நம் தோழர் திருவேங்கடத்தானை எல்லோருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அவன் பெயர் Batchmates.com இல் பார்க்க முடிகிறது . நான் அவனுக்கு விண்ணப்பம் அனுப்பியும் பதில் வரவில்லை . தற்போது மும்பையில் இருப்பதாக தெரிகிறது . மற்ற batchmates.com உறுப்பினர்கள் முயற்சி செய்து பாருங்கள் .
என் பெயரை மறந்திருக்கலாம் .
வகுப்பறையில் ஆசிரியர் ஏதாவது கேட்பதற்காக எழ சொன்னால் . முன்னும் பின்னும் இருக்கிற பெஞ்ச் மட்டும் கேட்கும்படியாக திட்டிக்கொண்டே எழுந்திரிப்பான் .முகம் மட்டும் சீரியசாக இருக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் சிரிப்பை அடக்க முடியாது. அதனால் அவன் குறும்பு வாத்தியாருக்கு தெரிந்து விடும் .
சில கேரக்டெர்களை நான் சந்திக்கும்போதெல்லாம் இவனெல்லாம் என் ஞாபகத்திற்கு வருவான் .
கல்யாணராமன் இவனை "கடப்பாரை " என்று செல்லமாக விளிப்பதும் உண்டு .
திருவேங்கடத்தான் தந்தை நம் எல்லோருக்கும் இன்னொரு கணித ஆசிரியர். நெற்றியில் திருநாமத்துடன் வரும் இந்த கம்பீரமான வைஷ்ணவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் famous வாக்கியம் " அந்த கடோஸி பையனை எழ சொல்லு " ( உபயம் : குமார் முத்தையா ).
இவர் இருமுறை MA செய்ததால் . இவரை வேறுமாதிரி கூப்பிடுவதும் உண்டு (எல்லாம் சக ஆசிரியர்களின் ஆத்திரம் தான் ).
 
 
5 comments:
எனக்கு திருவேங்கடத்தான் யாரென்று தெரியவில்லை. இருந்தாலும் மெஸேஜ் அனுப்பியிருக்கிரேன் பதில் வருகிறதா பார்க்கலாம்.
அத்தான் என் அத்தான் நம் திவேங்கடத்தான் (எ) க்டப்பாரையை.. எப்படி சொல்வது, அந்த முன்னும் பின்னும் இருக்கிற பெஞ்சுல நானும் இருந்ததால் நன்றாகவே நினைவிருகிறது. நன்றி தாமு கண்டெடுத்ததற்கு, கொண்டுவாங்கப்பா க்ளாசுக்கு.
திருவேங்கடத்தான் தந்தை யார்? தெரியல.
பெயர் ஞாபகத்தில் இல்லை , அவர் முகமும் உயரத்திற்கேற்ற நடையும் தான் நினைவில் நிற்கிறது.
ஏனென்றால் நான் உங்களுடன் இருந்த கால கட்டத்தில் அவர் குறைவான sessions தான் பாடம் நடத்தினார் (as an acting teacher)
Thiruvengadathan fathers name is N.Subramaniam. people call him NS.
Post a Comment