சமீபத்தில் நான் கடவுள் படம் பார்த்தேன். அதில் போலீஸ் ஸ்டேஷன் சீனில், சிவாஜி “ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்” என்ற பாடுவார். இந்த பாடல் எப்போது கேட்டாலும் எனக்கு நான் ஏழாவதோ எட்டாவதோ படிக்கும் போது, அப்போது மதுரையில் ஓடிய வேல்முருகன் ட்ரான்ஸ்போர்ட் கம்பெனி முதலாளியின் வாரிசு வேல்முருகன், மூக்கு குத்தியிருப்பான், நமக்கெல்லாம் சீனியர் செய்த கலாய்த்தல்தான் ஞாபகத்துக்கு வரும்.
ஒரு நாள் மதிய இடைவேளை போது, தமிழய்யா சங்கரன், ஸ்டாஃப் ரூமிலிருந்து ப்ளாஸ்க்குடன் வெளியே வந்து கைப்பிடி சுவற்றில் அதன் மூடியை வைத்து டம்பளரில் காப்பியை ஊற்றிக்கொண்டிருந்த போது, அந்த பக்கம் வந்த வேல்முருகன் என்ன தோன்றியது என தெரியவில்லை, அந்த ப்ளாஸ் மூடியை எடுத்துக்கொண்டு,
”ஐய்யா எனக்கும் கொஞ்சம்” என நீட்டினான், இதுவே கொஞ்சம் லொள்ளுதான், ஆனால்
சங்கரன் வாத்தியார் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்  சிரித்துவிட்டு போனால் போகட்டும் என்றி காப்பியை ஊற்ற, வேல்முருகன் இன்னும் கொஞ்சம் ஓவராக போய்,
”ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ஏன் ஏன் ஏன்” என பாட ஆரம்பித்தபோதுதான், கோபப்பட்டே பார்க்காத சங்கரன் வாத்தியாரை அன்றுதான் மிக ரெளத்திரமாகப் பார்த்தேன், சாது மிரண்டால் போல. ஆனால் என்ன செய்வதென்று தெரியாமல் முறைத்து விட்டு ஸ்டாஃப் ரூமுக்குள் சென்றுவிட்டார். ஆனால் எப்போது இந்த பாட்டு கேட்டாலும் சங்கரன் தான் நினைவுக்கு வருகிறார். 
பிகு: தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட, போஜராசா, ப்யுலா, சங்கரி, ஆஷா அழைப்பும் அனுப்பியும் இன்னும் வந்து ஏன் சேரவில்லை என வகுப்பில் இருக்கும் எல்லோரும் மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு இந்த தளத்தில் சேர்வதற்கு ஏதேனும் தயக்கமிருந்தால் தனி அஞ்சலில் தெரிவிக்கவும், இல்லை தொழில்நுட்ப சந்தேகமிருந்தால் இங்குள்ள எவரையும் தொடர்புகொள்ளலாம், உதவ காத்துக்கொண்டிருக்கிறோம். நட்புக்கு கைய கொடுங்கப்பா... 
            நட்பென்பதேயல்லாமல் வேறொன்றறியோம் பராபரமே
 
 
9 comments:
இது தாமுவின் பின்னூட்டம்:
நான் கடவுள் படித்தில் நல்ல விஷயம் நெறைய இருக்கும் போது தத்தாரி தனமா இருக்குற ஒரு விஷயத்தை உதாரணம் காட்றியே நைனா. "நான் கடவுள்" a class movie. " அஹம் ப்ரஹ்மாஸ்மி". வாரனாசியையும் அங்கிருக்கும் ஹரிச்சந்திர காட் பார்க்கும்போது (இளையராஜா இசையுடன்) கண்ணில் நீர் கட்டி விடும். எங்கிருந்து பிடிச்சாங்கன்னு தெரியல அந்த தாண்டவன் கேரக்டர் .மிரட்டிட்டான்.
Bala did a good home work
ஏதோ செய்ய போய் மேலே உள்ள தாமுவின் comment காணாமல் போய்விட்டது. நல்லவேளை இன்னுமொரு சன்னலில் இருந்ததால், அதை அப்படியே கட் பேஸ்ட் செய்து இட்டுள்ளேன்.
தாமு, என்னவென்று சொல்வது? நான் எழுதியதற்கும் ”நான் கடவுளுக்கும்” எந்த தொடர்பும் இல்லை, அந்த பாட்டைத் தவிர
நண்பரே கோவிக்க வேண்டாம். நான் கடவுள் பார்த்த impact இரண்டு நாள் வரை இருந்தது .அதன் தாக்கத்தின் வெளிப்பாடு தான் இது.
மற்றபடி இது documentry subject போல இருக்கும். நல்லா என் பொண்டாட்டி கிட்ட வாங்கி கட்டிகிட்டேன் .இதில் இருக்கும் violence பெண்களுக்கு புரியுமா ( பிடிக்குமா அல்ல) என்பது தெரியவில்லை.
என்னால் இன்னும் சங்கரன் ஐயா முகத்தை நினைவில் கொண்டுவர இயலவில்லை . இன்னொரு விவரம் யாராவது சமஸ்க்ரிதம் எடுத்தவரின் பெயரை கூற இயலுமா ?. சங்கரரின் முகம் எனக்கு அவரை போலவே தோன்றுகிறது . நல்ல சிவந்த நிறம் ,நெற்றியில் திருநீறும் குங்குமமும் இட்டு கொஞ்சம் சௌராஷ்ட்ர களையுடன் இருப்பார் .(கையில் எப்போதும் ஒரு holder bag இருக்கும்)
தாமு,
//இதில் இருக்கும் violence பெண்களுக்கு புரியுமா// வெளங்கலயே? ஆண்களுக்கு மட்டும் புரியர violence அப்படீன்னு ஒண்ணு இருக்கா என்ன? பார்வையாளர்களுக்கு ’நான் கடவுள்’ படத்தை எப்படி எதிர்கொள்வது என்பதில் சிக்கல் உள்ளது. அதாவது நிராகரிக்கவும் முடியவில்லை பாராட்டாமல் இருக்கவும் முடியவில்லை. நான் நான்கு முறை பார்த்தாயிற்று ஓவ்வொரு முறையும் ஒவ்வொரு புரிதல்கள்.
எனக்கு தெரிந்து பத்தாவது வரை நாம் தமிழ்தான் படித்தோம். அது உனக்கு சம்ஸ்கிருதம் போல் இருந்தால் ரொம்ப ஸாரி, :-0)).
மேலும் பதிவில் நான் குறிப்பிட்டுள்ள சம்பவம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஏன் என்றால் சம்பவம் நடந்த போது நானும் இன்னும் சிலரும் (துரைசாமி என நினைக்கிறேன்) அங்கிருந்தோம். ஆனால் வேல்முருகனை எல்லோருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.
Hey
the master who took Sanskrit for us in 11th & 12 is Mr. Kailasanathan. As said rightly he will be very fair and had a feminine look
நன்றி ரமா , கிவியனக்கு பத்துக்கு பிறகு பள்ளியில் வாழ்க்கை முறை மறந்து விட்டது என நினைக்கிறேன்.
நான் இன்னும் நான் கடுவள் படம் பார்க்கவில்லை. நீங்கள் பேசுவதை பார்த்தல் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்
Hi friends this is Thiagarajan from Madurai who was a student of the gr8 TVS school from 1979-1984.I remember all guys vasan samuel N.suresh(my elementary school mate how can i forget him?barathwaj sivakumar duraisamy gurudutt kannan s.kannan lakshmanan sathayaraj kumar muthiah and among girls sankari is my childhood friend then rema vinayaka sundari padma lalitha charlotte and many more.i wish to be a part of this forum i dont know who is the moderator can u plz accept my request?i dont know this kiviyan can u plz tell me who is this kiviyan?
This is Thiagarajan from Madurai/Chennai who studied along with you all during 1978-1984.I have sent a request to include me in this list.I think the moderator of this group has to approve.yaruppa andha moderator.Kannan spoke to me 3 days back from his office.I spoke to vasan the same day.I think soon the OWNER of this group notice my request.
Post a Comment