Saturday, August 14, 2010

சென்னை (2010) அனுபவங்கள்

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் ஒரு சென்னை பயணம் மேற்கொண்டேன். பார்க்க போனால் சென்ற முறை 2005 'இல் வெகு சில நாட்களே இருந்ததால் அவ்வளவாக அனுபவிக்க முடியவில்லை. சென்னை விமான நிலையம் சற்றே வினோதமான இடமாக மாறி விட்டது ( அல்லது நான் மாறி விட்டேனோ ?? ). சீனர்கள், கொரியர்கள் மட்டறு ஐரோபீர்கள் சற்றே நிறையக பார்த்தேன். மாற்றபடி தம்படி கேட்கும் சுங்கவரி ஆட்கள், ஆங்கிலம் மற்றும் சறுக்கலான தமிழ் பேசும் (என்) போன்ற குடும்பங்கள். ஒரு மாற்றம் இந்த முறை வெளியே வாரும் வாயில் வரை வெகு சுத்தமாக இருந்தது. மற்றபடி நம்ம ஊர் நம்ம ஊர் தான் போன்ற பொன்மொழிகளை கேட்டவாறு சென்னை நகரை அடைந்தேன் . முதல் மாற்றம் முகத்தில் அடித்தது எங்கள் வாடகை வண்டியின் ஓட்டுனர் ஒரு கையால் வண்டியையும் மற்று ஒரு கையல் தொலைபேசி மூலம் யாரோடு பேசிய லாவகம், அதுவும் நம்ம ஊரு ரோடில் :). பெரிய பெரிய கட்டிடங்கள் கூடவே சேரிகள் அந்த கலவை ஒரு வினோதமான உணர்சிகள் தூண்டியது .. நான் வளர்ந்த நாட்களில் சேரிகள் இருந்தன அனால் இந்த முறை ஏனோ தெரியவில்லை வேறு விதமாக சிந்தனை சென்றது. Mobile தொலைபேசிகள் ஏராளம். எங்கும் சினிமா எதிலும் சினிமா.. ஆத்திகம் மிகுந்துவிட்டது இதை பற்றி நாங்கள் வெகுவாக அரட்டை அடித்தோம் .. ஏனோ தெரியவில்லை மனம் அந்த 1980 மதுரை மற்றும் சென்னை நாடியது அனால் அது எங்கும் இல்லை என்பது சற்றே ஏமாற்றம் ...

பழயன கழிதலும் புதியன வருதலும் கால வழுவலயினே என்று எங்கோ படித்த ஞாபகம் அனால் மனம் ஏனோ ஏங்குதே ..

சிவா

( கொஞ்சம் ஓவர் தான் ..)

1 comment:

கிவியன் said...

மீண்டு வந்து ஒரு பதிவு போட்டதற்கு நன்றி சிவா.

ஆத்திகம் மிகுந்துவிட்டது என எழுதியிருக்கிறாய், அது கவலையளிக்கும் விஷயமா இல்லை ஆரோக்கியமானதா? பெரியாரின் படைப்புகள் நாட்டுடமை ஆனதுடன் வலையிலும் அது படிக்க கிடைப்பதால் இனி வரும் காலத்தில் ஆத்திகம் தழைக்குமோ என்ற ஒரு சிறு எதிர்பார்ப்பு எனக்கு தோன்றுகிறது.

ஆனாலும் சந்திப்பு-3ல் அப்படி என்னதான் நடந்தது என (ஒண்ணுமே நடக்கலியோ??) ஒருவரும் எழுத்தக்காணோம், நீ விமான நிலையத்தை விட்டு இப்போதுதான் வெளியே வந்திருக்கிறாய், விரைவில் இது பற்றி எழுதுவாய் என நம்புகிறேன்..

மற்றபடி ஒரு துருவத்திலிருந்து மறு துருவத்திற்கு வந்த பின் ஒரு வழியால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்குள் நான்கு வாரங்கள் ஓடிவிடும் போலிருக்கிறது.