Tuesday, March 24, 2009

தெற்க்கத்திப் பொண்ணு

நம்ம ப்ரபாவுடன் பேசினேன். அப்பா என்ன ஒரு மதுரை slang . live ஆ பாரதிராஜா படம் பார்த்த ஃபீலிங். உங்களுக்காக நான் ரசித்த எங்க உரையாடலில் ஒரு பகுதி.
"என்ன ப்ரபா டீச்சரா இருக்கியாமே. எந்த க்ளாஸுக்கு?"

"ஒம்பதாவது, பத்தாவது. இங்கலீஸ் தான். நமக்கு அதானே வரும் . பி.ஏ லிட்ரச்சர் படிச்சென்.இங்க ஒன்ற வருஷம் ஆச்சு வேல கிடச்சு. தமிள் மீடியத்துக்கு இங்கலீஸ். எப்படி இருக்கும் பாத்துக்க. நாம பண்ணின வேலய நம்ம கிட்டயே காமிக்கராய்ங்க. ஆமா உனக்கு எத்தன பிள்ளெங்க?"

" ரெண்டு. பொண்ணு 9th படிக்கறா. பையன் 5th படிக்கறான். "

"என்னப்பா எல்லாரும் பெரிய பெரிய பிள்ளெங்களா வச்சுரிக்கீங்க. எனக்கு ஒரு பொண்ணுதா இப்பொதா 5வது படிக்கறா. பரவால்ல மெட்ராஸ் போனா கூட நல்லா நம்ம மதுர தமிள் அளகா பேசற ."

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

"என்ன ப்ரபா குடை எடுத்துண்டு மயிலு மாதிரிதான் ஸ்கூலுக்கு போறியா?"

1 comment:

கிவியன் said...

//இங்கலீஸ் தான். நமக்கு அதானே வரும்// ஆஹா டீச்சர்னா இப்டில்ல இருக்கனும். ப்ரபா என்றாலே டீச்சர்தான் போலிருக்கு?

//”என்ன ப்ரபா குடை எடுத்துண்டு மயிலு மாதிரிதான் ஸ்கூலுக்கு போறியா?" // :-)))