Friday, July 17, 2009

சிவா பதில்கள்

நண்பர் கிவியனின் கேள்விகள் மற்றும் எனது பதில்களும்


1. சமீபத்தில் எப்போது மன்னிப்பு (sorry) கேட்டாய்? இல்லை கேட்டிருக்கலாம் என்று பின்பு தோன்றிய சம்பவம்?

தினமும் ஏதாவது காரணத்திற்கு யாரிடமாவது மன்னிப்பு கேட்பது இயற்கை. இதை கணக்கு எல்லாம் வைப்பதில்லை.

2. தேர்தலில் ஓட்டு போட்டது உண்டா? இல்லை என்றால் ஏன் போடவில்லை என்று விளக்க முடியுமா? அப்படி ஓட்டு போடாத போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நீங்கள் விமர்சிப்பது சரியா?

அமெரிக்காவில் சென்ற நான்கு ஆண்டுகளாக ஒட்டு போட்டதுண்டு, அனால் இந்தியாவில் ஒரு முறை கூட போட்டதில்லை. ஒரு முறை முயற்சி செய்தேன் அனால் வேறு யாரோ போட்டுவிட்டார்கள்.

3. கடவுள் நம்பிக்கை உண்டா?

வெகு காலமாக இந்த கேள்விக்கு எனக்கு நானே பதில் தேடுகிறேன், ஆனால் பதில் கிட்டவில்லை. அடி மனதில் Darwin VS கடவுள் விவாதங்கள் வந்ததுண்டு. அதே மனதில் பரிட்சைகளுக்கு முன்பு கடவுள் உதவுவார் போன்ற நம்பிக்கையும் வந்ததுண்டு.

4. வழகத்திகலிருந்து மாறுபட்டு எப்போதாவது எதையாவது புதிதாக முயற்சித்தது உண்டா?

இந்த கேள்விகள் பதில் எழுதுவது எனது மிக சமீபத்து புது முயற்சி

5. சமீபத்தில் எதாவது விளையாட்டில் (வீட்டுக்கு வெளியே) ஈடுபட்டது உண்டா? இல்லை என்றால் ஏன் விளையாட தோண்றவில்லை என்று யோசித்தது உண்டா?

நான் தினமும் வாகனம் ஓட்டுவதே ஒரு விளையாட்டு. மற்றவர்கள் இதை வேறு மாதிரி வர்ணிக்கலாம்.

6. கடைசியாக அழுதது எப்போது இல்லை மனம்விட்டு சிரித்தது??

அழுதது - எனது தந்தையின் பிரிவினை அறிந்த நேரத்தில்.
சிரித்தது - சமிபத்தில் ( Youtube மூலமாக) பார்த்த நகைச்சுவை துனுக்ககள்

7. என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள், இல்லை கடைசியாக படித்தது (பேப்பர்னு சொல்ல கூடாது)??

ஆங்கிலம் - Thomas Friedman's Hot, Flat and Crowded.
தமிழ் - பாலகுமாரனின் " சுந்தரி கண்ணால் ஒரு செய்தி "

8.உங்களுக்கு ஏதாவது தனி திறமை இருக்கிறதா??

நன்றாக சாப்பிடுவது, தூங்குவது போன்ற பல திறமைகளுடன் வாழும் சராசரி ஆசாமி.

9. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம் (அ) போக விரும்பும் இடம் (அ) வீட்டிலிருந்து அதிக தூரம சென்ற இடம்??

ஹவாய் தீவுகள். மற்றும் இருபது வருடங்களுக்கு முந்திய மதுரை மற்றும் இந்தியா.

10. வாழ்வில் சந்தோஷம் என்பது?

தினமும்.

10 comments:

கிவியன் said...

வாழ்த்துக்கள் சிவா முதலில் பதிலளித்ததற்கு. மிக்க நன்றி.

பராவயில்லை பளிச் பதில்கள்.

அமெரிக்காவில் sorry கேட்பது சகஜமப்பா, அது வாழ்கையில் எல்லா நிலைகள்/ மனிதர்கள் வேறுபாடின்றி தொடர வேண்டும்

என்ன வாகனம்னு சொல்லலியே?

இதுபோல் மற்றவர்களும் பதில் இடுவார்கள் என்பது என் நம்பிக்கை!

ஜெயந்தி நாராயணன் said...

சிவா,

நல்லா படிக்கிற சமத்து பையன்(ர்) இமேஜ முதல்ல பத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லி maintain பண்ற. very good.

ஜெயந்தி நாராயணன் said...

ரொம்ப டாங்ஸ் VTN sir
question paper ம் கொடுத்து ஒரு மாசம் time ம் கொடுத்ததற்கு.
எப்படியும் பதில் சொல்லிருவோம்ல.

தாமு said...

இதுக்கு சீரியஸ் ஆக பதில் சொன்னால் காமெடி பண்ண மாட்டீங்கள்ள ...?

தாமு said...

Super Siva.

Good transparency.

கிவியன் said...

தாமு, காமெடியெல்லாம் சகஜம்பா அத விடமுடியுமா?நீ பதில சொல்லு அப்புறம் அதெ வெச்சு லொள்ளு பண்ண முடியுமான்னு நாங்க பாத்துக்கறோம்.

Siva said...

என்ன எல்லாரும் பதில் எழுதினால் ஒஞ்சம் பொழுது போகும். மக்களே எழுதுங்கள். நீங்கள் எல்லாம் மதுரை புலவர்கள் அசத்த வேண்டாமா ?

Lakshmanan said...

பத்து கேள்விக்கும் பதில் சொன்னவுடன் scotland yard போலீஸ் வருமா, இல்ல scotland gift வருமா?
anyway, replies are on the way ... will come soon.

Rema G.L said...

Siva,

Your replies proves you are a practical person. Any chance of coming to India?

Lakshmanan said...

சிவா,
----------------
Earlier I had wrongly posted this as a comment in another location.
Brought this down here now.
----------------

Oh, I'm sorry ன்னு அன்றாடம் சொல்வதைப் பற்றி சுரேஷ் கேட்டதாக தெரியவில்லை - நினைவில் நிற்பது போன்று நாம் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதை தான் அவன் கேட்டிருந்தான் (அவன் இவன் மற்றும் அவள் இவள் என்று கூறுவதில் நாம் இன்னும் நெருங்கி உள்ளது போல் உள்ளது, சரி தான் நண்பர்களே ... ஆகையால் சிவா, //இந்த பதிவு மூலம் உங்களை// எல்லாம் வேண்டாம் ... உன்னை is much better)

//தினமும் வாகனம் ஓட்டுவதே ஒரு விளையாட்டு// இந்தியாவை விட வா? இந்தியாவில் வாகனம் ஒட்டி விட்டால் உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் ஒட்டி விடலாம்.

Youtube என்றதும் என் நினைவுக்கு வந்தது. பாருங்கள் - http://www.youtube.com/watch?v=583A2jqmnIw&feature=related

இருபது வருடங்களுக்கு முந்திய மதுரை, இம் ஹீம் chanceஏ இல்ல ... 5 பைசா கடலை மிட்டாய் during lunch hours during our school days, remember anybody?

வாழ்வில் சந்தோஷம் தினமும் - superபா

இந்த சுரேஷ் இன்னுமொரு கேள்வி கேட்டிருக்கலாம் - சமீபத்தில் அதிகம் கோபப்பட்டது எதற்காக?

பதில்கள் பழைய சிவகுமாரை ஞாபகம் படுத்துகிறது ... உன் முகம் எனக்கு நல்லா FLASH BACK ஆகுது.