Friday, April 9, 2010

நம்ம ஸ்கூல்ல ஒரு சேமிப்பு வங்கி இருக்கும். யாருக்காவது ஞாபகம் இருக்கா? அதில நாலு வருஷம் சமத்தா காசு (காசுதான்) சேர்த்து ஒன்பதாம் க்ளாஸ்ல நூ...........று ரூபாய் சேர்ந்தது. என்ன கொடும இல்ல. ஆனா இருபது பைசா கிடச்சா கூட உடனே அக்கவுண்ட்ல போட்ருவேன். (பெரிய ஸ்விஸ் பேங்க் அக்கவுண்ட் மாதிரி) வீட்ல பசங்க கிட்ட சொன்ன உடனே ஒரு லுக் விட்டாங்க பாரு... அத இங்க வார்த்தைல சொல்ல முடியல. நம்ம டர்பன் ஹெட் மாஸ்டர் ராமஸ்வாமி அய்யங்கார் ரிடயர் ஆனப்புறம் கொஞ்ச நாள் ஸ்கூல் ஆபிஸ்ல வேலை பார்த்தார். அவர் என் பாஸ் புக்கை பார்த்து ஒரு ஷமத்து சொன்ன உடனே க்ரீடம் வச்ச மாதிரி ஆயிடுத்து. இப்ப நினைச்சா சிரிப்பு வரது. இப்ப நூறு ரூபாய்க்கு என்ன மதிப்பு ல?? இப்ப நம்ம பசங்க நம்ம கிட்ட பணம் வாங்கி சேத்து வச்சு நம்ம பிறந்த நாளைக்கு 500 ரூபாய்க்கு கிஃப்ட் வாங்கி கொடுத்துட்டு 1000 ரூபாய்க்கு ட்ரீட்னு வேட்டு வைக்கறாங்க.

1 comment:

கிவியன் said...

//பணம் வாங்கி சேத்து வச்சு // பரவாயில்லயே இங்கிட்டு வளர்ர புள்ளங்க எல்ல்லா பணம் வாங்கினா வேட்டு வெச்சுட்டுத்தான் மறு வேல.

//500 ரூபாய்க்கு கிஃப்ட் வாங்கி கொடுத்துட்டு// பாராட்ட படவேண்டிய விஷயம்..