Wednesday, February 25, 2009

பள்ளி கட்டிடம்

எனக்கு டி.வி.எஸ் பள்ளி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது டி.வி.எஸ் நகரில் இருக்கும் (இப்பொழுது டி.வி.எஸ் லெக்ஷ்மி ஆக்கிரமித்திருக்கும்)அந்த இடம்தான். எவ்வளவு பெரிய இடம்ல. play ground ரொம்ப பெரிசு. அதை games period ல 3 round சுத்தனும்ல. அப்படி ஒரு நாள் games period முடிஞ்சு வந்து க்ளாஸ்ல பானையில் தண்ணி தேடி, இல்லாமல் கத்தி, AN கிட்ட மாட்டி அவர் கோபித்துக்கொண்டு (no water, no brain ha ha என்று பெரியதாக உறுமி எல்லோரையும் பயமுறுத்தி (!!!) விட்டு) சிறிது நாட்கள் வரை க்ளாஸுக்கு வெளியில் இருந்தே பாடம் எடுத்தார். (உள்ள வந்து எடுத்தா மட்டும் புரிஞ்சுடற மாதிரி).

அங்கு மரங்கள் அதிகம். ரொம்ப ரம்மியமாக இருக்கும். அப்புறம் table tennis இருந்த ஹாலில் ஒரு தரி போட்டு இருக்கும். craft master (பெயர் மறந்து விட்டது joseph ஆ)
எப்பொழுதும் தூங்கிக் கொண்டே டக் டக் என்று ஏதோ நெய்து கொண்டிருப்பார்.

3 comments:

கிவியன் said...

Joseph சரிதான்,

no water no brain நடந்த சம்பவம் வேறு, பட்டப்படைகிர வெய்யிலில் வகுப்பை விட்டு வெளியே அழத்துச்சென்று, ப்ராக்டிகலாக பூகோள வகுப்பு எடுக்கிறேன் பேர்விழி என்று,perennial river seasonal riverக்கும் உள்ள வித்தாசத்தை புரியவைக்க மண்னை குவித்து, பாட்டில் தண்ணீரை ஊற்றி what is the difference between ganges and vaigai rivers என்று கடைசியில் கேட்ட கேள்விக்கு யாரோ (??) sir there is water in ganges and no water in vaigai என்று இப்போது இருக்கும் நிலையை கூற, AN மஹா கடுப்பாகி, அப்போது உறுமியாது "no water no brain"...

இப்போது பதிவுக்கு சம்பந்தமில்லாது:

மூன்று வருட தேடலில் இப்போது இந்த தளத்தில்11 பேர் ஒன்று கூடியிருக்கிறோம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது திடீரென்று தோன்றிய ஒரு உத்வேகத்தில் துவங்கியது.

ஆனால் இப்போது நமது பள்ளியின் சாதாரண படம் கூட ஒவ்வொருவரின் ஞாபகங்களையும் கிளறிவிட்டு, மிகச்சுவையான் நிகழ்வுகளை இங்கே காண முடிவது, மிகவும் சந்தோஷமாக உள்ளது.

உள்ளூர்வாசிகள் Aitel, bsnl வகையரா அவ்வப்போது அள்ளி விடும் சேவை வழியாக தொடர்பு கொள்ளமுடியும். எங்களைப் போன்ற nriக்களுக்கு ப்ளாக் ஒரு வரப்பிரசாதம், நம் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள, தொடரட்டும் பதிவுகள்.

Siva said...

I could never forget that TVS nagar campus. Studine 6 to 9 th in that building ( TVSHSS) and then +2in TVSLMHSS. The craft hall has many memories for me. It is where the normal General Knowledge class was held. A person by name Ramanathan used to teach it. He used to each History/Geopgraphy for us in 8th Std.

ஜெயந்தி நாராயணன் said...

சுரேஷ்

நீ சொல்லும் சம்பவம் எனக்கு நினைவில் இல்லை. boys க்கு மட்டும் தனியா AN க்ளாஸ் எடுத்தாரா. தெரியவில்லை.