ஸ்ரீ குமாரின்  குழந்தைகள்  குறித்த பதிவிற்கு பின் எனக்குள் சில சம்பாஷனைகள்.
குறிப்பாக  தந்தையிடமிருந்து தாயின் கரு முட்டையை தாக்குவதற்கு பல மில்லியன் உயிரணுக்கள் நீந்துகின்றன .விவரம் தெரிவதற்கு முன்னரே போட்டிகள் ஆரம்பமாகிவிடுகின்றன.அதில் ஒருவனுக்கு / ஒருத்திக்கு மட்டும் தான் முட்டையை சினை படுத்த அனுமதி .ஒன்று உட்புகுந்த பிறகு மற்றவர்களுக்கு அனுமதி இல்லை .இது இயற்கையின் நியதி .
விஷயம் என்னவென்றால் நம் உடன் நீந்தி வந்த அந்த பல மில்லியன் சகோதர சகோதரிகள் எங்கே . ஏன் இந்த இந்த அநீதி .இந்த பூமியில் வாழ்வதற்கு கூட கருவறைக்குள் போட்டி உண்டு .அங்கே ஜெயித்தால்தான் இங்கே oxygen கிடைக்கும்.
So, ஜனித்தவ்னின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்று .அதை  அவன் தேர்ந்தெடுக்கவில்லை , கொடுக்கப்பட்டது.
பிறவி எடுத்த  பின்பும் எக்குறையும் ( கூன் , குருடு, செவிடு   என்று என்னென்னவோ கூறுகின்றார்களே ) இல்லாத பிறவி பெரும்  பாக்கியம் .
இங்கேதான்  இறை  நம்பிக்கை  தேவை  படுகிறது  .
தந்தையின்  வீரியத்தில்  இருந்து கிளம்பி கும்பலோடு கும்பலாக நீந்தி முண்டியடித்து கரு முட்டையை தாக்கி .மற்றவர்களுக்கு பெப்பே காண்பித்து , பத்து மாதம் ஏகப்பட்ட பரினாமங்களில்  உள் வசித்து (அதான் science ). பின்னர்  வெளிவந்து ஆங்காரமாக  நாபியில்  oxygen  என்ற முதல் உணவை எடுத்தவுடன்  ... வந்துட்டானய்யா   வந்துட்டான்... என்று மொத்த உலகமும் கூவும். மொத்த உலகம் என்பது மனிதர்கள் மட்டுமல்ல மற்றனைத்து ஜீவராசிகள் கூடத்தான்
" குழந்தையின் சிரிப்பில் இறைவனை காண்போம் " 
அது இயற்கையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை இறைவனின் குழந்தை தான் .அது எப்போது  தந்தை, தாயின் கட்டுப்பாட்டிற்கு வருகிறதோ .அதற்கு புரியாத  வேறு சில பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றன .
பெரியோர்களின் இயலாமைக்கு  இவர்கள் தான் குறியா ?
தந்தையும் , தாயும் அவர்களின் அடிப்படை பிரச்சனைகளை தன்னலமற்ற   நோக்கத்தில் எதிர் கொண்டால் ,மற்றவற்றை இயற்கை பார்த்து கொள்ளும்.
இது மனிதர்களுக்கு   மட்டும் தான் பொருந்தும்  .ஆடு   மாடு மற்ற   பிற   அல்ல. அவை  தன  கடமைகளை  செவ்வன  செய்கின்றன. எனக்கென்னமோ கலாச்சாரமே மனிதன் இவர்களை பார்த்து தான் கற்று கொண்டிருப்பான் என்று தோன்றுகிறது    .
 
 
1 comment:
தாமு,
ஸ்ரீயின் பதிவ வரிக்கு ஊடால புகுந்து படிச்சு இப்படி ஒரு மீள்பதிவ எழுதும்படி ஆகிர அளவுக்கு என்ன ஆச்சு? இந்த வருடம் தீபாவளி போனஸில் ஆப்பு வைத்து விட்டார்களா?
//இங்கேதான் இறை நம்பிக்கை தேவை படுகிறது// வேண்டாம்ங்கிறேன், இறை நம்பிக்கை டன்கணக்கில இருக்குறவங்களுக்கும் குறையுள்ள குழுந்தைகள் பிறப்பதால்..
//தந்தையும் , தாயும் அவர்களின் அடிப்படை பிரச்சனைகளை தன்னலமற்ற நோக்கத்தில் எதிர் கொண்டால்,மற்றவற்றை இயற்கை பார்த்து கொள்ளும்//
அடிப்படை பிரச்சனை என்றால் என்ன??
உணவு, உடை, இடம்??
அப்ப மத்தத இயற்கை எப்படி கொடுக்கும்?
மனித உறவுக்ளுக்கும் இயற்கைக்கும் என்ன சம்பந்தம்? குழப்பமாக இருக்கே தாமு?
//எனக்கென்னமோ கலாச்சாரமே மனிதன் இவர்களை பார்த்து தான் கற்று கொண்டிருப்பான் என்று தோன்றுகிறது// இங்கு இவர்கள் என்பது ஆடு மாடா? அது எப்பூடி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க??
Post a Comment