1. சமீபத்தில் எப்போது மன்னிப்பு (sorry) கேட்டாய்? இல்லை கேட்டிருக்கலாம் என்று பின்பு தோன்றிய சம்பவம்?
மேடவாக்கம் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் ஒரு நாள் செல்லும்போது ஒரு கார் மிக அருகில் வந்து ஒலிப்பானை அடித்து 'வெட்டி' திரும்பி சென்றது..வந்தது கோபம்! விரட்டி சென்று அடுத்த சிக்னலில் கார் சன்னல் அருகே சென்று "என்ன காரில் போகிற திமிரா?" என்று எகிறினேன். டிரைவர் பொறுமையாக சொன்னார் "உங்கள் வண்டியில் இருந்து பை விழபோகிறது என்று சைகைசெய்தேனே" என்று. திரும்பி பார்த்தேன்..விழுந்தே போயிருந்தது!! மன்னிப்பு கேட்கவே கூச்சமாக இருந்தது!!
2. தேர்தலில் ஓட்டு போட்டது உண்டா? இல்லை என்றால் ஏன் போடவில்லை என்று விளக்க முடியுமா? அப்படி ஓட்டு போடாத போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நீங்கள் விமர்சிப்பது சரியா?
இந்த முறை தவிர....திடீர் இடமாற்றத்தினால் ஊட்டி சென்றதால்! பேர் இல்லாமலோ, வேறு யாராவது ஓட்டு போட்டதாலோ சந்தர்ப்பம் கிடைக்காமல் போன ஒரு ஜீவன்!!
3. கடவுள் நம்பிக்கை உண்டா?
இல்லவே இல்லை!! உலகில் ஏற்ப்படும் நிகழ்வுகள் எல்லாவற்றையும் இரண்டாகப் பிரிக்கலாம்....ஒன்று..அறிவியல் விளக்கம் அறியப்பட்டது, இரண்டு.அறிவியல் விளக்கம் இன்னும் அறியப்படாதது!! தலை கருத்தை நான் இப்படிப் பார்க்கிறேன்...கடவுள் இருப்பதாக நினைப்பதால்தான் பலர் தவறு செய்கிறார்கள்...மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம் என்ற நினைப்பில். Crusades காலத்தில், catholics சிலர் தாங்கள் வரும் நாட்களில் செய்யவிருக்கும் கொலைகளுக்கும், கற்பழிப்புகளுக்கும் , முந்தைய நாளே கடவுளிடம் பாவ மன்னிப்பு கேட்டு விடுவார்களாம். பி. கு.கடவுள் பக்தர்கள் யாரையும் புண்படுத்தும் எண்ணம் அறவே இல்லை...anticipatory மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்!!
4. வழகத்திகலிருந்து மாறுபட்டு எப்போதாவது எதையாவது புதிதாக முயற்சித்தது உண்டா?
ம்ம்ம்ம்.... இல்லை.....வழக்கமே (ஆராய்ச்சியும், publications) கொஞ்ச நாளாக செய்வதில்லை....நீதி மன்றம், தகவல் பெரும் உரிமை சட்டம் என்று திசை திரும்பியதால்!! இனிமேல் (இப்போது உள்ள) வழக்கத்துக்கு மாறாக மீண்டும் 'வழக்கத்தை' கடை பிடிக்கலாம் என்றுஇருக்கிறேன்!!
5. சமீபத்தில் எதாவது விளையாட்டில் (வீட்டுக்கு வெளியே) ஈடுபட்டது உண்டா? இல்லை என்றால் ஏன் விளையாட தோண்றவில்லை என்று யோசித்தது உண்டா?
ஆண்டவன் புண்ணியத்தில் (??!!) இப்பொழுதும் cricket ஆடுகிறேன்!! சென்ற மாதம் கூட ரெண்டு match ஆடினேன்...ஓடினேன்!!
6. கடைசியாக அழுதது எப்போது இல்லை மனம்விட்டு சிரித்தது??
அழுதது..(மனது கனத்தது) இன்று காலை....Coonoor அருகே யானை ஒன்று இறந்தது என்று அழைக்கப்பட்டேன். செங்குத்தான மலையிலும் யானை மிக லாகவமாக, ஒரு நடனக்கரியின் நளினத்துடன் கால் பிசகாமல் ஏறும். ஒரு தாய் யானை, தன் இரண்டு மாத குட்டி கால் சருக்கிய்தல் அதைக் காப்பற்ற பதறி ஓடி மலையில் இருந்து விழுந்து பரிதாபமாக இறந்தது!! கால் தவறிய குட்டி பாறை இடுக்கில் சிக்கி பிழைத்தது! அந்த பெண் யானையின் பிண பரிசோதனையை நான் அந்த இடத்திலேயே செய்தேன்....அது என்ன 'நினைத்திருக்கும்' தன் குட்டியை காப்பாற்ற ஓடி, தவறி விழுந்த அந்த நேரத்தில்? பாவம்...பாவம்...
சிரித்தது......அண்மையில் 11c மாணவர்கள் சந்திப்பில் Ramesh மற்றும் தினகர் அடித்த லூட்டியால்!!
௭. என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள், இல்லை கடைசியாக படித்தது (பேப்பர்னு சொல்ல கூடாது)??
Paulo Coelho வின் 'The zahir' என்றும், என் மனைவி 'ehsaas' என்ற புனைப்பெயரில் 'வலையில்' எழுதும் கவிதைகள் என்றும் சொல்ல ஆசை. அனால் இல்லை!! இரண்டையுமே என் மனைவி எனக்கு படித்து சொல்வாள்...கேட்டுக் கொள்வேன். தற்பொழுது, பிரிவு 80 சிவில் procedure code படித்துக் கொண்டிருக்கிறேன் (Paper இல்லையே இது!!)
8.உங்களுக்கு ஏதாவது தனி திறமை இருக்கிறதா??
எல்லாரையும் எப்படியாவது எரிச்சல் அடைய செய்து விடுவேன்.....ஒரு நாளைக்கு 20 டீ, 15 வாழைப்பழம் சாப்பிடுவேன் !! (சும்மாக்காட்டியும்)
9. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம் (அ) போக விரும்பும் இடம் (அ) வீட்டிலிருந்து அதிக தூரம சென்ற இடம்??
சந்தேகமில்லாமல் Muktheshwar (உத்திரப்ப் பிரதேசத்தில் கால்நடை நச்சுயிரியல் (virology) பரிசோதனைக்கூடம் இருக்கும் ஸ்தலம் ).
வீட்டிலிருந்து அதிக தூரம சென்ற இடம்...Racine, Wisconsin...நான் மூன்று வருடம் தங்கியிருந்த Laurel, Maryland ஐ விட என் (தற்பொழுதைய) வீட்டில் இருந்து அது தூரம்!!
10. வாழ்வில் சந்தோஷம் என்பது?
கெட்டது செய்யாமல் வாழ்பவருக்கு, கெட்டது செய்யாமல் வாழ்வது!!
6 comments:
ஷ்னேக்பாபு, முதலில் உன் அபாரமான தமிழுக்கு வாழ்த்துக்கள்.
Virology -நச்சுயிரியல் :)).
முதல் கேள்வியின் பதில் முறுக்கிய மீசையுடன் ஸ்ரீயை யோசித்துப்பார்த்தால் அப்படியே விஜய் பட சீன் மாதிரி இருந்தது, பின்னாடி இப்படி மீசைல மண் ஒட்டினா மாதிரி ஆகிருச்சேன்னுதான் வருத்தம்.
அது எப்படி ஆண்டவன் புண்ணியத்துல கிரிகெட் விளையாடுரது??
யானையின் கதி நினைத்து மனசு கனத்து போச்சு போ.
//ஒரு நடனக்கரியின் நளினத்துடன் கால் பிசகாமல் ஏறும். ஒரு தாய் யானை// விவரனை அற்புதம். கவித படிச்சு கேட்டு கேட்டு உனக்குள் ஒரு கவிஞன் எட்டிப்பார்கிறான். அதாவது என்ன சொல்ல வரேன்னா கம்பன் வீட்டு பக்கம் கட்டி போட்டிருந்த கழுதையும் ....வேண்டாம் சாமி ஆட்டோல ஆள் அனுப்பிர போராய்ங்க..
ஒரு நாளைக்கு 20டீ 15 வாழையா?? அப்புறம எப்படிப்பா மத்த வேலையெல்லாம் செய்ய டைம் கிடைக்குது??
//மன்னிப்பு கேட்கவே கூச்சமாக இருந்தது// இவ்வளவு முதிர்ச்சி அடைந்த ஸ்ரீகுமார், இன்னும் முதிர்ச்சி அடைய வேண்டுமோ?
warrant போடவில்லை, anticipatory மன்னிப்பு வழங்கப்பட்டது - அதோடு, இது அவரவர் கருத்து. Suresh is putting efforts to make us all write, and bring out a new talent in us to become writers. Thanks pa.
//ஒரு நாளைக்கு 20 டீ, 15 வாழைப்பழம் சாப்பிடுவேன் // ... செந்தில் நாயகன்!!! ஸ்ரீகுமாருக்கு ஏதேனும் சொல்லவும்
கெட்டது செய்பவருக்கு கெட்டது செய்வது, என்று பொருள் கொள்ளலாமா?
"தல ...கெட்டது செய்பவருக்கு கெட்டது செய்வது, என்று பொருள் கொள்ளலாமா?"
ஒரு வகையில் அப்படித்தான்!! இன்னா செய்வோருக்கு நன்மை செய்வது மடமை .....Pavlovian தத்துவத்தின் படி, நன்னயம் பதிலாகக் கிடைத்த செயலை (அதாவது இன்னவை!!) மறுபடி, மறுபடி செய்வார்கள்!! தெளிவாகக் குழப்பிட்டேனா?
சமீபத்தில் ஓர் கைப்பேசி நகைச்சுவை செய்தி வந்தது...."ஒருவன் உன் மேல் கல் எறிந்தால், நீ அவன் மேல் பூ ஏறி! அவன் மீண்டும் உன் மேல் கல் எறிந்தால், இம்முறை அவன் மேல் பூ தொட்டியையே ஏறி!! ஙொய்யாலெ..சாவட்டும்" ....சிரிப்பு வந்தது!!
"Kivian..அது எப்படி ஆண்டவன் புண்ணியத்துல கிரிகெட் விளையாடுரது??"
1.அவன் (அவள்? அது?) புண்ணியத்தில் இளசுகள் என்னை அணியில் எடுக்கனும். 2. அவன் (அவள்? அது?) புண்ணியத்தில், பந்தை பிடிக்க மனசு ஓடும் வேகத்தில் அரைப்பங்கிலாவது கால்கள் ஓட வேண்டும். அவன் 3.(அவள்? அது?) புண்ணியத்தில் தான் மறுநாள் படுக்கையில் இருந்து எழ தெம்பு வேண்டும்....எவ்வளவு இருக்கு?
அமோகமான பதில்கள். கடவுள் நம்பிக்கை பற்றிய பதில் என்னை மிகவும் கவர்தந்து.
Catholics மட்டுமல்ல உலக சமயங்கள் யாவும் இது மாதிரி ஏதாவது வழக்கம் உண்டு. ஏன் நம்ம ஊர் கோழி மற்றும் கெடா விடுவது போன்ற வழக்கங்கள் கூட இது மாதிரித்தான். நான் மதுரைல இருந்த சமயம் ஒரு நாள் அலங்கனல்லூர் ஜல்லி கட்டு பார்க்க போனேன். அப்போது ஜல்லிக்கட்டு ஆரம்பிக்கும் முன்னால் இதுமாதரி கோழி விட்டார்கள். இன்று யோசனை செய்யும் சமயம் நீ (ங்கள் ) சொன்னது போல் ஜல்லிக்கட்டு ஒரு பாவம் அதற்கு கோழி விட்டு அனுமதி கேட்பதை என்ன வென்று சொல்லுவது.
அதே சமயம் நம்மால் விளக்க மற்றும் புரிந்து கொள்ள முடியாத சில ( எனக்கு பல ) விஷயங்கள் அதில் கடுவுள் நம்பிக்கையும் ஒன்று நினைக்கறேன்.
இந்த பதில்கள் யாவும் வெகு நன்றாக உள்ளது.
Siva
ச்சே! ஜஸ்ட்லே மிஸ் ஆச்சு!! சின்ன வயசுலே படிச்ச Jim Corbett இன் "Man eaters of Kumaon" என்ற புத்தகத்தை ரொம்ப நாளா ரோட்டுக்கடைகளிலே தேடி கிடைக்கலே!! இன்னைக்கு கெடச்சுது!! அதனாலே ஏழாவது கேள்வியோட பதிலை மாற்றிக்கொள்கிறேன்....சரியா?
ஸ்ரீ
உன்னுடய தமிழ் அற்புதமாக இருக்கிறது. பாராட்டுகள். மலையாளத்திலும் இந்த தேர்ச்சி உண்டா?
Post a Comment