Monday, April 20, 2009

19 ஏப்ரல் 2009

மறக்கமுடியாத ஞயிற்றுக்கிழமை. 27 வருடங்களுக்கு பிறகு சந்தித்த நண்பர்கள். வலைக்கு நன்றி. வலை இல்லாவிட்டால் இது நிச்சயம் சாத்தியமாயிருக்காது.

கே.எஸ்.வித்யா, விசாலாக்ஷி, வாசன் -- இவர்கள் ப்ளூ யூனிஃபார்ம் போடவில்லை அவ்வளவுதான். மற்றபடி 10ம் வகுப்பில் பார்த்த மாதிரிதான் இருக்கிறார்கள்.

சாமுவேல் - ரொம்ப மாற்றம் இல்லை. எப்பொழுதும் போல் மற்றவர்கள் பேசும் போது இடை இடையே கமெண்ட்ஸ். ப்ரபாவிடம் கேட்ட அதே madurai slang.

ஸ்பர்ஜன் - இவர் நமக்கெல்லாம் ஒரு மூத்த சகோதரர் போல இருக்கிறார். பழைய படங்களில் சிவாஜி வயதான வேடங்களில் வரும்போது உடலை சற்று கூனிக் கொண்டு புருவத்திற்கு மேல் கை வைத்துக் கொண்டு நிதானமாக பேசுவார். இவரும் அதே போல் ஞானஸ்நானம் செய்விக்கப் போகும் பாதிரியார் மாதிரி நிதானமான மெல்லிய குரலில், " இப்பல்லாம் அவ்வளவு நினைவு இருப்பதில்லை." நெற்றியில் கை வைத்துக் கொண்டு யோசித்து "நீங்க" என்றார். நாங்கள் சற்று சுதாரித்துக் கொண்டு அறிமுகப்படுத்திக் கொண்டோம். ரொம்ப நல்லவரா இருக்கார்ப்பா. later came to know that he is doing lot of social services. இவருக்கு ஒரு ஓ போடுங்கப்பா.

இந்த get together க்காக வெளியூரிலிருந்து வந்த அனைவருக்கும் இன்னொரு ஓ.

3 comments:

கிவியன் said...

பதிவுக்கு நன்றி ஜெ. இவ்வளவுதானா? இன்னும் சற்று விரிவாக எதிர்பார்த்தேன்.

யார் யார் வந்திருந்தார்கள் என்பதே எங்கள் மூவருக்கும் (சிவா, பரத்) தெரியவில்லை. நாங்கள மூவருமே பேசிக்கொண்டிருந்தோம். மியுசிக்கல் சேர் போல ஒவ்வொருவராக அந்த காமிரா முன்னால் இருந்த நாற்காலியில் அமர இது யார் என்று நாங்களே யூகித்துக்கொண்டிருந்தோம்.
நேற்று வந்தவர்கள்:

லெச்சு, தாமு, சத்யா, வாசன், ஸ்பர்ஜன், ஸ்ரீ, பெண்களில், நீ, ஸ்ரீவித்யா(வரப்போவதில்லை என ஒரு அச்ரீரி வந்தது ஆனால் சர்ப்ரைசாக வந்தது சந்தோஷமே), ஆஷா, சங்கரி, இவர்களைத்தான் நான் பார்த்தேன். ப்யுலா. விசாலாக்க்ஷி ப்ராபா இவர்களை பார்க்கவில்லை. கண்ணனும் துரையும் வரப்போவதாக சொன்னார்கள் வந்தார்களா? குருதத் வந்திருந்தானா?

கிவியன் said...

மன்னிக்கவும் விடுபட்டவர்கள், குமார முத்தைய்யா, மற்றும் ரேமா.

ஜெயந்தி நாராயணன் said...

சுரேஷ்,
என்னத்த சொல்ல. பாதி பேர பார்க்கலயா.
பெண்களில் நான், ரேமா, பி.வித்யா, கே.எஸ்.வித்யா, சங்கரி,லலிதா, விசாலாட்சி(மீனா மற்றும் நிர்மலா என்று பெயர் மாற்றிக் கொண்டிருக்கிறாள்), ஆஷா, ப்யுலா தவிர மூன்று பெண்கள் +2 ல் படித்தவர்கள் வந்திருந்தார்கள்.
ஆண்களில் லெச்சு, தாமு, கண்ணன்,சாமுவேல்,குமார முத்தையா,ஸ்ரீகுமார், குருதத்,வாசன்,முரளி,முத்துராமன்,ஸ்பர்ஜன்,சங்கர்,சத்யராஜ், ஆகியோர். (யாரையும் விடவில்லை என்று நினைக்கிறேன்) வெகு நாட்களுக்கு பிறகு எல்லோரும் சந்தித்ததால் கொஞ்சம் கூச்சல் அதிகமாகி விட்டது. நீங்கள் பேசியதும் எங்களுக்கு காதில் விழவில்லை. சிரமத்தைப் பார்க்காமல் நீ கூட நேரில் வந்திருக்கலாம்.
நான் வேறு யாராவது எழுதுவார்கள் என்று கொஞ்சமாக எழுதியிருக்கிறேன். வெயிட் பண்ணு.