நண்பர் கிவியனின் கேள்விகள் மற்றும் எனது பதில்களும்
1. சமீபத்தில் எப்போது மன்னிப்பு (sorry) கேட்டாய்? இல்லை கேட்டிருக்கலாம் என்று பின்பு தோன்றிய சம்பவம்?
ஞாபகம் வைத்து கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை .சிவா சொன்னது போல் தினமும் எதாவது காரணத்திற்கு மன்னிப்பு கேட்கிறோம் .இது நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதி .இருந்தாலும் ஒரு நிகழ்ச்சி.
முன்னாள் சென்ற வாகனம் sudden break போட்டு ,நான் அதிர்ந்து போய் break போட எனக்கு பின்னல் வந்தவன் என்னை முட்ட வந்து .முன்னால் செய்தவன் தவறுக்காக பின்னால் இருந்தவனிடம் மன்னிப்பு கேட்டேன் .
2. தேர்தலில் ஓட்டு போட்டது உண்டா? இல்லை என்றால் ஏன் போடவில்லை என்று விளக்க முடியுமா? அப்படி ஓட்டு போடாத போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நீங்கள் விமர்சிப்பது சரியா?
உண்டு .ஆனால் இன்றும் ஒட்டு போடுவதற்கு வெயிலில் தான் நின்று கியுவில் செல்ல வேண்டியிருக்கிறது
3. கடவுள் நம்பிக்கை உண்டா?
உயிரும் உருவமும் கொடுத்த தந்தையும் தாயும் கை கூப்பி வணங்க கற்று தந்ததால் .நம்பிக்கை உண்டு
4. வழகத்திகலிருந்து மாறுபட்டு எப்போதாவது எதையாவது புதிதாக முயற்சித்தது உண்டா?
இது சிறு வயதில் செய்த முயற்சி .ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் வீட்டிற்கு வந்த நபரின் சைக்கிளில் ஒரு வித்தியாசமான் head light பார்த்தேன் .அது 3 volt DC battery வைத்த ஒரு Everedy makehead light. பார்க்க கலராக தெரிந்தது வீட்டிலிருந்த சைக்கிளின் miller head light கழட்டி இது போல் வைக்க ஆசை .அம்மாவிடம் அடம் பிடித்து காசு வாங்கி டவுன் ஹால் ரோடு பூரா அலைந்து வாங்கி மாட்டினேன் .கொஞ்சம் பெருமையாக இருந்தது .ஒரு வாரத்தில் head light டல் அடித்தது .காரணம் battery down .பின்னர் ஒரு யுத்தி, ஏற்கனவே இருந்த miller dynamo விலிருந்து wire lead எடுத்து ஆணியில் துளைஎடுத்து unsized wire கொண்டு கஷ்டப்பட்டு திணித்து பல்பு range தெரியாமல் மாட்டி wheel சுத்த விட்டு பார்த்தேன். அது என்னடவேன்றால் எரியவில்லை .பின்பு அப்பாவிடம் polarity என்ற விஷயம் தெரிந்து மீண்டும் முயற்சித்தேன் .அது எரிந்தது ஆனால் bulb fuse. பின்பு கரண்ட் தகுந்தாற்போல் bulb வேண்டும் என்ற விவரம் அறிந்தேன். எல்லாம் ஆயிற்று .சைக்கிள் ரோடுக்கு வந்து விட்டது . Original head light will have rigid support. இது சும்மாவாச்சுக்கும் முன்னால மாட்டி விடுவது. Design செய்யப்பட்ட விதமே ,எங்காவது நிறுத்தினோமானால் இத கழட்டி கையில் எடுத்து செல்ல வேண்டும் . ரோடுக்கு வந்த வண்டி கட கட என்ற சப்தம் முன்னால் கேட்க நான் ஒரு குறிப்பிட்ட வேகத்தில்தான் வண்டி ஓட்ட முடியும் ,மீறினால் சப்தம் அதிகரிக்கும் .அது விழாமல் இருக்க உஷாராக ஓட்ட வேண்டும். எல்லா எச்சரிக்கையும் மீறி பள்ளத்தில் விட்டு எடுத்தேன் .அடுத்த நொடி ஹெட் லைட் கழண்டு கீழ விழுந்து கண்ணாடி நொறுங்கியது .அந்த கண்ணாடிக்காக பின்னர் அலைந்தது வேறு சமாச்சாரம் . அந்த வயதில் தெரிந்து கொண்ட விஷயங்கள்
a. Rigidity plays a major role on any rotating equipment.
b.Polarities (+ve/ -ve) to be identified in Direct கரண்ட்
.c.Vibration & Sound Damper (சப்தம் வெளி வராமல் பார்த்துக்கொள்வது )
ஒரு விஷயம் வீட்டில் குழந்தைகளை சைக்கிள் துடைக்க சொல்லுங்கள் .அவனுக்கு /அவளுக்கு நிறைய பொறியியல் கேள்விகள் கிளம்பி விடும் .கொஞ்சம் உஷார் உங்களுக்கு தெரியாததை போது இடத்தில கேட்டு மானத்தை வாங்கி விடுவார்கள் . ஜாக்கிரதை .
5. சமீபத்தில் எதாவது விளையாட்டில் (வீட்டுக்கு வெளியே) ஈடுபட்டது உண்டா? இல்லை என்றால் ஏன் விளையாட தோண்றவில்லை என்று யோசித்தது உண்டா?
காலையில் walking போவது வழக்கம் .எல்லாம் un burnt calories குறைக்கத்தான் .அப்போது பக்கத்தில் சின்ன பசங்க volley ball விளையாண்டு கொண்டிருந்தார்கள் .அது தவறி என் காலருகில் ஓடி வந்தது .உடனே பழய நினைவுடன் நுனிக்காலில் பந்தை bounce செய்து ,முழங்காலில் கொஞ்சம் தட்டி உயரச்செய்து ஓங்கி உதை விட்டேன் .அது சுமாராக 12 மீட்டர் உயரத்தில் பொய் வேறெங்கோ விழுந்தது .பசங்க என்னை வித்தியாசமாக பார்த்தார்கள் .என்னடா volley ball பந்தை காலால் உதைக்கிறானே என்று .தெரிந்த பசங்க என்னை ஒன்றும் சொல்லவில்லை .
6. கடைசியாக அழுதது எப்போது இல்லை மனம்விட்டு சிரித்தது??
அழுதது : வருடம் 2008, சுஜாதா என்ற எழுத்தாளர் மரணம் அடைந்த அன்று .நான் அப்போது Bangalore, ITPL வளாகத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன் .கர்நாடக போக்குவரத்து கழகம் எங்களுக்காக பிரத்யோகமான பஸ் விட்டிருந்தது .எனக்கு பிரயாணம் செய்யும்போது தான் என்ன ஓட்டங்கள் அதிகமாக இருக்கும் .அந்த நேரத்தில் அவரின் சிந்தனை வந்தது .என் தந்தையை விட அதிக வயது உடையவர் .ஆனால் நம் சம வயது சந்ததியினரின் மனப்போக்கை நன்கு அறிந்தவர் .அவருடைய " பிரிவோம் சந்திப்போம்" ஒரு உதாரணம். அது தவிர அவருடைய எழுத்துக்கள் பல பிரிவுகளை கற்பிக்கும் . இந்திய இளம் (அந்தகால) சமுதாயத்தினர்க்கு கணிப்பொறி என்ற கல்வியை ஊக்குவித்ததே அவர்தான். இன்றைக்கு ஓட்டளிக்க EVM என்ற கண்டுபிடிப்புக்கு முன்னோடியே அவர்தான் .
அவர் நினைவு வந்தவுடன் கண்ணில் நீர் வழிந்தது .முன்னால் chewing gum மென்று கொண்டே ஒரு "குட்டி" என்னை திரும்பி திரும்பி பார்க்க .குளிர் கண்ணாடியை மாட்டிக்கொண்டேன் .
மற்றபடி எனக்கு எல்லாமே சிரிப்புதான் .
7. என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள், இல்லை கடைசியாக படித்தது (பேப்பர்னு சொல்ல கூடாது)??
படித்துக்கொண்டிருப்பது
தமிழ் : "சொல்லித் தெரிவதில்லை" by வைரம் ராஜகோபால்
ஆங்கிலம் : "The Client" by John Grisham
8.உங்களுக்கு ஏதாவது தனி திறமை இருக்கிறதா??
என்னையே நான் self assessment செய்து கொண்டதில்லை. இருந்தாலும், என்னிடம் நிறைய குறைபாடுகள் உண்டு .அதனுடன் சண்டையிடுவதே வாழ்க்கையாகிவிட்டது ."வாழ்க்கையே போராட்டமா போச்சுப்பா " .என்னை அறிந்தவர்கள் என்னால் முடியும் என்று கூறுகிறார்கள் .பொறுப்பும் கொடுக்கப்படுகிறது . இதுவரை நம்பிக்கையை வினாக்கியதில்லை. பொதுவாக நான் பிரச்சனைகளை தள்ளி போடுவதில்லை . இதை வேண்டுமானால் என் தனி திறமையாக கொள்ளலாம்.
9. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம் (அ) போக விரும்பும் இடம் (அ) வீட்டிலிருந்து அதிக தூரம சென்ற இடம்??
இன்றுவரை நான் போக விரும்பும் இடம் நம்ம கொடைக்கானல் தாங்க .அதுவும் lake area அதிகமாக விரும்பும் இடம் .அங்கே எல்லாமே நிழலான பகுதி .என்னை விட்டால் நாள் கணக்கில் அங்கேயே உட்கார்ந்து விடுவேன் .எனக்கு ஒரு doubt இடத்தை தேர்ந்தெடுப்பது வயதும் மனசும் சம்பந்தப்பட்ட விஷயமோ !. கடந்த கால வாழ்கையினை அசை போடுவதற்கு ஒரு எச்ச பகுதி .
10. வாழ்வில் சந்தோஷம் என்பது?
வாழ்வில் சந்தோசம் என்பதே விட்டுக்கொடுத்தல் . அது குடும்பத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது .I don't want to be philosophical . Giving priority to the family is the happiest moment.
3 comments:
அழுதது: சுஜாதா என்றுமே இளமையான் சிந்தனைகளுடன் வாழ்ந்த்து என்றுமே நம்மை ஆச்சரியப் பட வைத்தவர். இப்ப கூட அவருடய தூண்டில் கதைகள் படித்துக் கொண்டிருக்கிறேன். சிரிக்கவும் சிந்திக்கவும் முடிகிறது.
//இன்றும் ஒட்டு போடுவதற்கு வெயிலில் தான் நின்று கியுவில் செல்ல வேண்டியிருக்கிறது//
ஏம்பா அவனவன் கியுல நின்னு பேர் இல்லேன்னு நொந்து நூடுல்ஸாகி போய்டிருக்கான் நீ என்னடான்னா வெயில் நிக்க வேண்டிருக்குன்னு சொல்லிரியே நியாயமா?
//Rigidity plays a major role on any rotating equipment// ரொம்ப கரெக்டுபா, இட்லிக்கு மாவரைச்ச அனுபவம் மூலமா நான் தெரிஞ்கிட்டேன்.
//வீட்டில் குழந்தைகளை சைக்கிள் துடைக்க சொல்லுங்கள்//
அந்த காலத்துல நாமெல்லாம் ரொம்ப நல்ல பசங்க. அம்மா/அப்பா சொன்னாங்கன்னு தேமேன்னு சைக்கிள தொடச்சு வெச்சோம். இப்ப நம்ம பய புள்ளக என்னடான்னா, அப்பா, சைக்கிள இந்த சனிக்கிழமை சர்வீசுக்கு விட்டுரு அப்படின்னு ஒரு ஆர்டர் போட்டுராய்ஙக. கொஞ்சம் கெடுபிடியா நீயே பண்ணுன்னு சொன்னா, சரி அப்ப எனக்கு ஒரு 5 டாலர் இல்ல 5 பவுண்டு குடுப்பியா அப்பிடின்னு இரங்கிர்ராய்ங்க இதுல பாசிடிவ் நெகடிவ் எல்லாம் அடிபட்டு போய்டும். இன்னொன்னு சொல்லனும், ஒரு செல்போன வாங்கி கைல குடுத்தா அதுல இருக்குற டெக்னாலஜி சமாசாரம் பத்தி எதாவது நமக்கு டவுட் இருந்தா இந்த பொடிசுங்க அப்படியே விரல் நுனில விஷயத்த தெளிவு பண்ணிருவாங்க.
//தெரியாததை போது இடத்தில கேட்டு மானத்தை வாங்கி விடுவார்கள்//
அது பழசு, பொது இடத்துல அப்பா உனக்கு ஒண்ணும் தெரியாது பேசாம இரு அப்படின்னு நமக்கு ஆப்பு வெக்கரதுதான் புதுசு.
//முன்னால் செய்தவன் தவறுக்காக பின்னால் இருந்தவனிடம் மன்னிப்பு கேட்டேன்// - தல விதி பா, but that shows that we are good people, தவறு செய்வது மற்றவர்களாக இருந்துட்டு போகட்டும்.
rigidity, polarity, direct current, vibration, sound damper - ஐயோ ஐயோ ஐயோ போதும்பா ... அப்பறம் நானும் எங்களுடைய technology fullஆ எடுத்து விடுவேன் - instance, thread, inheritance, polymorphism, plug-in. Just joking ... so தாமு உன்னுடைய்ய electrical engineering விதை அப்போவே (5th standard) போடபட்டதுன்னு சொல்லு.
//பொது இடத்தில கேட்டு மானத்தை வாங்கி விடுவார்கள்// ... எனக்கொரு சம்பவம் ஞாபகதுக்கு வருகிறது. ஒரு முறை நான் வீட்டில் இருந்த போது கைபேசி அழைத்து. நான் officeல் இல்லை என்பதை, "நான் இப்போ வெளீல இருக்கேன், உள்ள வந்தவுடன் பேசுகிறேன்" என்று கூறினேன். அதனை கேட்டுகொண்டிருந்த என் son, "அப்பா நீங்க தான் வீட்டுக்கு உள்ள தானே இருக்கீங்க, பின்ன ஏன் வெளீல இருகிறதா சொன்னீங்க" ன்னு கேட்டான். என் வீட்டில் இருந்த அத்தனை பெரும் 'குபீர்' என்று சிரித்து விட்டோம். பின்பு நான் அவனுக்கு விளக்கம் அளித்தேன்.
//முன்னால் chewing gum மென்று கொண்டே ஒரு "குட்டி" என்னை திரும்பி திரும்பி பார்க்க// ... அந்த "குட்டி" matterல எதுவும் 'பிரிவோம் சந்திப்போம்' இருக்கா?
உன் வயசுக்கோ மனதுக்கோ அந்த kodaikanal lakeல ஏதோ இருக்கு ... ஹ்ம்ம்ம்ம்ம், மலரும் நினைவுகளா?
//வாழ்வில் சந்தோசம் என்பதே விட்டுக்கொடுத்தல்// - சுரேஷ், இந்த கேள்விக்கு மட்டும் எல்லாரும் ரொம்ப நல்லாவே பதில் சொல்றாங்கப்பா ... simple, short and crisp ... good தாமு.
Post a Comment