Thursday, October 1, 2009

பதில் போடலாமா?????

இப்ப சுரேஷோட பதிவிற்கு பதில் போடலாமா கூடாதா என்ற தயக்கத்தில் பலரும் அமைதியாக இருக்கலாம். இந்த நிலை தொடர்ந்து கொண்டிருந்தால் நம்முடைய வகுப்பறையில் activity (???) குறைந்து அல்லது நின்று விடும்.

தியாகராஜன்,

உங்களுடைய (உன்னுடைய சொல்லலாமா) முதல் பதிவை நான் தாமதமாகத்தான் பார்த்தேன். அதற்குள் உன்னுடைய குற்றச்சாட்டுகள் வர ஆரம்பித்ததால் ஒரு தயக்கம், ஒரு பயம். எனக்கு நம்முடய வகுப்பில் பலரை நினைவில் இல்லை. நீயும் அதில் அடக்கம். அதானால் கூட ஒரு தயக்கம் வந்திருக்கலாம். நாம் get together ல் கூட சந்திக்கவில்லை. இங்கு இருப்பவர்கள் எல்லாரும் கொஞ்சம் கலாட்டா பார்ட்டீஸ். நாம் எல்லாவற்றயும் sportive ஆக எடுத்துக் கொண்டால் நமது நட்பு இனிமையாக இருக்கும். எல்லாருடய பதிவிற்கும் எல்லா சமயமும் பதில் கிடைப்பதில்லை. நாம் முதல் முறை எழுதும் போது அந்த எதிர்பார்ப்பு கொஞ்சம் இருக்கும். போகப் போக எல்லாம் சரியாகிவிடும். நாம் யாரும் (girls and boys) படிக்கும் காலத்தில் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொண்டது கூட இல்லை. அதையும் தவிர பெரியவர்கள் ஆனவுடன் அவரவர்களுடய priority மாறுபடுகிறது. நம்முடய பதிவிற்கு பதில் போடா விட்டாலும் சிலர் அதை ரசித்திருக்கலாம். நாம் எழுதுவது நமக்கு பிடித்திருந்தால் போதும். எனக்கு ஒரு காரணம் இருந்தது போல் எல்லாருக்கும் ஒரு காரணம் இருந்திருக்கலாம். come on thiagarajan, எல்லாவற்றயும் மறந்து விடு. நீயும் உனக்கு கிடைக்கும் நேரங்களில் எழுது. பதில் போடு.

வகுப்பறையில் என்றுமே கலாட்டாதான் இருக்க வேண்டும். எல்லாரும் தொடர்ந்து எழுதுங்கள்.

5 comments:

sreesnake said...

"வகுப்பறையில் என்றுமே கலாட்டாதான் இருக்க வேண்டும். எல்லாரும் தொடர்ந்து எழுதுங்கள்"....clap! clap!! அப்படிப்போடு!!
இது சும்மா ஜாலிக்குதான்!! டென்ஷன் ஆய்டாதே தியாகு!!

கிவியன் said...

தியாகராஜனை ஏன் கட்டம் கட்டினாய்?? ஏன் யாரும் எழுதவில்லை என்றாவது அவன் எழுதியது மிக மிக வரவேற்க தக்கது, இதை கூட இங்கு உறுப்பினாரக இருக்கும் பலரும் செய்வதில்லை. ராஜூவின் கோபம் மிக நியாயமானது.


//எல்லாவற்றயும் மறந்து விடு. நீயும் உனக்கு கிடைக்கும் நேரங்களில் எழுது. பதில் போடு//.

ஜெ எல்லாம் சரி கடைசில பதில் போடுன்னு முடிச்சுட்டியே? அதுதானே பிரச்சனையே.

ஜெயந்தி நாராயணன் said...

சாமி, எனக்கு பதில் போட சொல்லல. எப்ப நேரம் கிடைக்குமோ அப்ப எழுத ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக்க சொன்னேன்.

தாமு said...

ஏனப்பா இங்க இருக்கறவங்களை வருத்தேடுக்கறீங்க.. நம்ம அமெரிக்க வாழ் மருத்துவர் ,பொறியாளர்கள் எல்லாம் என்ன செய்துகிட்டு இருக்காங்க ?. இந்த இணை தளம் ஒரு வடிகால் தானே பயன் படுத்திக்க வேண்டியதுதான்.

நம்ம சிவா TVS lakshmi குரூப்பில் ஐக்கியம் ஆகி விட்டதாக கேள்வி .என்ன சிவா.. சரிதானே ?

Sathya said...

Superb!Jayanthi!Well said and it has to read right!