1. சமீபத்தில் எப்போது மன்னிப்பு (sorry) கேட்டாய்? இல்லை கேட்டிருக்கலாம் என்று பின்பு தோன்றிய சம்பவம்?
சமீபத்தில் அல்ல, சில வருடங்களுக்கு முன்பு.
40 பேர் ஊட்டிக்கு சுற்றுலா சென்றோம். நான் மற்றும் என்னுடன் பணியாற்றும் மூவர் தான் டூர் அமைப்பாளர்கள். காலை, மதிய உணவு மற்றும் snacks கொண்டு சென்றோம். இது கோவையில் நடந்தது. சுமார் 15 பெண்கள். (பின் குறிப்பு: கோவை பெண்கள் பற்றி கேட்க வேண்டியது இல்லை, அத்தனை அழகு). நன்றாக லூட்டி அடித்துக்கொண்டு டூர் இனிதாக சென்றது. பாட்டுக்கு பாட்டு நடத்தினோம்.
ஆனால் இத்தனை லூட்டியிலும் கலந்து கொள்ளாமல் இரண்டு பையன்களும் இரண்டு பெண்ணும் (நீங்கள் நினைப்பது, சரி தான் - ஜோடிப்புறாக்கள்) தனியாகவே இருந்தனர். எத்தனை முயற்சி எடுத்தும் அவர்கள் தங்கள் தனிக் கடலை பணியை விட சம்மதிக்கவில்லை. கிடைத்த வாய்ப்பை விட மனமில்லை அவர்களுக்கு. விட்டு விட்டோம்.
மதிய உணவு அருந்தும் போது அந்த நால்வரும், கொண்ட சென்ற packet வேண்டாம் என்று கூறினர். நாங்கள் இருந்த இடம் 7th mileஓ 9th mileஓ. அங்கு சிற்றுண்டி சாலை கிடையாது. அவர்கள் பட்டினி இருந்தன்ர். மற்றவர்கள், 'விடுங்கள் சார், பரவாயில்லை ... கடலை போதும் போல அவர்களுக்கு' என்று கூறி looseல விட்டோம். அங்கு பல போட்டிகள் நடத்தினோம். Those four did not join in any of the events. Lunch and the programmes started at 1pm and went on till 4pm and those four were starving.
It was 5pm when we came to the lake. அவர்கள் நால்வரும், உணவு அருந்த போவதாக கூறி சென்றன்ர். 6.30க்கு அனைவரும் வர வேண்டும் என்று சொல்லி, அனைவரையும் பிரிதது விட்டோம். (நானும் கடலை போட்டேன் என்பது வேறு கதை).
6.30, 6.45 - அனைவரும் வந்துவிட்டனர், அந்த நாலு பேர் மட்டும் வரவில்லை.
7.00, 7.15, 7.30 - அனைவரும் வந்த பின்பும், அந்த நால்வரையும் காணவில்லை. Mobile phone வராத காலம். அருகில் உள்ள சிற்றுண்டி சாலைகளில் எல்லாம் தேடியும் காணவில்லை. சில பெண்கள், 'சார், லேட் ஆகுது, வீட்டில் தேடுவர்கள்' என்று சிணுங்க ஆரம்பித்தனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அதில் ஒரு வயதான பெண்மணியும் இருந்தார் (50 வயதிருக்கும்). அவரும் 'Sir ஏதாவது செய்யுங்கள், அவர்கள் ஊருக்கு இந்நேரம் போயிருப்பார்கள், நமக்கு சும்மா நேரம் போகுது' என்று எனக்கு pressure கொடுத்தார்.
7.45, 8.00 - இன்னும் வரவில்லை. எனக்கு கோபம் busக்கு மேலே சென்றது (மூக்கு மற்றும் தலைக்கு மேலே என்ன சொல்ல, அதான் Busக்கு மேலே - அத்தனை கோபம் என்று பொருள், ஏன் கேட்குற உங்களுக்கே கோபம் வருது இல்ல - 6.30 to 8.00pm).
எடுத்தேன் ஒரு தடால் அடி முடிவு, 'Driver, start the bus'. Assumption here was, that those people would have gone back home.
But they had not gone home too. Coonoor சென்றவுடன், Police எங்களை நிறுத்தியது. அவர்கள் ஊட்டியில் போலீசில் புகார் செய்து, எங்களை நிறுத்தி விட்டனர். பின்பு அவர்கள் கோவை செல்லும் ஒரு busல் வந்தனர். வந்தவுடன் busல் இருந்து இறங்க மாட்டோம் என்று முரண்டு பிடித்தார்கள், பின்பு போலீஸ் வந்து அவர்களை இறங்க வைத்து எங்கள் பேருந்தில் ஏற்றினார்கள். வந்து ஏறியது முதல், ஒரே கெட்ட வார்த்தை மயம் தான் (total family damage மாதிரி தான் வசை). நாங்கள் அனைவரும் அமைதியாக இருந்தோம். சுமார் 11 மணிக்கு கோவை வந்து சேர்ந்தோம். ஒன்றும் பேசாமல் எல்லோரும் சென்று விட்டனர்.
அடுத்த நாள் அந்த நாலு பேரும் வந்து ஒரே ரகளை. நான் உள்ளே இருந்தேன். வெளியில் வந்து சமாதானம் செய்ய முயன்றேன், ஆனாலும் அவர்கள் கேட்பதாக இல்லை.
ஒரு பெண் கேட்ட கேள்வி என்னை நிலை குலைய வைத்தது. அவள் என்னிடம் 'Yesterday night, if the bus had come without me and my father was here to receive me, what you would have told him sir'. My goodness, I had no answers for that question and kept running a flash back of the previous night. அது வரை மன்னிப்பு கேட்காமல் இருந்த நான் (அவர்கள் அது வரை என்ன தான் தவறு செய்திருந்தாலும், விட்டு விட்டு வந்தது பெரிய குற்றம் என்று என் மனம் என்னிடம் கூறியதால்) அவர்களிடம் 'I sincerely apologize for this mistake' னு கூறினேன். ஆனால் அவர்கள் கோபம் குறையாததால் apology note ஒன்று notice boardல் போட்டேன். அதன் பின் தான் விஷயம் cool ஆகியது.
ஒரு நாள் முழுவதும் குற்றம் செய்து விட்டு, cycle gapல், அதனை திசை திருப்பி தங்கள் குற்றத்தை பற்றி மற்றவர்கள் comment அடிக்காதவாறு தப்பித்து விட்டனர். இருப்பினும், நான் மன்னிப்பு கேட்ட சம்பவங்களில் இது மனதை விட்டு அகலாத ஒன்று (இதில் வேடிக்கை என்னவென்றால், நான் தவரை உணர்ந்தேன், அவர்கள் உணரவில்லை!!).
2. தேர்தலில் ஓட்டு போட்டது உண்டா? இல்லை என்றால் ஏன் போடவில்லை என்று விளக்க முடியுமா? அப்படி ஓட்டு போடாத போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நீங்கள் விமர்சிப்பது சரியா?
நான் எல்லா தேர்தலிலும் இது வரை ஒட்டு போட்டுள்ளேன். கோவையில் இருந்த போதும் அதற்கு முன்பு சென்னையில் இருந்த போதும், ஒட்டு போடுவதற்காக, மதுரை செல்வேன். I am very patriotic.
கடந்த தேர்தலில் மட்டும் என்னால் ஒட்டு போட முடியவில்லை. காரணம், எனது பெயர் voter list ல் இல்லை. Booth வரை சென்று, பெயர் இல்லாததால் திரும்ப வேண்டியதாயிற்று.
ஒட்டு போடாத போது அரசாங்கத்தை விமர்சிப்பது சரியில்லை (This is applicable to all those who say that they don't vote - when is this 50 to 60% polling going to change to 90-95%)
3. கடவுள் நம்பிக்கை உண்டா?
கண்டிப்பாக உண்டு. எனது நெற்றியை பார்த்தால் தெரியும். நம்மை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுவது கடவுள் நம்பிக்கை. நாம் ஒரு விஷயம் செய்யும் நினக்கும் பொழுது, அது தவறாக இருந்தால், நம்மை ஒரு நொடி சிந்திக்க வைத்து அதனை செய்யாமல் இருக்க இந்த நம்பிக்கை பெரிதும் உதவியாக இருக்கும்.
4. வழகத்திகலிருந்து மாறுபட்டு எப்போதாவது எதையாவது புதிதாக முயற்சித்தது உண்டா?
சாதாரண நேரங்களில் - சிறு சாலைகளில் செல்வது
Late இரவு நேரங்களில் - main சாலைகளில் செல்வது
மப்புடன் வண்டி ஒட்டும் பொழுது seat belt போட்டு ஓட்டுவது
இவை அனைத்தும் போலீஸ் பார்வையில் இருந்து தப்ப வைத்து விடுகின்றன
(என்னுடைய license expire ஆகிவிட்டது, அதனால் இந்த யுக்தி)
5. சமீபத்தில் எதாவது விளையாட்டில் (வீட்டுக்கு வெளியே) ஈடுபட்டது உண்டா? இல்லை என்றால் ஏன் விளையாட தோண்றவில்லை என்று யோசித்தது உண்டா?
எனக்கு எப்பொழுதும் பூப்பந்தில் (shuttle cork) நாட்டமுண்டு. பள்ளி நாட்களில், அருகாமையில் இருக்கும் நண்பர்களுடன், வீட்டிலேயே தோட்டத்தில் net கட்டி விளையாடுவேன். அதோடு அது முடிந்ததோ என்று நினைத்துகொண்டிருந்த பொழுது, அது மீண்டும் இப்பொழுது உயிர் பெற்றுள்ளது. என் குழந்தைகளோடு park சென்று இப்பொழுது மீண்டும் விளையாட ஆரம்பித்துள்ளேன்
6. கடைசியாக அழுதது எப்போது இல்லை மனம்விட்டு சிரித்தது??
என் மகளால் வீட்டில் விசேஷம். அவள் பயத்தில் பொருமி பொருமி அழுத பொழுது, இவ்வளவு சிறு வயதில் (10 ½ வயது ) இந்த விசேஷம் ஏன் வந்தது என்று அழுகை வந்தது.
Recentaah மனம் விட்டு சிரித்தது அந்த Chennai Meet 2ல. Ramesh அடித்த கும்மாளம். பிறகு மீண்டும் எல்லோரும் நாட்டு குடி மகன்கள்ன்னு prove பண்ணும் போது அடித்த லூட்டி.
7. என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள், இல்லை கடைசியாக படித்தது (பேப்பர்னு சொல்ல கூடாது)??
எனக்கென்னவோ புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லை. இருப்பினும் என் பிள்ளைகளுடைய english, tamil, science, history, geography, mathematics, social studies, etc, etc. books தான் நான் இப்பொழுது படிக்கும் புத்தகங்கள்.
(நாம் படிக்கும் காலங்களில் நம் பெற்றோர் நம்முடைய புத்தகங்களை படித்திருப்பார்களா?)
8.உங்களுக்கு ஏதாவது தனி திறமை இருக்கிறதா??
மக்களை கவரும் திறமை உண்டென எனது மாணவர்கள் மற்றும் உடன் பணியாற்றுவோர் கூற கேள்வி.
நான் அதிகம் பேசுவது இல்லை ஆனால் பேச வேண்டிய இடத்தில் பேசி காரியத்தில் கண்ணாக இருப்பேன்.
முக்கியமாக ஒன்று சொல்ல விரும்புகிறேன்: People talk at places where they should not talk and they do not talk in places where they have to talk.
அதனால் மக்களே, மக்களுக்கு மக்களே (goundamani style) ... பேச வேண்டிய இடத்தில் பேசி, பேச வேண்டாத இடத்தில் பேசாமல் இருந்து சாதியுங்கள். நல்லதொரு சமுதாயம் அமைக்கலாம்.
எனக்கு இசை பெரிதாக தெரியாவிட்டாலும், guitar மற்றும் keyboard வாசிக்க தெரியும். ஒரு பாடலை ஓரிரு முறை கேட்டவுடன் அதனை அப்படியே guitar ல் வாசித்து விடுவேன்.
9. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம் (அ) போக விரும்பும் இடம் (அ) வீட்டிலிருந்து அதிக தூரம சென்ற இடம்??
அது சுற்றுலா தலம் அல்ல. அது எனது சொந்த ஊரான நாட்டரசன்கோட்டை.
கள்ளம் கபடமில்லாத மக்கள். சுத்தமான காற்று. பரந்த பூமி. வயல் வெளிகள் (வருடத்தில் ஒரு சில மாதங்கள் தான் பச்சை பசேல் என்று இருக்கும், அது வேறு கதை). நேரம் இருந்து கொண்டே இருக்கும், நன்றாக தூங்குவதற்கும், சாப்பிடுவதற்கும், அரட்டை அடிப்பதற்கும்.
அதிக தூரம் சென்ற இடம்
Bus - தமிழ்நாட்டில் உள்ள பெரிய நகரங்கள் முழுதும் (தினத்தந்தி, தினமலர் எனது clients - அதனால் அவர்களுடைய கிளை அலுவலகம் அனைத்தும் செல்ல வேண்டியது இருந்தது - WAN, Internet, VPN என்று technology வளர்வதற்கு முன்னால் - இப்பொழுது உட்கார்ந்த இடத்தில் இருந்தே எல்லாவற்றையும் பார்த்து விடுவோம்.)
கார் - Kerala முழுதும்.
ரயில், விமானம் - Delhi
வெளி நாடு - Malaysia and Singapore.
தற்பொழுது எனது நண்பர் ஒருவர் Switzerland வருமாறு அழைப்பு விடுவதாலும், மேலும் எனது சிறு வயதில் இருந்தே switzerland பார்க்கும் ஆசை உள்ளதால், நப்பாசை உள்ளது. Scotlandக்கும் நிச்சயம் வருவேன் தம்பி சுரேஷ்.
10. வாழ்வில் சந்தோஷம் என்பது?
தவறுகள் செய்யாமல் உண்மையோடு நாம் செல்லும் போது நம்மில் குற்ற உணர்ச்சி இல்லை. அப்படி ஒரு தூய்மையான வாழ்க்கை வாழ்வதில் கிடைக்கப்பெரும் சந்தோஷம் அலாதி.
6 comments:
தெளிவான நீரோட்டம் போன்ற நடையில் பதில்கள், பிரமித்துத்தான் போனேன் தல.
நான் இந்த கேள்விகளை, ஒவ்வொருவரையும் இது அவர்கள் சந்தித்த வித்யாசமான சூழ்நிலைகளை அதனை அவர்கள் எதிர்கொண்ட விதம் வெளிப்படும் என்ற நோக்கத்தில் தேர்வு செய்தேன்.
அது தவரவில்லை என்பதை நிரூபிப்பது போல் சிவா, ஜெயந்தி இப்போது உன் பதிலகள் வந்துள்ளதை பார்க்கும் போது நான் மிகவும் சந்தோஷம் கொள்கிறேன். மிகுந்த வெளிப்படையான் ஒரு பகிர்தல் இந்த வகுப்பறையில் இருக்கும் நட்புக்கு மேலும் அழகூட்டுகிறது.
//(நானும் கடலை போட்டேன் என்பது வேறு கதை)// ரெம்ப ஃப்ரான்கா எழுதி ஊட்டுல பிரச்சன ஆகிரப்போகுது தல...
//ஆனால் பேச வேண்டிய இடத்தில் பேசி // தலைமை பொருப்புக்கு மிக முக்கியமான் அம்சம்.
//என் பிள்ளைகளுடைய english, tamil, science, history, geography, mathematics, social studies, etc, etc. books தான் நான் இப்பொழுது படிக்கும் புத்தகங்கள்// சரி நீ படிச்ச காலத்துலதான் சரியா படிக்கல இப்பயாவது ஒழுங்கா படி
Scotland அவசியம் வா, கவனிச்சுருவோம்ல..
//ஃப்ரான்கா எழுதி ஊட்டுல பிரச்சன ஆகிரப்போகுது// ... வீட்டில தெரியும், இந்த ஆள் இப்படி தான்னு ... கடலை போட்றது தப்பா ... திருந்துங்கப்பா (எல்லா வீட்டு அம்மணிகளும், என்ன வந்து டின் கட்டப் போறாங்க ... ஆவய்ங்க ஆவய்ங்க சும்மா தான் இருக்காங்க, நீ வந்து கடலை போட சொல்றியான்னு)
//நீ படிச்ச காலத்துலதான் சரியா படிக்கல இப்பயாவது ஒழுங்கா படி// ... exactly, அன்னைக்கு அது ஒரே கஷ்டமா இருந்துது, ஆனா இன்னைக்கு பார்க்கும் போது ... எவ்வளவு விஷயம் சொல்லி தாறாங்க ... ஏய், நான் classல ஒழுங்கா படிக்கிற பையன்பா, அதனால தான் என்னைய தலைவனா போட்டாக ... ஆனா அந்த செந்தில் நாயகம், சிவகுமார் (usa), ஸ்ரீநிவாசன் (left) - இவங்க போட்டி அதிகம் top 5 ranksக்கு. எனக்கு ஞாபகம் உள்ள வரை, நான் 5வது rank க்கு கீழ போனதே இல்ல.
//கவனிச்சுருவோம்ல..// என்னப்பா, சிவாஜி படத்துல வர்ற 'office room க்கு வாங்க' டைப்ல இருக்கு
Great Lechu
Your detailed replies have made me also write in detail.
Your faith in GOD is world known factor.
I appreciate the affection and concern you have for your daughter. What to do? That is also GOD's gift(?) to ladies.
Its alright to drink and drive as long as you are steady. But be careful.
லக்ஷ்மணன்,
நல்ல பதில்கள். இந்த பதிவு மூலம் உங்களை ( உன்னை) அமெரிக்கா வருவதிற்கு அழைகின்றேன். அந்த Switzerland தமிழ் எண்ணங்களை ரொம்ப கவர்ந்துவிட்டது. கோலிவுட் கைங்கரியம் என்று எனது அபிப்ரியாயம்.
லக்ஷ்மணன்,
நல்ல பதில்கள். இந்த பதிவு மூலம் உங்களை ( உன்னை) அமெரிக்கா வருவதிற்கு அழைகின்றேன். அந்த Switzerland தமிழ் எண்ணங்களை ரொம்ப கவர்ந்துவிட்டது. கோலிவுட் கைங்கரியம் என்று எனது அபிப்ரியாயம்.
//மப்புடன் வண்டி ஒட்டும் பொழுது seat belt போட்டு ஓட்டுவது//
வயது 40+++ மப்பை குறைத்தல் உடலுக்கு நல்லது. வீட்டுல அம்மணி சொன்னலும் கேட்க மாட்டீங்க. நீங்களா புரிஞ்சுண்டு குறைக்க வேண்டும்.
Post a Comment