Thursday, September 30, 2010

வருடத்தில் ஒரு பதிவு

நம்ம ஜெயந்தி ரொம்ப ஃபீலிங் ஆகி அறிக்கைவிட்டு இருக்கிறபடியால் சரி நம்மளால ஆனது ஒரு பதிவ எழுதி வெப்போம்னு,

மறு மறுபடி இத பத்தியே எழுத வேண்டியிருக்கு,

என்னவோ ஒரு கையாலாகாத்தனம் என நமக்கு நாமே ஒரு காரணத்தை நம்பிக்கொண்டு மிக குறுகிய வட்டத்தில் இயங்கும் நம் சொந்த வாழ்க்கையை செவ்வனே செய்து பழகிவிட்டோம். இதற்கு வெளியே செய்வதற்கு நம்மால் முடியவே முடியாது என்ற அசைவற்ற முடிவும், நம்மை போலவே அநேகமாக எல்லோரும் செய்வதால் இது தப்பில்லை என்ற சமாதானமும் புதிதாக நம்மை எதுவுமே செய்ய விடப்போவதில்லை.

டிசம்பர் 2008ல் தேனுர் சிவாஜியை பற்றி எழுதியது ஞாபகமிருக்கலாம், இப்போது இதே போல இன்னொரு சமூக சேவை பற்றி, இது நிஜம்மாவே தண்ணியில்லா காட்டில் தண்ணீருக்கு ஏற்பாடு செய்யும் ஒரு அமெரிக்கனின் தொண்டு பற்றியது.

டான் மாரிசன் போன்றவர்கள் தொடங்கியிருக்கும் Citizen Effect செய்து வரும் சேவையை பற்றி படிக்கும் போது தோன்றும் ஆற்றாமை வெறும் அந்த நொடியின் நிலையாக மட்டும் இருந்து பின் அதைப்பற்றி மறந்து விடுகிறது..

இப்போதைக்கு என்றாவது, ஏதோ ஒரு புள்ளியில் எங்கிருந்தாவது தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மிச்சம்.

சரி போகட்டும், என்னோட ராசிக்கு சனிக்கிழம எந்திரன் பாக்கலேன்னா மோட்சத்துக்கு போக முடியாதுன்னு சன் டிவில சோசியர் சொன்னாப்டி, அதனால நாமும் சோதில கலந்துரலாம்னு, டிக்கெட் சொல்லியிருக்கேன்,

உழச்சு சம்பாதிச்சத இப்படி ஊதாரித்தனமா விலவெச்ச (NZ$20 per ticket!!) படத்துக்கு போகனுமான்னு ஒரு பக்கம் பட்சி சொல்லிக்கிட்டே இருக்கு,

அட போங்கடா நாமெல்லாம் ’மர’ தமிழரல்லவா

1 comment:

ஜெயந்தி நாராயணன் said...

சிவாஜி எம்.ஜி.ஆர் பத்தி எல்லாம் எழுதினா மக்கள்தான் டென்ஷன் ஆகி வலை கிட்டவே வர யோசிக்கறாங்களே. அது அது வேளை வந்தால் தன்னால் நடக்கும். அது வரை நம்மால் தனிப்பட்ட முறையில் செய்ய முடிந்த நல்ல காரியங்களை செய்வோம். என்று கூட்டாக முடிகிறதோ அன்று அதிலும் கலந்து கொள்ளலாம்.

எங்க ஜோசியர் 6ம் தேதி தான் நேரம் நல்லா இருக்குனு சொல்லியிருக்கார்.
கோடி கோடியா செலவழிச்சு அப்படி என்னதான் பண்ணியிருக்காங்கன்னு பார்ப்போம். தாத்தாவ சாமியாரா ஆக விடாம உலக அழகியோட(கிழவி) ஆட விட்ருக்காங்க. ஆனா உண்மைய சொல்லனும் மனுஷன் நல்லா ஆக்டிவா இருக்கார்.