சமீபத்தில் என்றல் ம்ம்ம்ம்ம்........
போன வாரம் என் husband உடன் உடன் சின்ன சண்டை. தப்பு அவரதுதான் என்றாலும், மனைவியான கட்டுபாடிர்காக குடும்பம் சுமுகமாக செல்வதற்காக, நான் சாரி சொன்னேன். ( அவர் சண்டை ஓய்ந்தபின் என்னிடம் தனியாக sorry சொன்னார் என்பது வேர விஷயம்) . என்ன செய்வது அவர் என்னுடன் இருப்பதே monthly 4-5 days தான். அதிலும் சண்டை போட்டு வீட்டின் நிம்மதி கெடக்கூடாது அல்லவா?
2. தேர்தலில் ஓட்டு போட்டது உண்டா? இல்லை என்றால் ஏன் போடவில்லை என்று விளக்க முடியுமா? அப்படி ஓட்டு போடாத போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நீங்கள் விமர்சிப்பது சரியா?
நான் இது வரை ஓட்டு ஒருமுறை தான் போட்டுள்ளேன். அதன்பின் எப்போதும் என் பெயர் list ல் இருந்ததில்லை.
ஓட்டு போடாத போது அரசாங்கத்தை விமர்சித்திருக்கிறேன், என் பெயர் listல் சேர்காததற்கு .
3. கடவுள் நம்பிக்கை உண்டா?
நிறைய உண்டு. எந்த நிலையிலோ இருந்த என்னை இந்து இந்த நிலைமைக்கு கொண்டுவந்ததற்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்லாத நாளே இல்லை எனலாம். எனது எல்லா வெற்றிக்கும் அந்த கடவுள் தான் காரணம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நிறைய பூஜைகள், பிரார்த்தனைகள் எல்லாம் செய்வேன். கோவில்கள் தான் mostly எனது holiday outing.
4. வழகத்திகலிருந்து மாறுபட்டு எப்போதாவது எதையாவது புதிதாக முயற்சித்தது உண்டா?
வழக்கத்திற்கு மாறாக என்று சொன்னால் இப்பொழுதெல்லாம் யாருடனும் அளவுக்கு மேல் பேசுவதை குறைத்துகொண்டிருக்கிறேன். முன்பெல்லாம் யார் என்ன பேசினாலும், ஏன்டா வம்பு என்றாலும் சேர்ந்து அரட்டை அடிப்பேன். இப்பொழுதெல்லாம் அதில் நாட்டம் குறைந்து விட்டது. இயன்ற வரை to the point பேச முடிவெடுத்துள்ளேன் . வழக்கத்துக்கு மாறாக இப்பொழுது Yogasanaa பயின்று வருகிறேன்.
5. சமீபத்தில் எதாவது விளையாட்டில் (வீட்டுக்கு வெளியே) ஈடுபட்டது உண்டா? இல்லை என்றால் ஏன் விளையாட தோண்றவில்லை என்று யோசித்தது உண்டா?
என் daughters கூட ( summer holidays) இல் shuttle கார்க் விளையாடினேன் விளையாட்டில் நாட்டமுண்டு. விளையாட நேரம் தான் இல்லை.
6. கடைசியாக அழுதது எப்போது இல்லை மனம்விட்டு சிரித்தது??
நான் ரொம்ப emotional type அதனால் ஒரு நல்ல பாட்டு கேட்டால் கூட அழுவேன். கோவில் சென்றால் அந்த தெய்வத்துக்கு நன்றி சொல்லும்போது என்னை அறியாமலே என் கண்களில் நீர் சுரக்கும். என் வீட்டில் எல்லோரும் என்னை எப்பொழுதும் கேலி செய்வார்கள் ( நான் என் இரு கண்களிலும் கருங்கடல், செங்கடல் வைத்துள்ளேன் என்று )
சமீபத்தில் மனம் விட்டு சிரித்தது அந்த Chennai 10th & 12th சந்திப்பில். உண்மையை சொன்னால் நானும் என் ஹஸ்பெண்டும் எங்கள் சின்ன சின்ன சண்டைக்குப்பின் அவர் என்ன சிரிக்கவைக்க சொல்லும் ஜோக்குகளுக்கு நிறையவே மனம் விட்டு சிரித்து இருக்கிறேன்.
7. என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள், இல்லை கடைசியாக படித்தது (பேப்பர்னு சொல்ல கூடாது)??
சமீபத்தில் என்றால் இப்பொழுது நான் Lalitha Sahasrama பாஷ்யம் படித்துக்கொண்டிருக்கிறேன். என்னவோ sudden ஆக Lalitha sahasranama த்தின் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
8.உங்களுக்கு ஏதாவது தனி திறமை இருக்கிறதா??
தனி திறமை என்று பெரிதாக ஒன்றும் இல்ல. இருந்தும் நான் சுமாராக பாடுவேன். Also I have done a lot of Counselling for drug addicts, students and family issues. என் in-laws வீட்டில் எந்தவொரு விஷயம் என்றாலும் என்ன ஆலோசனை கேட்டு செய்வார்கள்.
9. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம் (அ) போக விரும்பும் இடம் (அ) வீட்டிலிருந்து அதிக தூரம சென்ற இடம்??
Life ல ஒரு தடவையாவது அந்த Naigra Falls பார்க்கவேண்டும் என்ற ஆசை. நிறைவேறுமா என்று தெரியாது. இயற்கையின் படைப்புகளில் மிக சிறந்த ஒன்றாக, பிரமிக்கவைக்கும் ஒன்றாக நான் அதை கருதுகிறேன்.
அதிக தூரம் சென்ற இடம்
Car - Kanyakumari
train , Flight - Delhi
Out of India - Nepal & Bhutan
10. வாழ்வில் சந்தோஷம் என்பது?
இயன்ற வரை பிறருக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வது. அரசாங்க பணியில் இருப்பதால் கறை படியாமல் இருப்பது.
இருப்பதை கொண்டு நிறைவாக வாழ்வது. I always feel contented Life is the success of happiness. I believe in போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
P.S. மக்களே எப்பொழுதும் போல் என் தமிழில் எதாவது குறை இருப்பின் என்னை மன்னியுங்கள் . ஆமென்
 
 
3 comments:
//சண்டை ஓய்ந்தபின் என்னிடம் தனியாக sorry சொன்னார் என்பது வேரு விஷயம்// அதானே பார்த்தேன், கேக்கலேன்னா அப்புறம் புடிச்ச காடுதான்.
//என் பெயர் list ல் இருந்ததில்லை// தல பேர இல்ல அப்புறம் நம்ம பேரெல்லாம் எங்க இருக்க போவுது? என் மாமனார் பெயரும் இல்லை என்பதால் இந்த வருட தேர்தலில் ஓட்டு போட முடியவில்லை.
இத எப்படி சரிசெய்ய முடியும்?? யோசிக்க வேண்டிய விஷயம்.
//இரு கண்களிலும் கருங்கடல், செங்கடல் வைத்துள்ளேன் என்று// அப்ப உன்ன `கடற்கண்ணி` என்று சொல்லலாமா?
//என் in-laws வீட்டில் எந்தவொரு விஷயம் என்றாலும் என்ன ஆலோசனை கேட்டு செய்வார்கள்.// ம்ம் புரியுது புரியுது, பாவம் என்ன செய்ய!!
பிகு: தமிழில் தட்டச்சியது பாராட்டதக்கது. தமிழில் சிந்திக்கும் போது தமிழில் எழுதினால்தான் ஆத்மதிருப்தி ஏற்படும் என்பது என்னுடைய கருத்து. பிழைகள் சகஜம். யாமிருக்க பயமேன்!! முடிந்த வரை எடிட் செய்கிறேன்.
சோ சோ சோ சோ சோ (கவுண்டமணி மாதிரி) ... கட்டுப்பாடாம் ... கேடுங்கப்பா. Jokes apart, ரேமா விட்டுக்குடுக்கும் மனப்பான்மை இருந்தால், நிம்மதி நம்மை தேடி வரும். நன்று.
வழக்கத்திற்கு மாறாக பேச்சை குறைத்துவிட்டாயா ... முதிர்ச்சி தெரிகிறது ... என்னுடைய்யா பதில் பாரு, Talk where you have to talk and do not talk where you should not. Simple. அதற்காக இங்க ஒண்ணும் குறைத்து கொள்ள வேண்டாம் ... நாம் இங்கு 1982 க்கு சென்று விட்டோம் என்று நினைத்து நன்றாக பேசலாம் - எழுதலாம்.
//சின்ன சின்ன சண்டைக்குப்பின் மனம் விட்டு சிரித்து இருக்கிறேன்// - சண்டை வந்தவுடன் இனிமே சிரிப்பு தான்
உன் தமிழ் குறை ஏதேனும் இருந்தாலும், அது தெரியாமல், சுரேஷ் சரி செய்து விடுவது போல் தெரிகிறது.
//பெயர் லிஸ்ட் ல் இருந்ததில்லை - இத எப்படி சரிசெய்ய முடியும்// - சாதாரணம், நாம் முயற்சி எடுக்க வேண்டும், Taluk office, Collector Office, Post office, உங்க office, எங்க office எல்லாம் போகணும், அப்பறம் ...குடுக்க வேண்டியதை கொடுக்கணும் ... இது இந்தியா ... இதை சரி செய்ய 5 நாட்கள் வேண்டும் ... முடியவில்லை. அதனால் தான் நான் இன்னும் update
செய்யவில்லை ... அடுத்த தேர்தலுக்கு முன் கண்டிப்பாக செய்து விடுவேன்... எனக்கு மதுரையில் vote செய்ய தான் பிரியம்.
//இப்பொழுதெல்லாம் யாருடனும் அளவுக்கு மேல் பேசுவதை குறைத்துகொண்டிருக்கிறேன். முன்பெல்லாம் யார் என்ன பேசினாலும், ஏன்டா வம்பு என்றாலும் சேர்ந்து அரட்டை அடிப்பேன். இப்பொழுதெல்லாம் அதில் நாட்டம் குறைந்து விட்டது//
நான் ஏற்கனவே கவனித்த விஷயம். வரவேற்கத்தக்க மாற்றம். இதனால் சில பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
//போன வாரம் என் husband உடன் உடன் சின்ன சண்டை. தப்பு அவரதுதான் என்றாலும், மனைவியான கட்டுபாடிர்காக குடும்பம் சுமுகமாக செல்வதற்காக, நான் சாரி சொன்னேன்//
இது தேவையாகத்தான் இருக்கிறது.
லா.சா.ரா எழுதியதில் எனக்கு பிடித்தது. நான் ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறேன். மீண்டும் உனக்காக
(மாமியார் மருமகளிடம்)
"நம் ஸ்த்ரீ வர்க்கத்தை சொல்கிறேன். ஆண்கள் - தகப்பனிலிருந்து ஆம்படையான் உள்பட கைக்குழந்தை வரை - குழந்தைகள், செல்லக் குழந்தை, அசட்டுக் குழந்தை, பிடிவாதக் குழந்தை. நாம்தான் ஸஹிச்சுண்டு போகணும் என்கிற பாடமாத்தான் சிருஷ்டியிலேயே தூய்மையான
பதவியை நமக்கு கொடுத்திருக்கு. அவா பேச்சிலே நமக்கு பிடிக்காததை காதிலேயே வாங்கிக்
கொண்டாதானே வம்பு? பெண்கள் சமயத்தில் கொஞ்சம்
செவிடு, கொஞ்சம் குருடு, கொஞ்சம் மக்காயிருந்தால்தான்
குடும்பமே நடக்கும். ஆனால் கொஞ்சம் கொஞ்சம்தான்.
ஞாபகம் இருக்கட்டும். ரஸத்தில் கொத்தமல்லியைக் கிள்ளிப்
போட்டாப் போல். அதிகமாகப் போனால் பச்சை வாசனை."
Post a Comment