நண்பர்களே, சமீபத்தில் நமது தோழி ஜெயந்தி, அமெரிக்காவில், தகவல் தொழிநுட்பத்தில் நல்ல வருமானம் இருந்த வேலையை விட்டு இந்தியாவுக்கு திரும்பி, தான் சம்பாதித்ததைக் கொண்டு மிகவும் பின் தங்கிய ஒரு கிராமத்தில் சேவை செய்பவரை பற்றிய குமுதம் பத்திரிக்கை செய்தியை அனுப்பியிருந்தார். நிஜமான ஒரு சிவாஜி! (படம் வெளிவருவதற்கு முன்பே!!).
நிற்க அதற்குத் தக..என்பதற்கு சிறந்த உதாரணம். உங்களில் சிலருக்கு இதைப் பற்றி தெரியாதிருந்தால் அந்த செய்தியை இங்கு சென்று படிக்கலாம்.
நாமும் இந்த அளவுக்கில்லாவிட்டாலும் இதுமாதிரி ஏதாவது செய்ய முடியுமா என்று கேக்கத்தான் இந்த பதிவு.
அண்ணா அதெல்லாம் நம்மால முடியுமான்னு? கேக்க தோணும். தனியா முடியாட்டாலும் நம்ம வகுப்பறை மக்கள் எல்லோரும் சேர்ந்து செய்யலாமே. இப்படி யோசித்து பாருங்கள். ஒவ்வொரு வகுப்பறை மாணவர்களும் தாங்கள் வளர்ந்து ஒரு நல்ல நிலைக்கு வந்த பின் ஒன்றாக இந்த மாதிரி ஏதாவது சமூக சேவை செய்தால் நாட்டுல பல வற்றை முன்னேத்தலாமே?
சிலர் நிதி/பொருள் உதவி செய்யலாம். நிதி முடியாவிட்டால் தங்களால் இயன்ற சேவை அதாவது வேலை, field work செய்யலாம். இப்படியே நமக்காக மட்டுமே வாழ்ந்து மறைந்து போவதற்காகவா பிறந்தோம்?
ஆக மக்கள்ஸ், இத படிச்சிட்டு யோசிங்க. என்ன செய்யலாம்னு உங்களுக்கு தோணுதோ அத இங்க சொல்லுங்க. எல்லோருமா சேர்ந்து விவாதித்து ஏதாவது உருப்படியா செய்யலாம்.
பிகு: படிச்சமா பாரட்டினோமான்னு போகாம பேக்கு நாமளும் இந்த மாதிரி செய்யலாம்னு பாய பிராண்டுதேன்னு தோணினாலும் அதையும் பயப்படாம சொல்லுங்க. கேட்டுக்குவோம்ல. ஆட்டோல ஆளெல்லாம் அனுப்ப மாட்டோம்.
No comments:
Post a Comment