Thursday, July 23, 2009

உள்ளது உள்ளபடி

வராமல் போன ஜூனாமி: ஜுலை 22 கிரகணத்துனால சுனாமி வரும் வரும் ஒரே பில்ட் அப். வலைல அத வெச்சு எச்சரிக்கை மின்னஞ்சல் சுனாமி வந்ததோட சரி. இன்னும் 123 வருஷம் கழிச்சு வேனா வந்தாலும் வரலாம் அதுனால எதுக்கும் இப்பவே ஜாக்கிரதையா இருங்க மக்களே. பீச்சு பக்கமா போர வாய்ப்பு ஏற்பட்டுதுன்னா எப்பவும் உஜார இருங்க கடல் உள் வாங்குதான்னுட்டு.


இன்னுமொரு நபர் கண்டுபிடிப்பு: வாங்க செந்தில் நாயகன். இவர்தான் நம்ம வகுப்பு மக்கள்ல முதல் மருத்துவர் அதுவும் இருதய நிபுனர். அதனால மக்களே, நாமெல்லாம் ஜெனிடிக்கலி அதிக கார்டியாக் ரிஸ்க் உள்ள தெற்கு ஆசிய பிரஜைகளாதலால் செந்திலிடம் சில சந்தேகங்கள், உபாயங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

உதாரணத்துக்கு, இடது மார்பு பக்கம் வலி வந்தா அத முக்காவாசி, முந்தா நேத்து சாப்பிட்ட வாழக்கா பஜ்ஜினாலயோ இல்ல பூரியோட உள்ள தள்ளின சன்னா மசாலாவோட எபஃக்டா இருக்கலாம்னு நெனச்சி பூண்டு குழம்போ இல்ல ரசமோ பண்ணி சாப்பிட்டுட்டு அடுத்த வேலய பாக்க போய்டரோம். 30 வயசுக்கு கீழ இது ஓக்கே ஆனா 40 வயசுக்கு மேல இப்படி அசட்டையா இருக்கலாமா? என்ன மாதிரி வலி வந்தா அது இருதய கோளாறுனால வர முன்னெச்சரிக்கை என்று தெரிந்து கொள்ளமுடியும்?

வெறும ECG எடுப்பது நல்லதா இல்லை tread-millல் ஓடியபடி எடுப்பது சிறந்ததா?

டாக்டர் ஆஞ்சியோ கிராம் எடுக்க சொன்னா அஞ்சி நடுங்க தேவையில்லை என்கிறார்களே சரிதானா?

ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க இட்லியில் இதயம் நல்லெண்னெய் நல்லதா இல்லை வெறும் நெய்யா?

அப்படியோ அடைப்பு ஏற்பட்டால், ஆஞ்சியோ ப்ளாஸ்டியா இல்லை பைபாஸ் சர்ஜரியா? இல்ல இந்த ரெண்ட விட வேர ஏதாவது சிறந்த உபாயம் இருக்கா?

இப்படி எக்க சக்கமா சந்தேகம் இருப்பதால் செந்தில் உடனடியா வந்து வகுப்பல சேர்ந்து பதில சொல்லுப்பா..


பரீட்சை கேள்விகள்: மூணு பேருதான் பதில் போட்டு இருக்காங்க, மத்த மக்க எல்லாம் இன்னும் மோட்டு வளய பாத்து யோச்சிட்டு இருகாங்க போல பிட் அடிச்சாவது பதில சொல்லியே ஆகனும், எச்சரிக்கை.

7 comments:

Rema G.L said...

10 questions:-

Suresh you also could have answered those questions? What happened? Mine I have already posted.

கிவியன் said...

ரேமா,

வாத்யாரும் பதில் சொல்லனும்னா எப்படி?

நாந்தான் எழுதிட்டே இருக்கேனே, 3எ-யினால் எழுதாமலே இருக்கும் மற்றவரையும் எழுத வைக்கும் ஒரு உபாயம்தான் இந்த பத்தி கேள்வி.

எனினும் கேள்வியும் நானே பதிலும் நானே விரைவில் அளிக்கிறேன்.

Senthil Nayagan Sudaram said...

Vow..Quite a few questions..!! I dont think I can answer them all in one single breath!!..But will give it a try...
It is true that South Asians(Indians) have a higher risk of heart disease..and dying from heart attacks. The reason is not clear though there are some reports about a specific type of cholesterol(liporpotein a) found in higher levels..
I always recommend exercise a minimum of 45 minutes for 8 days a week..Stay away from ANY FRIED FOODS..Period.. Vegetarian food is great..but adding fried foods or ghee is asking for SERIOUS trouble...Indeed most Indians negate the benefits of vegetarian food by adding salt(esp pickles), ghee/butter/fried foods.. Also, there is a tendency to use vegetables that are cooked which WILL LOOSE all their nutritional value. In essence, what you are eating is just something for taste that has very little if any nutritional value..
My recs: Dont overcook, eat brown rice instead of white rice, use whole grains , use oats.. plenty of fruits..
Will continue..

கிவியன் said...

நன்றி செந்தில், வந்து பதில் எழுதியதற்கு. நேரம் கிடைக்கும் போது மீண்டும் வந்து எழுதவும்.

நீ `சரோஜா டீச்சர்` பதிவுக்கு இட்ட பின்னூட்டத்திலேயே உனக்கு பதில் எழுதியிருந்தேன், எனினும் உன்னை வகுப்பில் சேர்க்க உன் முகவரியை இந்த அஞ்சலுக்கு அனுப்பு mounam.blog@gmail.com.

கிவியன் said...

//I always recommend exercise a minimum of 45 minutes for 8 days a week.//

ஆமா கேக்கனும்னு நெனச்சேன் ஓபாமா வந்த பின்னாடி அமெரிக்கால வாரத்துக்கு 8 நாள் ஆக்கிட்டாரா இல்ல தெற்கு ஆசிய மக்கள்ங்றனால எஸ்டராவா ஒரு நாள் எக்ஸர்சைஸ் பண்ணுன்னு சொல்றியா?

Disclaimer: எதையும் சீரீஸா எடுத்துட்டு இந்த பக்கமே தல வெச்சு படுக்க மாட்டேன்னு போய்டாதே செந்தில் ஆண்டவா!! முடிஞ்சவரை கலாட்டாதான் தொழில்.

தாமு said...

ஹல்லோ செந்தில் (real) நாயகா !

நீண்ட நாள் கழித்து யாரையாவது பார்த்தால் முதலில் திட்டிக்கொள்வது வழக்கம் அதனால், முதலில் உன்னை கொஞ்சம் திட்டிக்கிறேன் @#%&***^%$#@.

உன்னைய ரொம்ப நாளா நானும் குமாரும் தேடிக்கிட்டு இருக்கோம். How do you do?.

அண்ணன் சிவஞானம் எப்படி இருக்கிறார் ?. அவரும் school topper நீயும் school topper.

என்ன குடும்பம்யா நீங்க?

Any way welcome to the Old Group.

-தாமு என்கிற தாமோதரன்

ஜெயந்தி நாராயணன் said...

சுரேஷ்,

ஆள் உள்ள நுழையறதுக்கு முன்னால் ஓசில கன்சல்டேஷன். நடத்து.

மிக்க நன்றி செந்தில்.