Friday, March 13, 2009

" அஹம் ப்ரஹ்மாஸ்மி"

நேற்று நான் கடவுள் பார்த்தேன். பிச்சைக்காரர்களின் அவலம் மனதை மிகவும் பாதித்தது. ஒரு வகையில் நாம் ஓரளவு வசதியாக இருப்பது ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது.
"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிதுஅதிலும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது"
இவ்வளவு விதம் விதமாக ஊனமுடையவர்கள் இருப்பதை பார்த்து மனம் பாரமானது. ஊனத்தை பிச்சைக்காக exploit பண்ணுவது எவ்வளவு கொடுமை. பிச்சை எடுப்பதற்காக போடப் படும் முருகர், சிவன், பார்வதி வேஷம் கண் கலங்க வைத்து விட்டது.
சின்ன வயதில் சொல்லப்பட்ட, பூச்சாண்டி, பிள்ள பிடிக்கறவனை திரையில் பார்த்ததில் அப்ப இல்லாத பயம் இப்ப வந்தது.
நல்லவர் கெட்டவரை அடையாளம் கண்டு கொள்ளும் அகோரர்கள் நம் மக்களிடையே நடமாடினால்??......
வாழக் கூடாதவர்களுக்கான தண்டனை மற்றும் வாழ இயலாதவர்களுக்கான மோக்ஷம் (கிட்டத்தட்ட கருணைக் கொலை) வழங்கப்பட்டால் மக்கள் தொகை கணிசமாக குறைந்து விடும்.
மொத்தத்துல i was totally disturbed. expolitation of weaker section முகத்தில் அறையற மாதிரி சொல்லப் பட்டிருக்கிறது.

3 comments:

தாமு said...

படத்தின் முடிவு விவாதத்திற்கு உட்பட்டது . உன்னுடைய புரிதலை தெளிவுபடித்திவிட்டாய் .

"சூப்பர் போ ! "

கிவியன் said...

//பிச்சை எடுப்பதற்காக போடப் படும் முருகர், சிவன், பார்வதி வேஷம் கண் கலங்க வைத்து விட்டது.// ஏன் நான் கும்பிடும் முருகனே இப்படி பிச்சை எடுக்கறாரேன்னா?

படம் பார்த்தபின் பலரும் I was disturbed என்று சொல்வதுதான் பாலாவின் வெற்றி. வில்லு மாதிரி படமெடுக்க கோடம்பாக்கத்தில் அயிரக் கணக்கில் ஆள் இருக்கிறது, ஆனால் நான் கடவுள் மாதிரி படமெடுக்க பாலா மட்டும்தான் இருக்கார். இவரோட உதவி இயக்குனர்களா இருந்த அமீரின் பருத்திவீரனும், சசிகுமாரின் சுப்பிரமணியபுரமும் தமிழ் சினிமாவின் மைல்கல்கள் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

Siva said...

இந்த நான் கடவுள் படம் பார்த்தே ஆகவேண்டும். நண்பர்கள் மூலம் DVD தேடும் படலம் ஆரம்பித்து உள்ளேன். பார்த்து விட்டு சொலேறேங்கோ ..