இதனால்  (எனக்கு) என்ன பயன்?
இந்த வகுப்பறைனால, பதிவெழுதறதுனால, அஞ்சலுக்கு பதில் போடரதால...
எதாவது லாபம் இருந்தால்தான் நாம் எதையுமே செய்ய சிறு வயது முதல் நம்மை பழக்கி விட்டார்கள். இந்த பழக்கம் நம்முடன், நாம் மண்ணுக்குள் செல்லும் வரை, நிழல் போல் கூடவே வரும் போலிருக்கிறது..
சில ஞாபகப மூட்டல்கள்:
நான் தாமு, லெச்சு, ஜெயந்தி நால்வரும் முன்பே போனில் பேசியதுபோல் நமது புதிய கூட்டணி எதாவது ஒரு நல்ல காரியம் செய்யவேண்டும் என்ற கருத்தையொட்டி இந்தவருடம் நம்மால் முடிந்தளவு பள்ளிசெல்லும் குழந்தைகளுக்கு books & Notebooks வழங்கலாம் என்றுள்ளோம். இந்த விஷயம் எல்லோராலும் ஏற்கப்பட்டது என்றே நான் நினைக்கிறேன். யாரால் என்ன முடிந்ததோ அந்தாளவு funds குடுக்கலாம். ( NRIs please note this). லக்ஷ்மணன் சொன்னபடி ஒரு charity account open செய்தபின் இந்த பணி தொடரும்.
ஏப்ரல்ல இப்படி சவுண்டு விட்டோமா அதுக்கும்முன்னாடி இப்படியும் வாய்ஸ் விட்டோம்..
கழக கண்மணிகளுக்கு சற்றும் இளைத்தவர்கள் நாம் இல்லை.
சரி சில நாட்டு நடப்புகளை பார்ப்போம்
அம்மா கேக்குறாங்க: இந்தியாவில் நிரந்தரக் குடியுரிமை அளிப்பதால் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது?
அரியலூரில் டைனசோர் முட்டை கண்டுபிடிப்பு
உள்ளுர் மக்கள் முட்டை வேட்டையில் இறங்கி அந்த ஏரியாவையே துவம்சம் செய்வதாக பெரியார் பல்கலைகழக பேராசிரியர்கள்/ஆராய்ச்சி மாணவர்கள் வருத்தப் படுகிறார்கள்.
அறிவுப் பசி அண்ணாசாமி:  இதுல ஆம்லெட் செய்ய முடியுங்களா?
 
 
2 comments:
நினைவில் இருக்கிறது. ஏப்ரல் மாத சந்திப்பின் போது இது பற்றி பேசிய பின் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்த பிறகு அது பற்றி எல்லாருக்கும் தெரியப் படுத்துவதாக சொல்லப் பட்டது. எல்லாரும் அவரவர் வேலைகளில் பிஸியாக இருப்பதால் அது தாமதாமாகிறது என்று நினைக்கிறேன். எங்கே, வலை, தொலை(பேசி) எல்லாவற்றிலும் தொடர்பு குறைந்து கொண்டே வருகிறதே? அட்லீஸ்ட் நாம இங்க இதப் பத்தி எழுதினாலாவது நமது ஞாபகத்தில் இருக்கும். தாமதமாகவாவது செயல் படலாம்.
எல்லாரும் யாராவது ஆரம்பித்தால் பிறகு நாம் சேர்ந்து கொள்ளலாம் என்றிருப்பதால் கூட தாமதமாகலாம்.
முப்பாத்தம்மன் கோயில்ல மறுநாள் அபிசேகத்துக்கு குடம் வெச்சு ஊரு மக்கள் எல்லாரும் அதுல பால் ஊத்துங்கன்னு பறையடிச்சாங்க, மறுநாள் வந்து பாத்தா குடம் காலியாவே இருக்கு...
//தாமதமாகவாவது செயல் படலாம்// கிழிஞ்சது போ..எவ்வளவு தாமதமா?
//யாராவது ஆரம்பித்தால் பிறகு நாம் சேர்ந்து கொள்ளலாம்//
பூனைக்கு யார் மணி கட்டுவது...
Post a Comment