Thursday, October 7, 2010

சில பரீட்சை கேள்விகளும் அதற்கான பதிலும்

பரீட்சையின் போது ஒன்று ஒழுங்காக படித்திருந்தால் பதில் எழுதுவதில் பிரச்சினை இருக்காது. இல்லை பிட் எடுத்துச் சென்றிருந்தாலாவது சமாளித்து விடலாம். ஆனால் இது இரண்டையும் செய்யாது போனால்??

நமது (எனது) ஹீரோ வாத்தியார் சு.சு. ஒரு கதை சொல்வார். தமிழ் பரீட்சையின் போது ஒரு பையன் மாடும் அதன் பயன்களும் பற்றி நன்றாக நெட்டுரு போட்டு சென்றிருந்தான். ஆனால் எதிர்பாராதவிதமாக கேள்வி மரமும் அதன் பயன்களும் பற்றி வந்து விட்டது. என்ன செய்ய? பையன் அசரவில்லை, மரம் இருந்தால என ஆரம்பித்து, பின்பு இரண்டு பக்கங்களுக்கு மாட்டைப் பற்றி விளாவாரியா எழுதிய பின், கட்டுரையின் கடைசியில் இப்படிப்பட்ட மாட்டை இந்த மரத்தில் கட்டி வைக்ககலாம் என முடித்திருந்தான். ஆக இந்த மாதிரியான புத்திசாலித்தனம் வேண்டும். உதாரணத்துக்கு இதே மாதிரியான ஆங்கில கேள்விக்கு என்ன மாதிரியான பதில் எழுதியிருக்கிறார்கள் என கீழே உள்ள படத்தில் பார்க்கலாம்.




இந்த பதிலை திருத்தி அதற்கும் அரை மதிப்பெண் கொடுத்துள்ள வாத்தியாரை பாராட்டத்தான் வேண்டும். மேலும், ஆங்கிலத்தில் கேட்டாலும் ஹிந்தியிலும் பதில் எழுதி கலக்குவது...




பின்பு தனக்கு பிடித்ததை வெளிப்படையாக சொல்லி திருத்தும் வாத்தியாருக்கு ஜொள்ளு வருமளவிற்கு விவரித்து அவரையும் வீட்டுக்கு சாப்பிட கூப்பிடுவது..



ஆங்கலம் இப்படி என்றால், கணித புலிகள் சில அளிக்கும் பதில் புல்லரிக்க வைக்கும், உதாரணத்துக்கு சில:










ஆக மக்களே படிக்கும் போது இப்படி எல்லாம் பதில் அளிக்கலாம் என தெரியாமல் போயிருந்தால் இப்போது உங்க பசங்க உங்களை கேள்வி கேட்டா இந்த மாதிரி பதில் சொல்லி சமாளிக்க தெரிஞ்சுக்கோங்க.

[பிகு: இந்த படங்களை நான் ஏற்கனவே பாத்துட்டேன், என பின்னூட்டம் விடறவங்களுக்கு, ஆயிரம் கேள்வி அனுப்பி பதில் எழுத வெக்கப்படும் ஜாக்கிரதை.]

1 comment:

ஜெயந்தி நாராயணன் said...

சு.சு வ ஹீரோ வா வச்சுக்கறதுக்கு தனியா பஞ்சாயத்து வைக்கனும்.

அப்புறம் பதில்கள் அனைத்தும் LOL:)

போன வாரம்தான் என் பையன் கேட்டான், “ சின்ன பையனப் போய் ஔரங்கசீப் பத்திலாம் படிக்க சொல்றியே? என் மனசு கெட்டு போய்டாதான்னு.”
எப்படியோ சரித்திரம் பூகோளம் படிக்காமயே சமாளிச்சு நான் எல்லா வகுப்பும் பாஸ் பண்ணின மேட்டர நான் சொல்லல. ஓரு வேலை என்னுடய His/Geo பேப்பர் பார்த்தா இது மாதிரிதான் காமெடியா இருந்துருக்குமோ??