இணையத்தில் செம்மொழி மாநாட்டில் நமது கவிஞர்களது சில கவிதைகளை படிக்கும் பாக்கியம் ஏற்பட்டது.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
வைரமுத்து
மேற்கு தொடர்ச்சி மலை மேகங்களே, நீங்கள் அங்கிருந்தே கை தட்டுகள்
தரையில் கை தட்ட தமிழர்கள் இருக்கிறார்கள்
ஏ ஆகாயமே! உன் நட்சத்திரங்கள் காணோமென்று இரவோடு முறையிடாதே
எல்லாம் கொடிசியா அரங்கத்தில் கூடி விட்டன
நாமெல்லாம் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்
யாருக்கு?.
முத்தமிழறிஞரே மூத்த முதலமைச்சரே.
செம்மொழி தங்கமே, எங்கள் செல்லச் சிங்கமே
தாய்த் தமிழ் நாட்டில் உட்கார்ந்து கவி கேட்க ஒரு லட்சம் பேர்.
இருந்து கவி கேட்க இரு லட்சம் செவிகள்
உங்கள் உயரத்தை நீங்களே தாண்டுகிறீர்கள்
வள்ளுவர் கோட்டம் வனைந்தீர்கள்
அன்னை தமிழ் நாடே அண்ணாந்து பார்த்தது
வள்ளுவர் சிலை வடித்தீர்கள், அனைத்து இந்தியாவும் அண்ணாந்து பார்த்தது
செம்மொழி மாநாடு கண்டீர்கள், அனைத்து உலகமே உங்களை அண்ணாந்து பார்க்கிறது
எங்கள் பாட்டாளியை உள்ளத்தில் வைத்துள்ளது போல் உங்கள் கூட்டணியை உள்ளங்கையில் வைத்துள்ளீர்கள் உங்கள் உள்ளங்கை விரிந்தால்
சூரியன் குவிந்தால் கூட்டணி கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்டவர் நீங்கள்
உங்கள் காப்பீட்டு திட்டத்தில் உழவன் சேர்ந்தான்
உழைப்பாளி சேர்ந்தான்
அன்னத்தாய் சேர்ந்தாள்
பொன்னுத்தாய் சேர்ந்தாள் இன்னும் சேராத ஒரே தாய் தமிழ்த் தாய்
உன் திட்டம் தெரியும் எனக்கு
காப்பீட்டு திட்டத்தில் தமிழ் தாயை சேர்க்கத்தானே இந்த தடபுடல் மாநாடு
கலைஞர் கனவு கண்டால் தமிழ்நாடு முதல் நாடு.
நீங்கள் பெருங்கவிஞர், நானுமொரு கவிஞன்
ஜனநாயக தர்மத்தில் அமெரிக்க ஜனாதிபதி இரு முறை தான்
மேற்கு வங்கத்தின் செந்தலைவன் ஐந்து முறை தான் தமிழ்நாட்டை ஆறாம் முறையும் ஆளப்போகிறவர் நீங்கள் மட்டும் தான்
ஆறுக்கும் உங்களுக்கும் அதிசய ஒற்றுமை
நீங்கள் பிறந்த மண்ணை செழிக்க செய்வது-ஆறு காவிரி ஆறு
உங்கள் தந்தை முத்துவேலர் எண்ணிப்பார்த்தால் எழுத்துகள் ஆறு
முதலெழுத்தோடு சேர்த்தால்-உங்கள் முழுப் பெயரின் மொத்த எழுத்து ஆறு
நீங்கள் பிறந்த மாதம் ஆறு. பெற்ற பிள்ளைகள் ஆறு
அரசாளப் போவதும் ஆறு. இது வரலாறு
வயது தடுக்கிறதே என்று நீங்கள் வருந்தாதீர்கள்
தளபதியிடம் சொல்லி காப்பீட்டு திட்டத்தில் கட்டாயம் சேர்த்து விடுகிறோம்
வீடு கொடுத்தீர்கள். வீடென்றால் அது என்ன வெறும் வீடா?
தாயென்ற ஒரு தெய்வம் தடம் போட்ட வீடு
அண்ணா உணவருந்த இடம் போட்ட வீடு
தியாகத்தால் உழைப்பால் நீ புடம் போட்ட வீடு
ஆண்ட பெரு வீட்டை அறப்பணிக்கு தந்தீரே
ஒரு வகையில் வள்ளுவனை மிஞ்சினீர்கள்.
மாநாடு கூட்டுவதற்கு பெருத்த நிலம் பல உண்டு
கோவையை போல ஒரு பொருத்த நிலம் உண்டா?
ஐவகை நிலமும் கூடிக் கிடந்து கும்மி கொட்டும் ஊரல்லவோ கோவை
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி
இங்கே குறிஞ்சி உண்டா? உண்டு.
ஆனைமலை ஒன்று அருலிருப்பதால் முல்லை உண்டா? உண்டு.
காடும் காடு சார்ந்த இடமும் முல்லை.
நீலகிரி சிகரங்கள் முகில் கொண்ட எப்போதும்முக்காடுபோடுவதால் காடுண்டு-அதனால் முல்லையுண்டு.
மருதமுண்டா? உண்டு.
ஒரு மலையே இங்கு மருதமென்று நிற்பதனால் மருதமுண்டு.
நெய்தல் உண்டா?. உண்டு.
நெசவுக்கு தலைநகரம்-இங்கு நெய்தல் இல்லாமலா?
பாலை இல்லையே என்று பார்க்கிறீரா?. பாலை உண்டு நோக்குமிடந்தோறும் நூற்பாலை உள்ளதால் பாலையும் உண்டு.
நெய்தல் உண்டு. கோவைக்கு கடல் உண்டா?
இல்லை.. கடல் இல்லா ஊருக்கு கடல் கொண்டு வரத்தானோ கலைஞர் இனக்கடல் திரட்டி ஜனக்கடல் கூட்டினார்?
செம்மொழியாமே செம்மொழி சிவப்பு மொழியோ என்று கேலி பேசும் ஒரு கீழ்க் கூட்டம்
நேற்று ஒரு தாயொருத்தியை பார்த்தேன்
மாநாடு பார்க்கவா என்றேன்
என் மகன் பார்க்க என்றாள்
ஏன் என்றேன்
என் மகுடத்தில் செம்மொழி என்ற மாணிக்கம் சூட்டிய மகனுக்கு நனைந்த கண்ணோடு நன்றி சொல்ல என்றாள்
வாலி
’புணைந்தான் அய்யா ஒரு பாட்டு அது செம்மொழி மாநாட்டின் மையநோக்கு. அந்த மையநோக்குப்பாடல் ஈர்த்தது வையநோக்கு.
ஆனால் என் அருமை நண்பர் சோ’வுக்கு மட்டும் அதன் உட்பொருளில் ஒரு அய்யநோக்கு. அது அய்ய நோக்கு அல்ல..அய்யர்நோக்கு. (அரங்கத்தில் கரவொலி-கலைஞர் குலுங்கி சிரித்தார்)
அதுவும் வையநோக்கையும் வையும் நோக்கு’’
‘’ஆலயம்தானே சாமிகளுக்கான இடம்; சாமிகள் மாறலாமா தடம்; இதை உணர்ந்து இப்பொது அறிவாலயத்தில் வந்து அமர்ந்து கொண்டன முத்துச்சாமி, சின்னச்சாமி எனும் இரு சாமிகள்; இதற்கு காரணம் இரு மாமிகள்!’’
பூ ஒன்று ‘ப்பூ’ இவ்வளவுதானா என்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது. ஆரிய வெளிச்சம் அலர்த்தாத பூவுக்கு உதயசூரிய வெளிச்சம் சோபிதம் தந்திருக்கிறது. அப்பூ... எப்பூ?’’
‘’புடவை கட்டிய பூ”
தமிழன்பன்
”பிறக்காத குழந்தைக்கும் தொட்டில் கட்ட அவரிடம்தான் இதயம் இருக்கிறது. இருப்பும் இருக்கிறது.
கலைஞர் என்பது தாயின் ஆண்பால் பெயர்.
அவர் வேட்டி கட்டுகிறார்.
அவர் இதயம் எப்போதும் கசங்காத புடவையோடுதான்.
அவரின் கபால களஞ்சியத்தில் ஆண் எண்ணங்களை விட
ஈர பெண் எண்ணங்களே அதிகம்.
இல்லாவிட்டால் கோபாலபுரத்து வீட்டை கொடையாக தர முடியுமா?
அந்த அவ்வையார் காலத்தில் இவர் இருந்திருந்தால்
அந்த அதியமான் ஏமாந்திருப்பார்.
அவருடைய சங்கப் பாடல்களுக்கெல்லாம்
கலைஞர் சபாநாயகர் ஆகியிருப்பார்.
அந்த நெல்லிக்கனி இன்று இருந்தால் கலைஞர் யாருக்கு கொடுப்பார்?
வாலிக்கா? வைரமுத்துவுக்கா? அப்துல் ரகுமானுக்கா? இல்லை எனக்கா?.
எங்களில் யாருக்கும் தரமாட்டார்.
தமிழ்த்தாய்க்கு தந்து அவள் தின்று துப்பிய விதைகளை
ஒவ்வொரு கவிஞரின் வீட்டு வாசலிலும் விதைத்து வைப்பார்.
வித்தகக் கவிஞர் பா விஜய், தமிழ் தாய்க்கு முகவரி கோபாலபுரம், இன்ஷியல் மு.க
என்ற ரேஞ்சில் படித்த கவிதை எனக்கு முழுவதுமாக நினைவும் இல்லை. இங்கு இணயத்திலும் கிடைக்கவில்லை. யாருக்காவது கிடைத்தால் பதியவும்.
வாழ்க, வளர்க தமிழ்....
2 comments:
கடந்த வாரம் முழுவதுமே ஒரு வித ஜால்ரா சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. சரி ENT நிபுணரிடம் போக வேண்டும் என நிணைத்தேன், ஆனா பாரு செய்தியில் கோவையில் 23ந் தேதி தொடங்கி 27ந்தேதி வரை கலைஞர் நடத்திய சுய விளம்பர செம்மொழி மாநாடு பற்றி படித்தேன். பின்புதான் இந்த ஜால்ரா எங்க இருந்து கேக்குதுன்னு புரிஞ்சுது. மாநாடு முடிஞ்சதும் இப்ப சரியாயிடுச்சு.
இருந்தாலும் ஜெயந்தியை மிக வண்மையாக கண்டிக்கிறேன். இந்த வகுப்பறையில் நல்ல விஷயங்களை மட்டுமே எழுத வேண்டும் என ஒரு வரைய்றை இருக்கு. மக்கள் வரிப்பணத்தில் ரூ. 60 கோடியில் ஜொள்ளு விடாத குறையா இப்படி ஒரு சுயதம்பட்டத்தை செம்மொழி மாநாடு என முலாம் பூசி இதுக்கு மேலும் ரூ 240 கோடியில் கோவையை அலங்காரம் பண்ணி, இதுல இந்த தாத்தா ஆறாவது முறையா வந்து தமிழ்நாட்ட ஆளனுமாம்!! இந்த ஒண்ணறையனா கவிஞனுக்கு என்ன ஆசை பாரு??
இதுல சிலது விட்டு போச்சு அதையும் தேடி இங்க பதியவும்னு சொன்ன ஜெயந்திக்கு ஆட்டோவில் ஆள் அனுப்ப பட்டுள்ளது.
அது வேற ஒண்ணும் இல்ல சுரேஷ்,
இத படிச்சுட்டு நம்ம பசங்களுக்கும் (???) கவிதை எழுதற ஆர்வம் வந்து,
“கோபாலபுர கோமானே
தமிழ்த்தாயின் மூத்த மகன் நீதானே”
அப்படின்லாம் எதாவது முயற்சி பண்ணுவாங்களான்னு பாக்கறேன்.
Post a Comment