நான் உள்ளே வந்த போது (10 மணியிருக்கும்), punctualஆக இருக்கணும்னு ஏற்கனவே சொன்னதனாலோ என்னவோ, நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். (அந்த காலத்துல நடந்து போன பாதையில் இன்று பலரும் சர்ர்ருன்னு carகளில் வந்தனர்)
விழாவிற்கு ஒரு hallல் மேடை அமைத்திருந்தார்கள். நாம் படிக்கும் போது அது ஏதோ ஒரு lab இருந்த இடம் என்று நினைக்கிறேன். வினோத், தினகர் மற்றும் சிலர் நீல வண்ண banner கட்டிகொண்டிருந்தனர். 11c மற்றும் 12c (நான் படித்த வகுப்புகள்) பக்கம் போய் எட்டிப்பார்த்து விட்டு ஆசிரியர்களை சந்தித்தேன். Saroja டீச்சர் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். சற்றே யோசித்து விட்டு, உன் கையெழுத்து எனக்கு இன்றும் நினைவிருக்கிறது, முத்து முத்தாய் எழுதுவியே என்று பழைய காலத்துக்கு கொண்டு சென்றார்கள்.
வந்திருந்த ஆசிரியர்கள் - சரோஜா டீச்சர், மங்களம் டீச்சர், உமா மாலினி மேடம், ராமநாதன் சார், அருணாசலம் (தமிழ்) ஐயா, மகாதேவன் சார், எபினேசர் சார் (நம் HM) மற்றும் கல்யாணசுந்தரம் சார் (இன்றைய HM).[01Teachers.jpg]
சந்திப்பு-5 (MEET-5) 10.30 மணியளவில் TVS பள்ளியின் Director ஸ்ரீனிவாசன் வந்தவுடன் ஆரம்பமானது. வினோத் (11B, 12B) [02Vinod.jpg] வரவேற்புரையாற்றிய பின் ஆசிரியர்களை உரையாற்ற சொன்ன பொழுது, முதலில் பழைய மாணவர்கள் அறிமுகப்படுத்திக்கொள்ளட்டும் அதன் பின்பு ஆசிரியர்கள் உரையாடுகிறோம் என்றனர். அப்பொழுது அருணாசலம் அய்யா, எல்லோரும் தமிழிலேயே பேசுங்கள் என்றார், இருப்பினும் ஒரு சிலரை தவிர எல்லோராலும் தமிழில் பேச முடியவில்லை. அனைவரும் ஒவ்வொருவராக ஓரிரு நிமிடங்கள் பேசினர். நான் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டு வரை TVS பள்ளியில் படித்தேன். அனால் சில பெண்கள் பேசும் பொழுது தான் எனக்கே தெரிந்தது, பலர் முதல் வகுப்பிலிருந்து அங்கு படித்தனர் என்பது. [03
பின்பு தற்போதய HM கல்யாணசுந்தரம் சார் உரையாற்றினார். அவர் நமக்கு முன்னால் டிவிஎஸ் பள்ளியில் படித்த பழைய மாணவர் என்றும், பின்பு அதே பள்ளியில் ஆசிரியராக சேர்ந்து இன்று தலைமை ஆசிரியராகியது பெரிய பாக்கியம் என்றார். விழா முழுவதும் சிரித்த முகத்தோடே இருந்தார். [04Kalyanasundaram.jpg]
அதனையடுத்து டைரக்டர் ஸ்ரீனிவாசன் அவர்கள் உரையாற்றினார் [05Srinivasan.jpg]. அவர் TVS குழுமத்தில் தற்பொழுது பல பள்ளிகள் இருப்பதாகவும், 12000 மாணவ மாணவிகள் படிப்பதாகவும் கூறினார். அதனையடுத்து அனைத்து ஆசிரியர்களுக்கும் நம்முள் ஒருவரை அழைத்து ஒரு நினைவு பரிசு வழங்கினோம் [06----.jpg] (TITAN கைகடிகாரம், ஏற்பாடு வினோத்).
Tea Breakல் மைசூர்பா, மிக்சர், சமோசா, டீ கொடுக்கபட்டது (ஏற்பாடு வினோத், தினகர்).
அதன் பின்பு ஆசிரியர்கள் ஒவ்வொருவராக பேசினார்கள். முதலில் நமது HM என்று நான் அழைத்த பொழுது, கல்யாணசுந்தரம் சார் "நான் தான் ஏற்கனவே பேசிவிட்டேனே" என்றார், நான்: "மன்னிக்கணும் சார், HM என்று நான் அழைத்தது நாங்கள் படித்த பொழுது எங்களுக்கு HM ஆக இருந்த எபினேசர் சாரை" என்றவுடன் சற்றே தர்ம சங்கடமாக இருந்தாலும் அனைவரும் சிரித்ததால் ஒன்றுமாகவில்லை.
எபினேசர் சார்: "நீங்கள் அனைவரும் இன்று பெரியவர்களாகி பல துறைகளில் மேலோங்கியிருக்கிறீர்கள், அதனால் உங்களை நான் மாணவர்கள் என்று அழைப்பதை விட, Friends என்று அழைக்கவே விரும்பிகிறேன்" என்றார். மேலும் அவர் இந்த meet பழைய மாணவர்கள் நடத்துகின்ற மூன்றாவது group என்றும், அனைத்து groupகளும் ஒன்றாக இணைந்து ஏதேனும் நற்காரியங்கள் செய்தால் நல்லது என்றார். தெய்வானையை பார்த்தவுடன், வளையல் ஞாபகம் இருக்குதா என்றார். தெய்வானைக்கு அது மறந்துவிட்டது. "பரீட்சையில் வட்டம் வரைவதற்கு (தங்க) வளையலை உபயோகித்து, மறந்து ஹாலிலேயே விட்டு விட்டு சென்று, ஒரு நல்ல attender அதனை எடுத்து கொடுத்து, மறு நாள் தான் நீ வாங்கி சென்றாய்". இது போல சில விஷயங்களால் சிலரது முகங்கள் மறக்காது என்றார். [08aEbi.jpg]
அதன் பின்பு தமிழ் ஐயாவை பேச அழைக்குமாறு முதலிலேயே கல்யாணசுந்தரம் சாரும், மகாதேவன் சாரும் எனக்கு சிமிங்கை செய்தனர். ஆகையால் அடுத்து அவரை அழைத்தோம். அவருக்கே உரித்த பாணியில், தமிழ் பாடலுடன் ஆரம்பித்து தூய சங்க தமிழில் மிகவும் அருமையாக உரையாற்றினார். எனக்கும் சங்கரிக்கும் ஒரு பெருமை வேறு கிடைத்தது. அவர் "பலரது முகங்கள் ஞாபகத்துக்கு வந்தாலும், இரண்டு பேரது பெயர் மட்டும் எனக்கு மறக்கவில்லை ஒன்று லெட்சுமணன், இன்னொன்று சங்கரி". புல்லரித்தது! ஆரம்பிக்கும் போதே அவர் 'முடிக்கும் பொழுது ஆனந்தத்தில் முடிப்பேன்' என்று கூறி 15 நிமிடங்களுக்கு மேல் பேசி (அவர் வகுப்பு எடுக்கும் போது இருந்த அதே நகைச்சுவையுடன்), கடைசியில் வாழ்க்கையில் 'ஆனந்தம்' தேவை என்று 'ஆனந்தம்' பற்றி சிலவற்றை கூறி முடித்தார். [08bArunachalam.jpg]
அடுத்தது மகாதேவன் சார்: "நாங்கள் எல்லாம் சீக்கிரம் முடித்து விடுவோம் அனால் அருணாசலம் மட்டும் நீண்ட நேரம் பேசுவார், அதனால் தான் அவரை முதலில் பேச அழைக்குமாறு கூறினோம் ... இல்லையேல் lunch தாமதமாகி விடும். நீங்கள் படித்த காலத்தில் உங்களை நாங்கள் அடித்தோம். உங்கள் பெற்றோர் அதனை தட்டி கேட்டது கிடையாது ஏனெனில் ஆசிரியர் மேல் அன்று மரியாதையும் பயமும் இருந்தது. நீங்கள் சென்ற 10 வருடங்கள் கழித்து, மரியாதை போனது அதனையடுத்த 10 ஆண்டுகளில் பயமும் போனது. இப்போவெல்லாம் நாங்க பாட்டுக்கு class மட்டும் எடுத்துட்டு வந்துவிடுவோம் – அவன் நம்மள அடிக்காம இருந்தா பெரிய சங்கதி. Tuition படிச்சிட்டு வந்து வாத்தியார் எடுக்குறது correctஆன்னு வேற check பண்றான் .... எங்களைப்பற்றி நீங்கள் ஏதாவது feedback கொடுக்கணும்னா கொடுங்கள்." [08cMahadevan.jpg]
மங்களம் டீச்சரும் [08dMangalam.jpg] உமாமாலினி மேடமும் [08eUma.jpg] மிகவும் சுருக்கமாக பேசி, ஓரிரு அட்வைஸ் மட்டும் கொடுத்தார்கள். முக்கியமான அட்வைஸ் 'குழந்தைகளை TV பார்க்க அனுமதிக்காதீர்கள்'.
Ramanathan Sir: நான் எடுத்தது என்னவோ history and geography தான், அதனால நீங்க எல்லாம் பெருசாகிட்ட மாதிரி நான் சொல்ல மாட்டேன் ஆனால் எங்களிடம் படித்தவர்கள் இன்று நல்ல நிலைமைக்கு வந்து எங்களை கௌரவிக்க வந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நாங்க இன்னைக்கும் நல்லா இருக்கோம் அதற்கு உங்கள் அன்பை எல்லாம் விட இன்னொன்று இருக்கு – அது நம்ம பழைய HM ராமசாமி ஐயங்கார் … பின்பு அந்த வழியில் நம்மளை நடத்தி சென்றார் எபெனேசர் சார் … அதே வழியில் இன்று கல்யாணசுந்தரமும் நல்லா நடத்திட்டு இருகாரு. நீங்கள் எல்லாம் சேர்ந்து schoolக்கு ஒண்ணும் செய்ய வேண்டாம், management நல்லாவே செய்றாங்க, ஏழை மாணவர்களுக்கு உதவுவதற்கு ஏதாவது செய்யலாம். (அவரும் நீண்ட நேரம் பேசினார்). [08fRamanathan.jpg]
saroja டீச்சர் மட்டும், அவர்களுடைய கணவருக்கு டாக்டர் appointment இருந்ததால் உடனே சென்று விட்டார்கள்.
பின்பு மகாதேவன் சார் சொன்னது போல் ஏதாவது கேட்க வேண்டுமானால் கேட்கலாம் என்ற போது நாராயணன் மட்டும் ஓரிரு விஷயங்கள் கடவுள் பற்றி கூறினான். [09Narayanan.jpg]
வேறு ஒருவரும் எதுவும் கேட்காதலால் நான்: Mahadevan சார், நாங்கள் படிக்கும் பொழுது பயமும் இருந்தது மரியாதையும் இருந்தது, ஆனால் இன்று அது இரண்டுமே இல்லை என்றார்கள் … அப்போ இந்த generation மாறி போய்விட்டதா …. அதற்கு எல்லா teachersம் ஒன்று சேர ‘ஆமா' என்றார்கள். அதற்கு நான் ‘அப்போ நாங்கள் என்ன செய்ய வேண்டும் … ஏன்னா இந்த generationஓட parents நாங்க' என்று கேட்டதற்கு …. நீங்கள் படிக்கும் பொழுது உங்கள் parents உங்கள் மேல் கண் வைத்து கொண்டே இருந்தார்கள், அது போல் நீங்களும் ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள், பிள்ளைகளை உங்கள் பார்வைக்கு அப்பால் விட்டு விடாதீர்கள்.
மேலும் இன்றைய valuation முறை பற்றியும், teachers தரம் பற்றியும் ஓரிரு கேள்விகளை நான் கேட்டேன், அதற்கு எல்லா ஆசிரியர்களும் பதில் தந்தார்கள். [09…….jpg]
கொத்து பரோட்டா, vegetable பிரியாணி, காலிபிளவர் மஞ்சூரியன், தயிர் சாதம், chips, குலப் ஜாமூன் – இது தான் சாப்பாடு menu.
மதிய சாப்பாடு முடிந்தவுடன், ஆசிரியர்கள் சென்று விட்டார்கள். 10Cல் படித்தவர்கள், அந்த வகுப்பை திறக்க சொல்லி, அவரவர் உட்கார்ந்த பெஞ்ச்களில் உட்கார்ந்து, அன்றைய காலத்தை சற்றே உணர்ந்து பார்த்தனர். அந்த தருணம் மிகவும் சந்தோஷமான தருணம், பல photos click செய்தோம்.
செலவுகளுக்காக எல்லோரும் Rs.500 பகிர்ந்தனர்.
மாலை சந்திப்பும் இருந்தது. Ramesh, Baskar தங்கள் துணைகளோடு வந்தனர். முருகன் தன் பையனை அழைத்து வந்தான். மீனாக்ஷி, அவளது தங்கை மகளை அழைத்து வந்தாள். மற்றவர்கள் அனைவரும் தனியாக வந்தனர் (பெண்களும் தான்).
இரவு சாப்பாட்டு பங்கு ஒரு ஆளுக்கு Rs.130 (கூட்டி இருந்திருக்கலாம், ஏனெனில் கடைசியில் பற்றாக்குறை ஆனது)
கடைசியாக நானும் தினகரும் Waalai Restaurant billஐ settle பண்ணி விட்டு Madurai meetஐ முடித்தோம்.
It was an experience which had to be felt. Every one who was present that day had the privilege to enjoy such a great day in life. Another day with so many of us entering into the school at the same time after almost three decades cannot happen again. I think for those who missed, it would be a costly miss. Meet you all again soon, probably in Chennai during (Kiwiyan) Suresh’s visit in October 2011. Would make an announcement soon. வணக்கம்.
The same post with photos will come in yahoo group after a while.
6 comments:
"idha idhathan edhir parthen lechu"
Thank you very much for this detailed posting.
If I had come to the meeting one thing I would have told about BSM(mahadevan sir). In my 10th std i had never gone for tuition nor i have worked out maths at home(even before the exam day) - promise... The way he taught directly went to my mind and there was no need for revising it again. I got 82% in 10th. If I had worked at home also I would have got more marks. but I did it in 12th and got 200 out of 200. And a maths degree with distinction. All the credit goes to BSM sir for creating interest in the subject at the basic level. He used to be very strict in Maths class, but jovial in English class.
Lalitha,
If you get a chance , please pass on this.
லெட்சு
மிக நல்ல பதிவு. நேரில் கலந்து கொண்டமாதிரி ஒரு உணர்வு, இத மாதிரி ( நேரம் கிடைக்கும் சமயம்) மற்ற விஷயங்களையும் பகரந்துகொள்ளவும். நான் வந்திருந்தால் கண்டிப்பாக ஜெயந்தி பதிந்தது போல் மகாதேவன் சார் உடன் நீண்ட நேரம் பேசி இருப்பேன். நான் அவரிடம் நெறய கேள்விகள் கேட்டுள்ளேன். உதரணமாக ஒரு முறை அவர் (நமக்கு 10 வது ஆங்கிலம் நடத்திய சமயம்) அவர் Lateral thinking பற்றி கூறிய உதராணங்கள் பற்றி இன்றும் நினைத்து பார்கிறேன். கணக்கு பாடத்தில் அவர் நடத்திய Set தியரி இன்னும் பளிச்சென்று ஞாபகம் வருகிறது. முக்கியமாக Dis-joint sets சித்தாந்தங்கள் இன்று வரை உபயோகம் செய்கிறேன். ராமநாதன் சார் பூகோளம்/சரித்திரம் தவிர UN/GK வகுப்பு ஒன்று நடத்துவார், சிலபல வருடங்கள் இதில் கலந்து கொண்டது இன்றும் ஞாபகம் இருக்குது..
என்ன VTN சார் வந்திருந்தால் எப்புடி இருந்திருக்கும் என்று யாராவது ஒரு கற்பனை செய்து எழுதுங்களேன் ..
சிவா
சதுர்த்தியும் ரம்ஜானும் இதற்காகவே என்பது போல நீ...ள பதிவு. ஆனா குறை சொல்லலேன்னா தூக்கம் வராது பாருங்க அதனால தல ஏன் படங்கள் தெரியவில்லை?? வேர்ட் டாக்குமெண்ட் உபயோகித்து எழுதியிருக்கிறாய் என தெரிகிறது. படங்களுக்கான இணைப்பை தனியாக கொடுத்தால்தால் வேலை செய்யும். அநேகமாக அடுத்து நவராத்திரி வருகிறது அப்போது செய்யலாம் சுண்டல் சப்பிட்டுக்கொண்டே!
அருமையான பதிவு (இதயும் சொல்லனும் பாருங்க)
//இரவு சாப்பாட்டு பங்கு ஒரு ஆளுக்கு Rs.130 (கூட்டி இருந்திருக்கலாம், ஏனெனில் கடைசியில் பற்றாக்குறை ஆனது)// அது என்னவோ தலைவா என்று சொன்னாலே புரியாத மாதிரி எப்படிதான் பேச வருதோ. சாப்பாடு பற்றாக்குறையா இல்லை சாப்பாட்டுக்காக வசூலித்த பணப் பற்றாக்குறையா? அட சொல்லு தலைவா செலவுக்கு நான் ஏதாவது உதவனும்னா.
மகாதேவன் சாரின் பதில்:
//உங்கள் parents உங்கள் மேல் கண் வைத்து கொண்டே இருந்தார்கள், அது போல் நீங்களும் ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள், பிள்ளைகளை உங்கள் பார்வைக்கு அப்பால் விட்டு விடாதீர்கள்// இதில் எனக்கு உடன்பாடில்லை. இந்த தலைமுறையை விட அந்த காலத்தில் குறைந்தது எல்லோர் குடும்பத்திலும் சுமாராக மூன்று குழந்தைகள் இருந்தார்கள். இதில் கண்னை யாருக்கு என்று வைத்தார்கள்? என் மீதெல்லாம் அப்படி வைத்ததாக தெரியவில்லை. ஆனால் இயல்பாகவே நம் பெற்றோர் மீது ஒருவித பயம் கலந்த மரியாதை இருந்ததால் ஏதோ ஒரு சமூக கட்டுப்பாட்டுக்கு வேண்டி படித்துவிட்டோம். இப்போது அப்படி இல்லை. குடும்பம் என்றால் ஒரே குழந்தை அதிகம் போனால் அல்லது ஆக்ஸிடெண்ட் ஆனால் இரண்டு. இப்போதெல்லாம் அப்பாவும் அம்மாவும் இணைந்து வாழ்ந்தாலே அது ஜாயிண்ட் ஃபேமிலி என்கிற மாதிரி ஆகிவிட்டது. இதனால் இந்த காலத்தில் குழந்தையின் மீதே முழுக் கவனமும் இருக்கிறது என்பேன். கிட்டத்தட்ட குழந்தையை சுற்றியே முழு குடும்பமும் சுழல்கிறது. அப்படி இருந்தும் நமக்கு சில/பல சமயம் இந்த காலத்து பொடிசுகள் அல்வா கொடுத்து விடுகிறார்கள். எனக்கென்னவோ இது காலத்தினால் வரும் மாற்றங்களே என்பதால் இதை தவிர்க்க முடியாது. அட கமெண்டே முழு பாதிவாகிவிடும் போல இருக்கிறது, போதும் இத்தோட ஜூட்.
நீ சொல்வது முற்றிலும் சரி சுரேஷ். அந்த காலத்துல சில வீட்டுல ஏழெட்டு டிக்கட் கூட இருக்கும். பெற்றோருக்கு குழந்தைகள் எந்த வகுப்பில் படிக்கிறர்கள் என்று சில சமயம் தெரியாது. யோசித்து தப்பா சொல்வாங்க:)))) கால் கண் வச்சிருந்தா கூட நான் இன்னும் கொஞ்சம் அதிகம் மார்க் வாங்கி இருப்பேன்.
சுரேஷ், நான் comments பார்க்க miss பண்ணிட்டேன்.
கடைசியாக இப்படி குறிப்பிட்டிருந்தேன் "The same post with photos will come in yahoo group after a while." படிக்கலையா?
Yahoo groupல PDF document, photos உடன் அனுப்பி இருந்தேன்.
அட என்னப்பா பணத்துக்கு பக்கத்துல bracketல போட்டா பணம் தான் பற்றாக்குறை என்று தெரியாதா?
நீங்கள் (சுரேஷ் and ஜெ) சொல்வது தப்பு என்று தான் நான் நினைகிறேன். எனக்கு தெரிஞ்சு எத்தனையோ பெற்றோர், பிள்ளைகளை பாராமல் club மற்றும் party போய் கொண்டு இருக்கிறார்கள். அந்த பிள்ளைகள் எல்லாம் அததுக்கு பிடித்த மாதிரி சுத்துதுக. தவறும் செய்யுதுக. அதுகள வழி நடத்திட்டு போறது Internet - facebook, orkut, twitter, google+, malls, தொல்லை காட்சி, தொல்லை பேசி.
அப்பாவும் அம்மாவும் இணைந்து வாழ்ந்தாலே joint family ... ஹ ஹ ஹ நல்லா சொன்னே.
/அட என்னப்பா பணத்துக்கு பக்கத்துல bracketல போட்டா பணம் தான் பற்றாக்குறை என்று தெரியாதா?//
அவன் தான் நக்கல் அடிச்சான்ன, நீ அஞ்சாம விளக்கம் கொடுக்கற. 8ம் தேதி பற்றாக்குறைக்கு கலெக்ஷன் போடுவ போல. தல .. பத்தலன விட்ருப்பா....:))
// எனக்கு தெரிஞ்சு எத்தனையோ பெற்றோர், பிள்ளைகளை பாராமல் club மற்றும் party போய் கொண்டு இருக்கிறார்கள்.//
நீ ரொம்ப மேல் தட்டை பற்றி பேசுகிறாய். நடுத்தர வர்க்கம் அப்படி இல்லை. நான் 12 வருடங்களுக்கு மேலாக பள்ளியில் பல பெற்றோரை பார்க்கிறேன். அதது மறுபடியும் ஒன்றிலிருந்து 12ம் வகுப்புவரை படிக்கறாங்க. (புது சிலபஸ் இல்லயா)
நாம் எப்படி இருக்கிறோம். யோசித்தாயா??
Post a Comment