பாரதி, வ. உ.சி, டி.வி. சுந்தரம் ஐயங்கார், புதுமைபித்தன், பி.ஸ்ரீ (தினமணி ஆசிரியர்)  கர்நாடக இசை பாடகர் சடகோபன் இவர்களுக்குள் உள்ள ஒரு ஒற்றுமை என்ன?
இவர்கள் அனைவரும் திருநெல்வேலி  மதுரை திரவியம் தாயுமானவர்  (MDT)ஹிந்து உயர்நிலை பள்ளி, மாணவர்கள். இப்படி ஒரு பள்ளியா என ஆச்சர்யபடவைக்கும் பல புகழ் பெற்றவர்களை உருவாக்கியது தனிப்பெரும் பெருமை.
இந்த பள்ளியை பற்றி இதில் படித்தவர்கள் பற்றி பல சுவையான நிகழ்வுகள் உண்டு. பி.ஸ்ரீ என்னும் பிச்சு ஸ்ரீநிவாச்சாரி ஒரு பன்முக வித்தகர். ஐம்பது அறுபதுகளில் தினமணியில் பணியாற்றி பின்பு ஆனந்த விகடனிலும் எழுதியவர்.
ஒரு முறை மெய்யியல் பற்றிய விவாதத்தின் போது, ஒரு தமிழர் உப்புமாவை பற்றி  விவேகானந்தருக்கு எப்படி விளக்கினார் என்றால்  உப்புமா என்பது சக்கரைக்கு பதில் உப்பு சேர்த்த  கேசரி எனலாம். இது போலவே மெய்யியல் என்பது தெரியாததை தெரிந்ததை வைத்து உணர வைக்கும் கலை என்ற மிக அழகான விளக்கத்தை கேட்ட அந்த பள்ளி தலமை ஆசிரியர் பி.ஸ்ரீக்கு `மெய்யியல் ஆசான்` என ஒரு பட்டம் வழங்கினார்.
இந்த பள்ளியின் மாணவன் டி.வி.எஸ் ஐயங்கார் ஆரம்பித்த பள்ளியில் படித்த இப்போதைக்கு சிறு புள்ளி(ளை)களாகிய நாம்,
நம்மில் எவர் பெறும் புள்ளியாக ஆவாரோ??
அப்துல் சொன்னது போல் ’பெறும் புள்ளியாக’ கனவாவது காண்போம்..
 
 
1 comment:
//சிறு புள்ளி(ளை)களாகிய நாம்,//
இன்னும் சிறு புள்ள தானா?
//
அப்துல் சொன்னது போல் ’பெறும் புள்ளியாக’ கனவாவது காண்போம்..//
ஏற்கனவே அப்துல் கலாம் மேல பழியப்போட்டுட்டு நெறயப் பேர் தூங்கி கிட்டே இருக்காங்க.:))
Post a Comment