Tuesday, March 3, 2009

நானாக நான் இல்லை

என்ன கொடும லெக்ஷ்மனா?

நம் வகுப்பு படம் ஒன்று கூட எடுக்காமல் போச்சே? இப்ப நம்ம குழந்தங்க என்னடான்னா வருசா வருசம் வகுப்பு படம் எடுக்க சொல்லி டாண்னு காசு கேட்டு அனுப்பிர்றாய்ங்க. ஆனா இது எவ்வளவு முக்கியம்னு இப்ப தோனுது.

ம்ம்.. இப்ப எங்கிருந்து அந்த கடந்த போன முகத்தை கொண்டுவருவது?என்னிடம் ஒரு பஸ் பாஸ் போட்டோ கூட இல்லை. மதுரையில் வாடகைக்கு விடப்பட்டுள்ள எங்கள் வீட்டு சேந்தியில் கட்டி வைத்திருக்கும் பெட்டியில் இருக்கக்கூடும். அங்கு எப்போது போவது?

இப்ப இருக்கறது, கண்கள் உள்ளடங்கி, முடிகள் ரிசவர்ஸ் கியர் போட்டு (தாமு கோவிக்க கூடாது) சருமத்தில் சுருக்கங்கள் தோன்ற ஆரம்பித்துவிட்ட முகம்..இதோ இங்கே..



நான் அவன் இல்லேன்னு சொல்ற மாதிரி இருக்கு, யாருக்காவது இந்த முகம் ஞாபகமிருக்கா?

சத்தியா தொடங்கி வாச்சான், நல்ல ஐடியாவா இருக்கு, ஆனா நம் வகுப்பு தோழிகள் இங்கே புகைப்படம் இடவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அது உங்கள் விருப்பம்.

4 comments:

தாமு said...

கோவிக்கிறதுக்கு என்ன இருக்கு. இப்ப போய் எங்க இல்லாதத காட்றது.

இந்த முகத்தையும் எங்க மறக்கறது . எனக்கு பின்னால உக்காந்துகிட்டு நீயும் கைபாவும் (தியாகராஜன்) கண்ணை உருட்டி மிரட்டினது மறக்கவில்லை (சின்ன பசங்க !) . இன்னைக்கும் அந்த கண்ணை வச்சுகிட்டு மிரட்ரியா நீ.?

ஜெயந்தி நாராயணன் said...

ம்ஹூம்ம் சத்தியமாக நினைவில் இல்லை.

Lakshmanan said...

hey எனக்கு ஞாபகம் இருகப்பா உன் மூஞ்சி .... அட நீ தானா அவென் (read like Vaigai puyal Vadivelu)

Rema G.L said...

Sorry

I just cant remember you at all. May be you look very different from your younger days. Try putting up some old photo.