Wednesday, April 22, 2009

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! ! !

எப்படி தொடங்குவதென்பதே தெரியவில்லை. அத்தனை இன்பமாக இருந்தது . நம்மோடு படித்தவர்கள் எல்லாம் மிக்க நல்ல நிலைமையில் இருப்பதை அறிய ஒரு சந்தர்ப்பமாகவே நான் இந்த சந்திப்பை நினைத்தேன். முதல் 2 மணிநேரம் வெறும் அரட்டையில் கழிந்தது . 27 வருட இடைவெளியை தீர்க்க வேண்டாமா? அதன்ப்பின் நம்ம NRI களுடன் சிறிது பேச முடிந்தது மிக்க மகிழ்ச்சியே!.

அடுத்த ஒருமணிநேரம் போனதே தெரியவில்லை. இந்த 27 வருடத்தில் (அதாவது நாம் 10 ஆவது முடித்தப்பின்) யார் யார் என்ன செய்தோம், இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை அறிய ஒரு நல்ல மேடையானது.

அதன்பின் எல்லோருமாக உணவருந்தியது கூடுதல் சந்தோஷம் ஏன்னெனில் நாம் படிக்கும்போது கூட இப்படி சேர்ந்து சாப்பிட வாய்ப்பு கிடைத்ததில்லை. (கிடைத்திருந்தாலும் அதை அனுபவிதிருப்போமா என்பது கேள்விக்குறியே).
உணவு வேளைக்குபின் நாம் பகிர்ந்து கொண்டது ஒரு சுவாரஸ்யம் . சிலரது அனுபவங்கள், எதிர்கொண்ட சவால்கள் எல்லாம் நாம் எல்லோரும் அறிய ஒரு வாய்ப்பு மேடை . குறிப்பாக ஸ்பர்ஜன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் என்னை மிகவும் சிந்திக்கவைத்தது. எப்படி இருந்த நாம் எப்படி ஆகிவிட்டோம் என்று ஆச்சர்யப்பட வைத்து.

நான் தாமு, லெச்சு, ஜெயந்தி நால்வரும் முன்பே போனில் பேசியதுபோல் நமது புதிய கூட்டணி எதாவது ஒரு நல்ல காரியம் செய்யவேண்டும் என்ற கருத்தையொட்டி இந்தவருடம் நம்மால் முடிந்தளவு பள்ளிசெல்லும் குழந்தைகளுக்கு books & Notebooks வழங்கலாம் என்றுள்ளோம். இந்த விஷயம் எல்லோராலும் ஏற்கப்பட்டது என்றே நான் நினைக்கிறேன். யாரால் என்ன முடிந்ததோ அந்தாளவு funds குடுக்கலாம். ( NRIs please note this). லக்ஷ்மணன் சொன்னபடி ஒரு charity account open செய்தபின் இந்த பணி தொடரும்.

மேகுரிய விஷயங்களுடன் நம் மீட்டிங் முடிந்தது. இதில் என்ன விசேஷம் என்றால் நமது XC அல்லாத நால்வர் இதில் கலந்து கொண்டது. நாம் படிக்கும் நாட்களில்கூட இத்தனை ஒற்றுமையாக இருந்தோமா என்பது எனக்கு ஞாபகம் இல்லை.

என்னவோ போ ! மொத்தத்தில் நாம் டைரியில் குறிக்கவேண்டிய ஒரு முக்கியமான நாளாகிவிட்டது இந்த ஏப்ரல் 19th. இந்த வாய்ப்பை அமைத்து குடுத்த லெச்சு, தாமு, சத்யராஜுக்கு என் உளமார்ந்த நன்றிகள். நனது இந்த சந்திப்பு ஒரு நல்ல வாய்ப்புக்கு அடிகோலாக இருக்கும் என்று கருதுகிறேன். A special thanks to Lakshman for the space, patience and arrangements. புதிய XC க்கு Three Cheers போடலாமே!. Hippip Hurray ! Hippip Hurray ! Hippip Hurray.

Once Again thank you all of you to make this possible.

2 comments:

கிவியன் said...

விரிவான பதிவுக்கு நன்றி ரேமா.

//நாம் படிக்கும்போது கூட இப்படி சேர்ந்து சாப்பிட வாய்ப்பு கிடைத்ததில்லை// மிகவும் சரி, ஒரு சுற்றுலா கூட போனதில்லை, சே!.

//பள்ளிசெல்லும் பொருளாதார நிலையில்பின் தங்கிய குழந்தைகளுக்கு books & Notebooks வழங்கலாம்// நல்ல ஏற்பாடு செய்யலாம். நான் ஏற்கனவே இந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

//NRIs please note this// ம்ம் குறித்துக்கொண்டோம்.

பிகு:
உன் பதிவு காணமல் போய்விட்டது என ஜெயந்தி ஒரு அஞ்சல் அனுப்பியிருந்தாள். அதுக்கு பதில் போட நேரமில்லாததால் இந்த பின்னூட்டதிலேயே அதற்கும் சேர்த்து பதில்.

VTNன் நீக்கிவிட்டாரோ என சந்தேகம் வேறு. இப்படி நடந்திருக்கலாம், பதிவு எழுதிய பின் publish பொத்தானை க்ளிக்கினால் எழுதிய பக்கம் blogல் பதியப் படும். பின்பு மறுபடி login செய்து ஏதாவது பிழை திருத்தம் செய்த பின் மறதியாக save பொத்தானை க்ளிக்கினால் பதிவு காணமல் போய் draft ஆக சேமிக்க படும். அநேகமாக இப்படி நடந்திருக்கலாம்.

வகுப்பறையின் உறுப்பினர் யார் எழுதும் பதிவையும் நீக்க மாட்டார் VTN, அது மிகவும் கீழ்த்தரமாக இல்லாத வரைக்கும், உத்தரவாதம்.

தாமு said...

//இந்தவருடம் நம்மால் முடிந்தளவு பள்ளிசெல்லும் குழந்தைகளுக்கு books & Notebooks வழங்கலாம் என்றுள்ளோம்.//. இதை எப்படி ஆரம்பிப்பது என்று முழித்து கொண்டு இருந்தேன் ,நல்ல வேளை நீ ஆரம்பித்து விட்டாய். மிக்க நன்றி .

பார்போம் எத்தனை தூரம் இதை செயல் படத்த முடிகிறது என்று