Monday, May 31, 2010

தென்னிந்திய ஏககால யானை கணக்கெடுப்பு அனுபவங்கள்



மே 15, 16 தேதிகளில் நடந்தது. காட்டில் சுமார் 5 சதுர கி. மி. பரப்பில் எத்தனை யானைகள் உள்ளன என்று ஒவ்வொரு குழுவும் நடந்து சென்று கணக்கு எடுக்க வேண்டும். முதல் நாளே எழுதி வாங்கிக்கொள்கிறார்கள், யானை மிதித்து சட்னியானால் வனத்துறை பொறுப்பல்ல என்று!!

எங்களுக்கு, முதுமலை புலிகள் சரணாலய சரகத்தில் வரும், கேரளா ஓரத்தில் உள்ள sector 37 ஒதுக்கப்பட்டது.




மிக அருமையான அனுபவம்!! நடுக்காட்டில் உள்ள 'ஜோடிபாலம்' 'வேட்டையாடல் தடுப்பு மையத்தில்' (anti-poaching camp) இரண்டு நாட்கள் வாசம்!! சுற்றி அடர்ந்த காடு. இரவு யானைகள் உள்ளே வராமல் தடுக்க ஏழு அடி அகழி.

இரவு வெளியே 'torch' அடித்தால் மின்னும் மான்களின் கண்கள்!! நாகரிக சௌகரியங்கள் ஒண்ணுமே (மின்சாரம், toilet) கிடையாது. பெரும்பாலான கைப்பேசி சேவைகளின் தொடர்புக்கு வெளிய!! அங்கேயே புளிசாதம் சமைத்து பொட்டலம் கட்டி கொடுக்கிறார்கள். காலை 6.30 மணிக்கு நடை ஆரம்பம்...


காலனிகளிலும், காலுறை (!!??) socks இலும் KAS ரத்தினம் பட்டணம் பொடி தாராளமாய் தூவி கொண்டு புறப்படுகிறோம் (ஏன்னு அப்புறம் சொல்றேன்) !! கூட Dr. வெங்கி (வெங்கடரமணன்), திரு. காலன் (வனக்காவலர்) மற்றும் திரு. மாறன் (பழங்குடி) . நடந்தோம், நடந்தோம், காட்டின் ஓரத்துக்கே நடந்தோம். 'என்னடா இங்கேயும் வந்திட்டிங்க " என்று சலித்துக்கொண்டு மான்கள் கூட்டம் ஓடியது. திடீர்னு திரு. காலன் கையை உயர்த்தி நிற்க சைகை செய்கிறார்...."யானைகள்! 50 மீட்டர் தூரத்தில்..நம்மை முகர்ந்து கொண்டிருக்கு!! சுற்றி வரலாம்". அந்த இடத்தை சுற்றி, காற்று நம்மிடம் வருமாறு (down wind) மாறி நடந்தோம்.


எங்கள் வாசம் (நாற்றம் என்று யானை சொல்லுமோ?) போனவுடன், ஒரு தாய் யானையும், இரண்டு குட்டிகளும், கட்டை விட்டு வெளியே வந்து, புல் தரையில் மேய தொடங்கியது. கணக்கு ஆரம்பம்!! கொஞ்ச தூரம் சென்றதும் காட்டில் 'machine gun' சத்தம் அரட்டியது (துர்ரடுர்ரடுராடுர்ற)!!. திரு. காலன் "பயப்பட வேண்டாம். மர அணில், நம்மை கண்ட பயத்தில் கத்துகிறது"....அப்பாடா!!



சாயங்காலம் 4.30 மணி வரை சுமார் 18 கி. மி. நடந்தோம்....10 யானைகள் கணக்கில் சேர்த்து!! கடைசியாய் பார்த்தது ஒரு 'ஒற்றை கொம்பன்' (ஒரு கொம்பு உள்ளது அல்ல! தனியாய் வலம் வரும் ஆண் யானை!!)...

மிக 'danger party' என்று முதல் நாளே சொல்லி இருந்தார்கள். எங்களை பார்த்ததும் தலையை சிலுப்பி எங்களை நோக்கி இரண்டு அடி நடந்தது...பின் உஷாராய் மேய தொடங்கியது. எனக்கு பரவாயில்லை...ரத்தம் 'taste' சரியில்லையோ என்னமோ....அட்டை கடி கம்மிதான்!! பாவம் Dr. வெங்கி!! ஒரு முழு பாக்கெட் மூக்கு பொடி கொட்டியும் கூட, அட்டைகள் போட்டு சாத்தி விட்டது!!




இரண்டாம் நாள், 'line transect' என்ற கணக்கு முறையில் , இரண்டு கி. மி. தூர கயிற்றின் இரு பக்கமும் உள்ள யானை சாணியின் அளவுகள் கொண்டு ஒரு காட்டில் உள்ள யானை அடர்த்தியை (elephant density) ஐ ஒரு 'algorithm' கொண்டு கணக்கிட்டோம். மதியத்திற்கு மேல், "base camp' சென்று 'data sheet' ஒப்படைத்தோம்!! என்ன ஒரே குறை...புலி, சிறுத்தை தென்படவில்லை...புதியதாக பதியப்பட்ட புலி கால் தடம் பார்த்த திருப்தி!! ராஜநாகம் உள்ள காடு...ஒரு நீர்க்கோலி கூட கண்ணில் படலே!!




In my opinion, you should also participate in this exercise as a volunteer at least once...a nice, great way to detox your mind!!

Sureshன் கேள்விகளும் என் பதில்களும்:
1. இந்த யானை கணக்கெடுப்பை வீ.இ.மு., வீ.இ.பி. என பிரிக்கலாமா?

அதாவது வீரப்பன் இறப்பதற்கு முன்னும், பின்னும்? நிச்சயமாக.....நாங்கள் பார்த்த ஒற்றை கொம்பன் சின்ன வயசு யானை...சமீப காலமாகத்தான் இவற்றை பார்க்க முடிகிறது....

2. யானை புல் மேயுமா? கொஞ்சம் பெரிய சைஸ் புல் மட்டும்தான் முடியும்னு நெனக்கிறேன்

என்ன இப்படி கேட்டுட்டே!! யானையால் மிக மிக மெல்லிசான புல்லையும் லாவகமாகப் பறித்து, நிதானமாக மண்ணை தட்டி சாப்பிட முடியும்!! ஒரு மரத்தை சாய்க்கும் தும்பிகையாலே 25 பைசா நாணயத்தை எடுத்து, அதற்காக ஒரு கும்பிடு போட முடியும்!!

3. மூக்கு பொடிக்கு இப்படி ஒரு உபயோகமா? ரத்தத்தில் சக்கரை சாஸ்த்தியா இருந்தா அட்டை விழுந்து புடுங்கும்னு காட்டெரும சரித்திரத்தில் படிச்ச ஞாபகம் ஒரு வேள அதுனாலயோ?
ஹையா!! எனக்கு சர்க்கரை வியாதி இல்லை!!

4. Synchronizeக்கு ஒருங்கிணைக்கப்பட்ட சரியில்லை. சமகாலம் அல்லது ஏககாலம் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கும்.
ஒருங்கிணைப்பு என்பது United/ Union, combined, conjugated, cooperative போன்றவற்றுக்கு சரியாக இருக்கும்.
socks - காலுறை (ஆணுறை போல) கால்குழல் இல்லை.
algorithm- நெறிமுறை அல்லது வழிமுறை.
நன்றி...நன்றி ....corrections made!!

5.நம்மக்கு தெரிஞ்சது சோடாகோலிதான் அது என்ன நீர்கோலி? சற்று படம் போட்டு விவரிக்க முடியுமா?
தண்ணிப்பாம்பை செல்லமா நீர்க்கொலின்னு சொல்வாங்க!!
அட ஆமா இல்லே!! படம் போட மறந்திட்டேன்!!

2 comments:

கிவியன் said...

நன்றி ஸ்ரீ பதிவை வகுப்பில் இட்டதற்கு.

ஆமா படங்கள் எங்கே? படங்கள் மிக முக்கியம். முடிந்தால் பதிவேற்றம் செய்யவும், மிகவும் சுலபம்தான்.

கிவியன் said...

ஸ்ரீ,

மிச்சம் சொச்சம் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் சேர்த்துவிட்டேன். ஏதோ நம்மால முடிஞ்சது (அப்படியே கொஞ்சம் எடிட்டிங்கும் கத்துகலாம் பாரு).