Thursday, August 19, 2010

தனக்கேற்ற அங்கீகாரம் தன் நாட்டில் இல்லையென
தன் மண்ணை பிரிந்து பிற மண்ணில் வாழ்பவர்கள்
இரண்டு, மூன்று, ஐந்து வருடங்கள் என அவரவர் வசதிக்கேற்ப
தாய் நாட்டு விஜயம்.
வரும் நேரம், தான் விட்டு சென்றது போல்
தன் நாடு இல்லையென வருத்தம்
மாற்றங்கள் பல தேடி மண் மாறி சென்றவர்கள்
மாற்றம் இங்கு வரும் நேரம் மனம் வருந்துவது ஏன்?
மாற்றங்கள் நிறைந்தது தானே நம் வாழ்க்கை
வலையும் அலை(பேசி)யும் இல்லை என்றால்
ஒரு நாள் சென்றிடுமா?
மாற்றம் இல்லையெனில்
அமெரிக்காவில் இருந்து கொண்டு
அமைந்தகரையில் நம் வீட்டு விசேஷ ஏற்பாடுகளை
கவனிக்க முடியுமா?
மாற்றங்கள் இல்லாது நம் வளர்ச்சி ஏது?
மாற்றத்தை வரவேற்போம்

4 comments:

கிவியன் said...

மாறுபடியும் மடிச்சு மடிச்சு எழுதி..வேணாம் இத ’அதுன்னு’ செல்ல மாட்டேன்.

அட ஒரு வரில சொல்லனும்னா மாறாது இருப்பது மாறுதல் மட்டுமே.

சிவா சொல்வது ஒரு வித nostalgic நினைவுகள். சந்தோஷமான அனுபவங்கள் நம் நினைவில் எப்போதும் பதுங்கியே இருக்கும், மீண்டும் அந்த கணங்கள் வராதா என்ற ஏக்க தேடலே சிவாவின் வெளிப்பாடு. மற்றபடி மாற்றங்களை குறை சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். என்ன சிவா சரிதானே?

ஜெயந்தி நாராயணன் said...

ஆஹா சுரேஷ்

நீ இத அதுன்னு சொன்னதாலதானே தன்னம்பிக்கையோட இத அது மாதிரி எழுதினேன்.

போகட்டும். நீ இப்ப மீண்டும் இடம் பெயர்ந்து நியூஸிக்கு சென்று விட்டாயா?

sreesnake said...

மாற்றங்கள் பல வசதிகளைக் கொடுத்தாலும், ஒரு இனம் புரியத சோகம், ஏக்கம் மனதில் எழுவது மிக சகஜம்....மனது ஒரு வகையில் பழயதை தேடுது...அது அசௌகரியம் ஆக இருந்தால் கூட!! உதரணத்துக்கு, நான் சென்னையில் இருந்தபோது தினமும் காலையில் தாம்பரம் ரயிலடிக்கு செல்லும் பாதை ரொம்ப நெரிசல்...எப்படா இந்த பாலத்தை திறப்பார்கள் என்று ஏங்கியதுண்டு. ரொம்ப நாட்கள் கழித்து (அட இங்க இருக்கும் ஊட்டியில் இருந்துதாங்க!! அமெரிக்காவெல்லாம் போல்லே!!) சென்ற வாரம் தாம்பரம் வந்தேன். பாலம் திறந்தாயிற்று!! நெரிசல் எல்லாம் போயே போச்சு!! அனால் ரோடு அடையாளமே தெரியலே!! எங்கேயோ வந்த மாதிரி இருந்தது!!அந்த பழைய, நெரிசலான ரோட்டை பார்க்க மாட்டோமான்னு ஒரு ஏக்கம்.....சிவாவுக்கும் ஏகதேசம் அதே எண்ணங்கள் தான் இருந்திருக்கும்...சரிதானே?

ஜெயந்தி நாராயணன் said...

இத்துக்குப் பேருதான் “ கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை” நு சொல்லுவாங்க.
80 களில் மதுர எல்லாம் வேணும்ன அதான் இப்ப படமா எடுத்து தள்ளிட்டு இருக்காங்களே பாருங்கப்பா. வேணா சசி கிட்ட சொல்லி இன்னொரு படம் எடுக்க சொல்லலாம்.