நேற்று விஜய் டீவியில் ”சூர்யாவுடன் கோடி தொடக்கம்” நு ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்.  நடிகர் சூர்யா ஏற்கனவே “அகரம்” என்ற அமைப்பின் மூலம் ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு உதவி செய்து வருகிறார்.  நேற்றைய நிகழ்ச்சியில்  பல ஏழை மாணவர்கள் கலந்து கொண்டனர். 85, 90 சதவிகிதம் வாங்கியும் பணவசதி இல்லாததால் படிப்பை தொடர முடியாதவர்கள். ஒவ்வொருவர் சொல்வதை கேட்டதும் மனதிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது. சூர்யா, தன்னையும் சேர்த்து உதவும் எண்ணம் , பண வசதி உள்ள பத்து பேருடன் சேர்ந்து அவர்களுடய படிப்பிற்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்தார். (ஆளுக்கு 10 லட்சம்)
இதை யூ ட்யூபில் பார்க்கலாம்.
சரி இப்ப நான் சொல்ல வந்த மேட்டர் என்னன்ன, நம்ம ட்ரஸ்ட் தொடக்கம் பற்றிய விவாதத்திற்கு ரெஸ்பான்ஸ் ரொம்ப கம்மியா வந்திருக்கு. யாரும் தானாக எந்த பொறுப்பும் எடுத்துக் கொள்ள முன் வரவில்லை.  எனக்கு தகுதி இருக்கா என்று தெரியவில்லை.  ஆனால் இது தொடர்பாக ஏதாவது வேலை செய்ய வேண்டுமானால் நான் தயாராக இருக்கிறேன். ஏதோ நம்மாலான உதவியை ஒரு சிறிய அளவிலாவது தொடங்குவோமே...
இனிமேலும் தாமதம் வேண்டாம்.  ஒவ்வொரு முறையும் நம்முடைய சந்திப்பு வெறும் பேச்சுடனும் மதிய உணவுடனும் மட்டும் இல்லாமல் ஒரு சமூக சேவையுடன் இருக்கட்டுமே..
 
 
2 comments:
நம்ம முத்தையா பலூனும் மத்தாப்புமா போட்ட வாழ்த்து பதிவ தாண்டி இந்த வருஷம் யாருடா பதிய போறான்னு பாத்துக்கிட்டு இருந்தேன்,
சூர்யாவின்கோடிக்கு அநேக கோடி வாழ்த்துக்கள், நேத்து பாத்ததுனால கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப் பட்டுட்டுப்போல தெரிதே??இது என்ன புது வருட தீர்மானமா (resolution??)
பணமும், நேரமும், ஆள் பலமுமாக் இவர்கள் செய்யும் சேவைக்கு மீடியாவில் விளம்பரமும் அதன் மூலம் நா எவ்வளவு நல்லவன் பாருங்கன்னு கிடைக்கும் புகழும்.
சில நேரங்கள்ள இந்த மாதிரி விஷயத்த பாத்தவுடனே நாமளும் ஏதாவது செய்யனும்னு தோனும் மூனு நாள்ல அத மேற்கொண்டு தொடர முடியாம தோல்வியடைஞ்சு நமக்கு நாமே ஒரு சமாதானத்தையும் கண்டுபிடிப்போம்.
எனினும், வேலில போற ஓணான எடுத்து மேல விட்டுக்க ஒரு தைரியம் வேணும். வாழ்க ஜெ!
அந்த நிகழ்ச்சியை பார்த்து உணர்ச்சிவசப்பட்டது உண்மைதான். ஆனால் இதை நான் வேலியில் போற ஓணானா நினைக்கல. இந்த சமூக சேவை மேட்டர initiate பண்ணினது நான் இல்லை. ஆனால் பண்ணப்பட்ட போது, ஆஹா நல்ல விஷயமா இருக்கேன்னு நினைத்தேன். இதில் அணில் மாதிரி பங்கு எடுத்துக்கலாம்னு பார்த்தா பாலம் எப்ப கட்டுவாங்கன்னு தெரியல. எஞ்சினியர்ஸ்தான் பதில் சொல்லனும்.
Post a Comment