Tuesday, January 4, 2011

மன் மதன் அம்பு

டிசம்பர் லீவு விடறதுக்கு முன்னாலயே (பரீட்சை நடக்கும் போதே) அப்பாவும் பசங்களுமா சேர்ந்து ஆன் லைன் புக்கிங் கு ப்ளான்.

“அம்மா க்ரடிட் கார்ட் எடுத்துண்டு வா ஞாயித்துக் கிழம மார்னிங் ஷோ இருக்கு” கடைசி நேரத்தில் இந்த வேலைக்கு மட்டும் எப்பவும் அம்மா.

“ஏய் எனக்கு புக் பண்ண வேண்டாம், கமலஹாசன் ஏற்கனவே ஏடாகூடமான ஆளு, இதுல படம் பேரே சரி இல்லை” - நான்

“அதெல்லாம் சேர்த்து பன்ணியாச்சு, நீ இப்ப வந்து பே மட்டும் பண்ணு”

சனிக்கிழமை ராத்திரியே, “ எனக்கு கோல்ட் ரொம்ப இருக்கு ஏ.சி ல உக்கார்ந்தா ஜாஸ்தி ஆயிடும், பேசாம நீ குழந்தைகள கூட்டிண்டு போய்ட்டு வா” – என் கணவர்

நாங்க சின்ன வயசுல காலைல எழுந்து வேலை எல்லாம் முடிக்காமல் குமுதம், விகடன் கூட படிக்க மாட்டோம். (சொல்ல மறந்துட்டனே காலை 8.15 க்கு ஷோ)

கோபம் உச்சந்தலையில் ஏறினாலும் வேறு வழியில்லாமல் (ஞாயித்துக் கிழம கூட தூங்க விடாம) கிளம்பினேன்.

“மார்கழி மாசம்ன குழந்தைகள அழச்சுண்டு ரெண்டு கோயில் போய்ட்டு வருவா…………” _ மாமியாரின் நியாயமான கமெண்ட்.

நல்ல வேலை ஒரு டிக்கட் மட்டும் வேறு ரோவில் கிடைத்திருந்தது விற்க செளகரியமா. ஒரு நடுத்தர வயசு லூசு டிக்கட்ட வாங்கிண்டு நம்ம ரோ எது எது கேட்டு தொல்ல பண்ண அதுனோட ரோ வேறன்னு அனுப்பறதுக்குள்ள அப்பா……………

இவ்வளவு கஷ்டத்துக்கு பின் நல்ல வேளை கமல் ரொமான்ஸ் பண்ணி கஷ்டம் கொடுக்கல. சின்ன குழந்தைகளுக்கு தூங்கறதுக்காக கதை பில்ட் அப் பண்ணி பில்ட் அப் பண்ணி சொல்வோமே அது மாதிரி செட்ல வந்து கமலும் ரவிகுமாரும் யோசிச்சு யோசிச்சு படம் எடுத்துருக்காங்க. கமல் ரொம்ப டைம் எடுத்து யோசிச்சு படம் எடுத்தாலும் கஷ்டமாத்தான் இருக்கு. இந்த மாதிரி மொக்க காமெடி படம் எடுக்கறத எப்ப நிறுத்தப் போறாங்கன்னு தெரியல. த்ரிஷா எப்பொழுதும் போல் டோட்டல் வேஸ்ட். மாதவனும் சங்கீதாவும் பரவாயில்லை.

ஆஸ்கார் பெறப்போகும், பத்மஸ்ரீ உலக நாயகன் தயவு கூர்ந்து நல்ல தரமான படங்கள் தந்தால் புண்ணியமாகப் போகும்.

5 comments:

VTN said...

வகுப்புல சினிமா படம் பத்தி பேசினா எனக்கு கெட்ட கோபம வரும். அதுவும் ஒலக நாயகன் நடித்த ம.ம.அ மாதிரி டுபாக்கூர் படம் பத்தி எழுதி உங்க பொன்னான நேரத்தை வீணாக்குவதை கண்டிக்கிறேன்.

இது போதாதுன்னு அதுக்கு பி.ஊ வேற. பின்னூட்டத்தை வலையிலே இட்டால் அது யாஹு குழும அஞ்சலுக்கு தானாகவே வந்து சேரும். அந்தந்த பதிவுக்கான பின்னூட்டஙகள் அதனுடனே இருப்பது நல்லது, மாணவர்கள் தயவுசெய்து இதனை கடைபிடிக்கவும்.

இந்த ஜெயின் பதிவுக்கான தல மற்றும் சங்கரியின் பி.ஊ இங்கு:
-----------------------------------
கமலஹாசனும் சரி K.S.ரவிக்குமாரும் சரி, நல்ல பொழுது போக்கு படங்களை தருபவர்கள். ஜெ, உன்னைப்போலவே நானும் நொந்து போயிருக்கேன். இப்படியொரு சாதாரணமான படத்தை இந்த ரெண்டு பெரும் புல்ளிகளிடமிருந்து யாரும் எதிர் பார்த்திருக்க முடியாது. மாதவனும் சங்கீதாவும் கூட, கமல் த்ரிஷா போல waste தான். இசையும் கூட சரியில்லை.
கடைசி காட்சியில் திடீரென்று கமல் த்ரிஷாவை ஜோடி சேர்த்துக்கொள்வதும், படம் முழுக்க சந்தேக பிராணியாக வந்த மாதவன், இரண்டு குழந்தைகளுக்கு தாயான சங்கீதாவை ஜோடி சேர்த்துக்கொள்வதும் ... ஏற்றுகொள்ள முடியவில்லை ... ஏதோ ஆங்கில படம் போல இருக்குது.
Flash back song, screenல பின்னாடியே நகர்ந்து போவது ஒரு புதுமை.
தன்னுடைய்ய வெற்றிப்படங்களில் எல்லாம் கடைசி காட்சியில் K.S.ரவிக்குமார் வருவார் ... இந்த படத்தில் ஏனோ வரவில்லை.
Venice, Spain, UK, Cruise ship, Colloseum, Kamal, Trisha, K.S.Ravikumar என்று வியாபாரம் செய்ய பல விஷயங்கள் இருந்தும், எதுவும் சரியாக காட்டப்படவில்லை as well as பயன் படுத்தப்படவில்லை.
யாரும் போயி பணத்தை waste செய்யாதீங்க. பொங்கலுக்கு கலைஞர் TVல போட்டாலும் போட்ருவாங்க.

Laksh

----------------------------------
நாங்களும் ஒரு 11 டிக்கெட் வாங்கிக்கொண்டு எங்க கும்பல இழுத்திட்டு போனோம். சின்ன டிக்கெட் எல்லாம் ரொம்ப ரசித்து பார்த்தாங்க , என்னதான் குறை கூறினாலும் without logic வாய்விட்டு சிரித்தோம். கொஞ்சம் climax சொதபல் , மற்றபடி எல்லா இடங்களையும் சுற்றிபார்ததுபோல் ஒரு திருப்தி

படத்திலேயே மனதில் நின்ற ஒரே விஷயம் ஊர்வசியின் நடிப்பு , ரொம்ப யதார்த்தம், KS ரவிக்குமார் படம் பார்த்தது போல் இல்லை , something is missing

Shankari
----------------------------------

கிவியன் said...

//ஆஸ்கார் பெறப்போகும், பத்மஸ்ரீ உலக நாயகன்(in Chennai)// இப்படி உசுப்பேத்தி இவரு தலைக்கணம் கூடிப்போயி இப்பெல்லாம் இவரு பேசுர தமிழே யாருக்கும் புரியரதில்ல. கே.எஸ். ரவி டைரக்டர் டைட்டிலுக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான் டைரக்‌ஷனுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை(இது தசாவதாரத்துக்கு முன்பே இப்படித்தான்).

நல்லவேளை, உங்களைப்போல என் காசை கரியாக்கவில்லை. ரிலீசான இரண்டாவது நாளே வலையேற்றம் செய்யப்பட்டதால் ஹோம் தியேட்டரில் போனில் பேசியபடி, புத்தகம் படித்தபடி நடுநடுவே பார்த்து (ஒரு வழியாக) முடித்தேன். இப்படி பாக்காதீங்கோன்னு கமல் நீட்டி முழக்கி செந்தமிழ்ல பேசுவாரு. இப்படிப்பட்ட விள்க்கெண்ணை படத்த வேர எப்படி பாக்குறதாம்?

முதலில் கதைக்கான கருவே கோளாரு, காதல்ல சந்தேகம் வந்திருச்சுன்னா அப்புறம் என்ன ம&*( அது காதல்? சில பல ஆங்கில படத்துல இருந்து உருவி அரை குறையா ஒரு மொக்கை படம்.

ஜெயந்தி நாராயணன் said...

ஆஸ்கார்னு ப்ளாக் லெட்டர்ல போட்டதே காமெடிக்கு தான்.

கமலஹாசன் பேட்டியெல்லாம் நான் கேக்கறதே இல்ல. முற்றுப் புள்ளியே இல்லாமல் அரை மணி நேரப் பேச்சு. எங்க யாருக்காவது புரிஞ்சுடப் போறதோன்னு பெரிய தமிழ் ஆர்வலர் மாதிரி ரொம்ம்ம்ம்ப தமிழ் பேசி சாவடிக்கிறார். தான் பெரிய அறிவு ஜீவின்னு நினைப்பு. தாங்க முடியல…

@ VTN நாங்கள்ளாம் சயின்ஸ் பீரியட் நடக்கறச்சயே கதை புஸ்தகம் படிச்சுட்டு இருந்த ஆளுங்க இப்ப சினிமா பத்தி பேசாதன்ன…..

Lakshmanan said...

மன்னிக்கவும் VTNசார், பின்னூட்டத்தை இங்கு பதிவு பண்ணாததற்கு.

அதே மாதிரி நாங்கெல்லாம் class நடக்கும் போதே transistorஅ benchக்கு உள்ள வச்சு படுத்தவாறு commentary கேட்ட ஆளுக.

இந்த படம் ஒரு புது முகம் நடித்திருந்தால் இவ்வளவு விமர்சனபட மாட்டாது. கமல் போல பெரும் கைகள் பல இருந்து இப்படியொரு படமா என்று நொந்து தான் இந்த discussion.

sreesnake said...

லக்ஷ்மணன் "கடைசி காட்சியில் திடீரென்று கமல் த்ரிஷாவை ஜோடி சேர்த்துக்கொள்வதும், "....அப்பாடா!! அவங்க எப்ப ஒண்ணு சேர்ந்தாங்க என்று எனக்கு மட்டும் தான் புரியவில்லேன்னு நெனெச்சேன்!! த்ரிஷா கார் ஒட்டிக்கிட்டே மாதவனோட சண்ட போடும்போது, பழைய படங்கள்லே வர்ற மாதிரி 'steering' போட்டு ஓடி ஓடின்னு அங்கிட்டும் இங்கிட்டும் மாத்தி மாத்தி ஒடிச்சு....யப்பப்பா!!