தினமும் முடியாவிட்டால்
வாரத்தில் ஒரு நாள்,
மாதத்தில் ஒரு நாள்
இல்லை இல்லை
வருடத்தில் ஒரு முறையாவது
வகுப்பறைக்கு வரலாமே…..
பாடம் படிக்க வேண்டாம்
பரிட்சை எழுத வேண்டாம்
அனுபவத்தை மட்டும் பகிரலாமே…
நாட்டு நடப்பு
அயோத்தி தீர்ப்பு முதல்
எந்திரன் ரிலீஸ் வரை
எதுவும் பேசலாம்
பார்த்த மனிதர்கள், படித்த புத்தகம்
ஏதாவது ஒரு விஷயம்
இல்லாமலா போகும்
பல முறை அழைத்தும் 
பலர் வருவதில்லை
நாம் எழுதக் கற்றுக் கொள்ள
இலவசமாக இதை விட
சிறந்த வாய்ப்பு
கிடைப்பது அரிது
யாரும் வரவில்லை
என்றாலும்
வகுப்பறை என்றும் திறந்தே இருக்கும்
புதியதாக வருபவர்களாவது
எழுதுவார்கள் என்ற
நம்பிக்கையுடன்…..
 
 
1 comment:
பிரமாதம் ஜெ,
மடக்கி மடக்கி எழுதுவதில் கில்லாடி ஆகிவிட்டாய்.
நீயும் சிவாவும் எழுதிக்கொண்டிருப்பது சந்தோஷம். நான் எதிர்பார்த்ததும் இதைத்தான். அட பத்து பேருக்கு அறிமுகப்படுத்தினா அதுல இரண்டு பேராவது எழுதாவாங்கன்ற நம்பிக்கை, பொய்க்கவில்லை. எல்லோரும் எழுதுவார்கள் என்று எதிர்பார்ப்பது பேராசை.
முதலில் தாமு எழுதிக்கொண்டிருந்தான். இப்போது என்வாயிற்று என்று தெரியவில்லை. அவ்வப்போது ஷ்னேக்பாபுவும் பரவாயில்லை. இடையில் நம்ம ராசா அவ்வப்போது வேதாளத்தை இறக்கும் விக்கரமாதித்தன் போல யாஹுவில் யருமே கண்டுகரதில்லன்னு அஞ்சல் எழுதுவதும் கலக்கல்.
Post a Comment