கள் மேல் பயணிப்பார்
6. நம்மை கண்காணித்து, நாம் செய்யும் நல்லது கெட்டதுகளை கணக்கு வைத்து கடைசி காலத்தில் கணக்கு தீர்ப்பார்
7. மந்திரம் தந்திரம் செய்யும் வலிமை உடையவர்
8. எல்லாவற்றுக்கும் மேலான ஒரு சக்தி
9. நீர், நிலம், காற்று, இத்யாதி இத்யாதி அவர்தான்

இங்கு கடவுளை நம்புபவர் என்று கூறுபவர் யாவரும் 'நான் அவரை 8, மற்றும் 9 ஆகத்தான் பார்க்கிறேன் என்று சத்தியம் செய்தாலும், ஒன்று முதல் ஏழு வரையிலான 'கடவுள் விஷயங்களில்' மறைமுகமாக நம்பிக்கை வைத்திருப்பார்கள் (without sounding judgmental!)....வீட்டில் பூஜை அறை இருக்கும்....அதில் பலவித சாமி படங்கள் இருக்கும்....அவற்றிற்கு பூஜைகள் நடக்கும்!
ஐந்தாம் வகுப்பில், என்னுடைய கிறித்துவ வாத்தியார் "எப்படியடா குரங்கில் இருந்து மனிதன் வரும்? எங்காவது கேட்டிருக்கிறாயா குரங்கு வளர்ந்து சுப்ரமணியன் ஆனான் என்று?" என்று கேட்டபோது, கையை தட்டி ஆர்பரிதிருக்கிறேன்...அன்று! இன்று என்னுடன் கால்நடை மருத்துவம் படித்த டாக்டர்கள் பலரும் அதே வாதத்தை முன் வைக்கும் பொது, பரிணாம வளர்ச்சி என்பதன் அர்த்தத்தை புரிந்து கொள்வதில் உள்ள கஷ்டம் என்ன என்பது தெரிகிறது. மூலக்கூறு உயிரியல் (Molecular biology) படித்த யாரும் எளிதில் சொல்வார்கள்...மனிதனுக்கும், சிம்பன்சிக்கும், சில்வண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் ஒரு வகையில் மேலோட்டம் ஆனதாகும். நமது அணுவுக்கும், ஒரு பூண்டின் அணுவுக்கும் உள்ளே உள்ள 'வீடு காக்கும் சுரப்புகளின்' (அப்படிப்போடு!!) (House keeping enzymes) அடிப்படையான மரபியல் கைஎழுத்து (DNA sequence) அப்படி ஒன்றும் வித்யாசமானது இல்லை!! ஒரு செடியின் சுரப்புகளை ஆட்டின் மடியில் சுரக்கும் பாலில் வரச்செய்ய முடியும்!! ஒரு செடியை பால் 'கறக்க' செய்யவும் முடியும்....உயிர்தொழில்நுட்பத்தல்!!என்ன சொல்ல வருகிறேன் என்றால்....உயிருள்ளவை யாவுமே ஒரே 'blueprint' இல் உருவானவை ..அது மனிதனாகட்டும், கொசுவாகட்டும்!! ஓரணு உயிரில் இருந்து மனிதன் உருவானதற்கு ஆதாரங்கள் ஏராளம். பரிணாம வளர்ச்சி பற்றி ஆணித்தரமான (irrefutable and unequivocal) ஆதாரங்கள் இருந்தும், இன்னும் கடவுள் தான் படைத்தார் என்று மொட்டை வாதங்கள்!! இதில் கொடுமை என்னவென்றால், மூலக்கூறு உயிரியல் மற்றும் paleontological ஆதாரங்களை தவறான மேற்க்கோள் காட்டி, கடவுள் இருப்பதற்கு ஆதாரமாக பேசுவது ஆத்திகர்களின் வழக்கம் ஆகிவிட்டது. உதாரணம்- குப்பை மரபமிலம் (junk DNA) பற்றிய சர்ச்சை!! ....
http://video.google.com/videoplay?docid=3052574599084753240 மற்றும்
http://www.godandscience.org/evolution/junkdna.html
...கொடுமையடா கடவுளே!!
ஆத்திக வாதம் 'நம்பிக்கை' யை அஸ்திவாரமாகக் கொண்டது. "கடவுள் இருக்கிறார். நான் நம்புகிறேன்" அவ்வளவுதான்!! நாத்திகனின் பொறுப்போ ரொம்ப ஜாஸ்தி....ஆத்திகனின் கேள்விகளுக்கு பதில் சொல்லணும்....அதுவும் எந்த மாதிரி கேள்விகள்? "அதுக்கப்புறம்?" அதுக்கும் அப்புறம்? அதுக்கு முன்னாடி?" இவ்வளவுதான்!! அதாவது, ஒரு கேள்விக்கு திருப்த்தியான பதில் கொடுத்து விட்டால், உடனே "அதுக்கப்புறம்?" அல்லது "அதுக்கும் முன்னே?" என்பதுதான் கேள்வியாக இருக்கும்!! பண்டைய நாத்திகனுக்கு சூரிய கிரிகனத்திர்க்கு சரியான பதில் இல்லைதான்!! ராகு, கேது, பாம்பு கதைகளை ஆத்திகன் விடும் பொது, கேட்டுத்தான் ஆக வேண்டும் என்ற தலை விதி!! இன்று அப்படியில்லை! ஆகவே அறிவியலுக்கு அனைத்தையும் விளக்கும் தன்மை உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை!!இன்று கிடைக்காமல் போகலாம்.....நாளை கட்டாயமாக பதில் கிடைக்கும்!! Science IS God!!!
"கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். அவர் எனக்கு இன்னின்னது கொடுத்தார்' என்பது எத்தனை கொச்சையான கூற்று? ஸ்துதி செய்தால் பலன் தருவது கடவுள் செயலா? இல்லையே! கடவுள், உங்கள் பிரார்த்தனையை கேட்டு, உங்களை விட திறமை சாலிக்கு கொடுக்காமல்,உங்களுக்கு ஒரு promotion கொடுத்தால் அதை விட அநியாயம் உண்டா?அதற்க்கு அந்த பிரார்த்தனையை என் மேலதிகாரிக்கு செய்தால் இன்னும் பலன் கிடைக்குமே? ஏன் உங்கள் திறமையினால் வந்த பலன் என்று கூற மாட்டீர்கிறீர்கள்? நான் கடலூர் அருகே குள்ளஞ்சாவடி என்னும் கிராமத்தில் கால்நடை மருத்துவனாக சிலகாலம் பணி செய்தேன். காலை மணி எட்டு முதல் மலை ஐந்து வரை மருந்தகத்தில் தான் கிடப்பேன் ! இன்னும் சொல்லப்போனால் வன்னியர் சங்க போராட்ட காலத்தில் பேருந்துகள் ஓடாத நாட்களில் பதினெட்டு கிமி சைக்கிளில்மூச்சு வாங்க மிதித்து செல்வேன். என்னுடைய அருகாமையில் இருந்த மருந்தகத்தில் என் கல்லூரித்தோழன்....கடவுள் பக்தன்!! நோன்புக்க்காகவும், பிரர்த்தனைக்க்காகவும் மருந்தகத்தை மூடி கோவில் செல்வான்.அவனுடைய வாதம்-கடவுள் பிரார்த்தனை செய்தால் போதும்...நேரத்தில் கால்நடை மருந்தகம் வந்து மக்களுக்கு பணி செய்வதை விட அது புண்ணியம் தேடி தரும் என்பது!! எவ்வளவு குதர்க்கம்?
கண்ணன் 'stem cell therapy' பற்றி சொன்னான்!! இதைப் பற்றி செந்தில் விளக்கினால் இன்னும் பொருத்தமாக இருக்கும். சுருக்கமாக சொன்னால், கருவில் ஒரு அணுவில் இருந்து, பல வித்தியாசமான அணுக்கள் கொண்ட உயிர் உருவாகிறது. முதலில் தோன்றும் அணுக்கள் பல்முனைத்திரன் (pluripotency) கொண்டவை. அவை சிறப்பு நிலை (specialized) அணுக்களாக (அதாவது, மூளை அணு-neuron, தசை அணு-myocyte, மற்றும் பல ) மாறுகின்றன. சிறப்பு நிலை அடைந்த பின் அவை அவ்வளவாக பெருகுவதில்லை (limited or no cell division). அதனால் மூளை அணு இறந்தால் அம்போ தான் (நாம் ஒவ்வொரு நிமிஷமுன் பலஆயிரம் மூளை அணுக்களை இழக்கிறோம் என்பது வேறு விஷயம்!!) ஆனால் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது களையப்படும் நச்சு (placenta...what an irony that the medium that transfers nutrition and oxygen to the fetus is termed as 'poison' in Tamil!!) மற்றும் தொப்புள் கொடியில் பல்முனைத்திரன் கொண்ட stem cells பல வீணாகின்றன. அதை பத்திரப்படுத்தி வைத்தால் பிற்க்கலத்தில் அந்த குழந்தை வளர்ந்த பின் சில நோய்களுக்கு அந்த அணுக்களை உபயோகப்படுத்தலாம். (அந்த வகை அணுக்களை ஏற்றுக்கொள்ளும் பிறருக்கும் உபயோகப்படும்). Adult stem cell-சற்றேறக்குறைய இது போலத்தான்...ஆனால் பெரியவர்களின் (அதாவது adults!) கொழுப்பு அணுக்கள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படுகிறது. ஆனால் ஆத்திகவாதிகள் இதில் மரபு மீறல் (ethical considerations) உள்ளது என்று கூக்குரல் இடுகிறார்கள்!! இவர்கள் தொல்லை தாங்காமல் அரசும் ஆராய்ச்சியாளர்களுக்கு பல கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள்....ஆராய்ச்சி முடங்கும் அளவிற்கு!!
"அவனின்றி அமையாது உலகு" என்பார்கள்!! இப்போது அவனால் உலகம் அழியும் அளவிற்கு ஆகிவிட்டது! இன்று உலகைப் பிடித்து ஆட்டும் பிரச்சனைகள் யாவுமே கடவுள்அடிப்படயாகக் கொண்டது!! என் மதம் பெரியதா, உன் மதம் பெரியதா? என்பது தான்!! பாலஸ்த்தீனம், கொசவோ, ஜின்ஜியாங், கிழக்கு திமோர், அயர்லாந்து காஷ்மீர்....இங்கெல்லாம் மக்கள் கடவுளால் மாக்கள் ஆகிவிட்டார்கள்!! மற்ற காரணங்களால் எழும் பிரச்னைகள் முடிவுக்கு வந்து விடுகின்றன. ஆனால் இது தீருவது ரொம்ப சிரமம் ......ஏனென்றால் சிலர்க்கு கடவுள் பக்திக்கும் கடவுள் வெறிக்கும் நூலிழை வித்தியாசம் தான் என்றாகி விட்டது!!
கடவுளை மற! மனிதனை நினை! என்பது எவ்வளவு மேன்மையானது?
(பி. கு.) நான் முன்னமே விண்ணப்பித்து பெற்ற முன் ஜாமீன் இன்னும் நடப்பில் உள்ளது என்றும், இப்போது ஊட்டியில் செம மழை....அடிக்க வர சரியான நேரம் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்!!!
......இன்னும் வரலாம்!!

Saturday, July 25, 2009

'felling' mistake

Would it be possible to change the spelling of Attend'e'nce to Attend'a'nce' in the Vagupparai page?

Thursday, July 23, 2009

ஸ்ரீகுமாரின்- பத்து

1. சமீபத்தில் எப்போது மன்னிப்பு (sorry) கேட்டாய்? இல்லை கேட்டிருக்கலாம் என்று பின்பு தோன்றிய சம்பவம்?

மேடவாக்கம் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் ஒரு நாள் செல்லும்போது ஒரு கார் மிக அருகில் வந்து ஒலிப்பானை அடித்து 'வெட்டி' திரும்பி சென்றது..வந்தது கோபம்! விரட்டி சென்று அடுத்த சிக்னலில் கார் சன்னல் அருகே சென்று "என்ன காரில் போகிற திமிரா?" என்று எகிறினேன். டிரைவர் பொறுமையாக சொன்னார் "உங்கள் வண்டியில் இருந்து பை விழபோகிறது என்று சைகைசெய்தேனே" என்று. திரும்பி பார்த்தேன்..விழுந்தே போயிருந்தது!! மன்னிப்பு கேட்கவே கூச்சமாக இருந்தது!!

2. தேர்தலில் ஓட்டு போட்டது உண்டா? இல்லை என்றால் ஏன் போடவில்லை என்று விளக்க முடியுமா? அப்படி ஓட்டு போடாத போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நீங்கள் விமர்சிப்பது சரியா?

இந்த முறை தவிர....திடீர் இடமாற்றத்தினால் ஊட்டி சென்றதால்! பேர் இல்லாமலோ, வேறு யாராவது ஓட்டு போட்டதாலோ சந்தர்ப்பம் கிடைக்காமல் போன ஒரு ஜீவன்!!

3. கடவுள் நம்பிக்கை உண்டா?

இல்லவே இல்லை!! உலகில் ஏற்ப்படும் நிகழ்வுகள் எல்லாவற்றையும் இரண்டாகப் பிரிக்கலாம்....ஒன்று..அறிவியல் விளக்கம் அறியப்பட்டது, இரண்டு.அறிவியல் விளக்கம் இன்னும் அறியப்படாதது!! தலை கருத்தை நான் இப்படிப் பார்க்கிறேன்...கடவுள் இருப்பதாக நினைப்பதால்தான் பலர் தவறு செய்கிறார்கள்...மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம் என்ற நினைப்பில். Crusades காலத்தில், catholics சிலர் தாங்கள் வரும் நாட்களில் செய்யவிருக்கும் கொலைகளுக்கும், கற்பழிப்புகளுக்கும் , முந்தைய நாளே கடவுளிடம் பாவ மன்னிப்பு கேட்டு விடுவார்களாம். பி. கு.கடவுள் பக்தர்கள் யாரையும் புண்படுத்தும் எண்ணம் அறவே இல்லை...anticipatory மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்!!

4. வழகத்திகலிருந்து மாறுபட்டு எப்போதாவது எதையாவது புதிதாக முயற்சித்தது உண்டா?

ம்ம்ம்ம்.... இல்லை.....வழக்கமே (ஆராய்ச்சியும், publications) கொஞ்ச நாளாக செய்வதில்லை....நீதி மன்றம், தகவல் பெரும் உரிமை சட்டம் என்று திசை திரும்பியதால்!! இனிமேல் (இப்போது உள்ள) வழக்கத்துக்கு மாறாக மீண்டும் 'வழக்கத்தை' கடை பிடிக்கலாம் என்றுஇருக்கிறேன்!!

5. சமீபத்தில் எதாவது விளையாட்டில் (வீட்டுக்கு வெளியே) ஈடுபட்டது உண்டா? இல்லை என்றால் ஏன் விளையாட தோண்றவில்லை என்று யோசித்தது உண்டா?

ஆண்டவன் புண்ணியத்தில் (??!!) இப்பொழுதும் cricket ஆடுகிறேன்!! சென்ற மாதம் கூட ரெண்டு match ஆடினேன்...ஓடினேன்!!

6. கடைசியாக அழுதது எப்போது இல்லை மனம்விட்டு சிரித்தது??

அழுதது..(மனது கனத்தது) இன்று காலை....Coonoor அருகே யானை ஒன்று இறந்தது என்று அழைக்கப்பட்டேன். செங்குத்தான மலையிலும் யானை மிக லாகவமாக, ஒரு நடனக்கரியின் நளினத்துடன் கால் பிசகாமல் ஏறும். ஒரு தாய் யானை, தன் இரண்டு மாத குட்டி கால் சருக்கிய்தல் அதைக் காப்பற்ற பதறி ஓடி மலையில் இருந்து விழுந்து பரிதாபமாக இறந்தது!! கால் தவறிய குட்டி பாறை இடுக்கில் சிக்கி பிழைத்தது! அந்த பெண் யானையின் பிண பரிசோதனையை நான் அந்த இடத்திலேயே செய்தேன்....அது என்ன 'நினைத்திருக்கும்' தன் குட்டியை காப்பாற்ற ஓடி, தவறி விழுந்த அந்த நேரத்தில்? பாவம்...பாவம்...

சிரித்தது......அண்மையில் 11c மாணவர்கள் சந்திப்பில் Ramesh மற்றும் தினகர் அடித்த லூட்டியால்!!

௭. என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள், இல்லை கடைசியாக படித்தது (பேப்பர்னு சொல்ல கூடாது)??

Paulo Coelho வின் 'The zahir' என்றும், என் மனைவி 'ehsaas' என்ற புனைப்பெயரில் 'வலையில்' எழுதும் கவிதைகள் என்றும் சொல்ல ஆசை. அனால் இல்லை!! இரண்டையுமே என் மனைவி எனக்கு படித்து சொல்வாள்...கேட்டுக் கொள்வேன். தற்பொழுது, பிரிவு 80 சிவில் procedure code படித்துக் கொண்டிருக்கிறேன் (Paper இல்லையே இது!!)

8.உங்களுக்கு ஏதாவது தனி திறமை இருக்கிறதா??

எல்லாரையும் எப்படியாவது எரிச்சல் அடைய செய்து விடுவேன்.....ஒரு நாளைக்கு 20 டீ, 15 வாழைப்பழம் சாப்பிடுவேன் !! (சும்மாக்காட்டியும்)

9. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம் (அ) போக விரும்பும் இடம் (அ) வீட்டிலிருந்து அதிக தூரம சென்ற இடம்??

சந்தேகமில்லாமல் Muktheshwar (உத்திரப்ப் பிரதேசத்தில் கால்நடை நச்சுயிரியல் (virology) பரிசோதனைக்கூடம் இருக்கும் ஸ்தலம் ).
வீட்டிலிருந்து அதிக தூரம சென்ற இடம்...Racine, Wisconsin...நான் மூன்று வருடம் தங்கியிருந்த Laurel, Maryland ஐ விட என் (தற்பொழுதைய) வீட்டில் இருந்து அது தூரம்!!

10. வாழ்வில் சந்தோஷம் என்பது?

கெட்டது செய்யாமல் வாழ்பவருக்கு, கெட்டது செய்யாமல் வாழ்வது!!

Tuesday, June 9, 2009

சென்னை சந்திப்பு 19 ஏப்பிரல் 2009



”அட இதுதான் லேப்டாப்பா? ஆனா ஏன் மேசை மேல இருக்கு?



”ஹையா மதுரலேயும் இப்ப போத்தீஸ் வந்துடுச்சு”



”Twenty20 ல ஈndia ஏன் தோல்வி அடைந்ததுன்னு நான் சொல்றேன் ... we need players like Samuel to be included”




தல: ”இல்லங்க இது சும்மா நாங்க ஃப்ரெண்ட்ஸ் மீட்டிங்தான் கிரிகெட் பெட்டிங் எல்லாம் இல்லீங்க”


சத்யா: “எல்லாரும் அமைதியா இருங்கப்பா. தல பேசிட்டு இருக்காருல்ல. தினத்தந்தி, மாலை மலர்லேருந்து ரிப்போர்ட்டர்ஸ் வராங்க. போட்டோ கண்டிப்பா உண்டு”




”போஜா என்னையா வச்சு ஒன்ணும் comedy கீமடி பண்ணலையே ”



”ச்சே இந்த பசங்க எல்லாரும் 10th class படிக்கிற மாதிரி இருகாங்க ... நம்ம எல்லாரும் 10th class எடுக்குற மாதிரி ஆயிட்டோம்”



”நா என்ன சொல்றேன்னா விஜய் மனச மாத்தரதுக்குள்ள அவர வெச்சு கட்சி ஆரம்பிச்சுடனும்”

Finally got around to post some of the snaps taken ...

Tuesday, March 3, 2009

அன்றும் இன்றும்!!






கிவியா!! (Difficult to write Sure'sh') எனக்கும் அதே பிரச்சனை!! சின்ன வயசு போட்டோ இல்லை!! இது BVSc கல்லூரி முதல் வருடம்.....மற்றது போன வருடம்!!!

Saturday, February 28, 2009

More snakes!

I must have caught more than a hundred cobras! They are very docile creatures......real darlings.Got bitten once though, due to my carelessness and had to take a whole course of antivenin.

That is me, taking a class on cobra handling to PG students, on the terrace of
my hostel at the Indian Veterinary Research Institute, UP, where I was doing my Ph.D.!!




Patting a cobra's hood like a pet puppy might sound incredible, but I can make YOU do it, if you place your trust on me!! Game anybody?

Wednesday, February 25, 2009

The 'snake' in me!!



My name 'sreesnake' appears to be generating a lot of interest (fear?)!! Just to clarify, I have carried a little further my fascination with snakes from my school days (i don't know if any of u remember the day when I brought a small snake to class) to the more the venomous ones and work for their conservation.....translocating them form 'potentially dangerous places' like homes and other human habitations. So..if any snakes around ...call me!! A sample photo....thats my daughter with a big one....there are more of them in my orkut site.

Tuesday, February 24, 2009

Mappin magimai!!

'உன்னுடைய Wikipedia Map என்னை மிகவும் பாதித்தது' உண்மையில்!! இந்த மைதானத்தில், இங்கே கிரிகெட் விளையாடினோம்...(சீனிவாசன்கள்..V, lefty and giant....எங்கேயோ?).... இந்த முற்றத்தில்தான் செருப்பை கையில் பிடித்துக்கொண்டு ஓடி (அனந்தபத்பனாபனோ, அரவிந்தோ விரட்டிக்கொண்டு வந்தான்!!!!) மகாதேவன் சார் மேல் மோதி, திட்டு வாங்கி.....மறக்கமுடியுமா!!!!

Thursday, February 19, 2009

லெச்சு, சத்யா!! வருக! வருக!(அப்பாடா!!தமிழில் முதல் வரி!!). Yesterday called up Sathya. Great feelingto get in touch with him after a long time. I had bumped into Lakshmanan a coouple of times, the last time being in US Consulate I guess!! Good that the crowd is swelling....should meet up soon!!

Wednesday, October 1, 2008

We met!!

It was a great feeling meeting up with Damu after a lllooonnnngggg time...what...25 years almost! Only that I will have to insist that Damu show up a photo of his from school days...changed so much. Then we talked a bunch about 'fruit stories' (pazhankathai) and really enjoyed it. Actually we (Damu and I) were supposed to drop in on Kumar Muthiah who, again lives a stone's throw away from my place, today. As it didn't work out, I paid a visit to Damu's place with my kids....and spent the evening there. I see that there are options here to add photos....will remember that for the next meet.Looking forward to meeting up with the rest of the gang.

Friday, September 26, 2008

I am here!!

Finally..got to figure out what this VTN blog thing is. Will visit the class regularly henceforth.Bye