என்னுடன் வேலை செய்யும்  ஜைன மதத்தை சேர்ந்த பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர்கள் மதத்தில் முக்கால் வாசி பண்டிகைகள்  விரதம்., கடவுள் வழிபாடு மற்றும் மதம் சார்ந்த சில சாங்கியங்கள் நிறைந்ததாக இருக்கும் என்றாள். பதிலுக்கு நம் பண்டிகைகள் பற்றி கேட்டாள், என்ன சொல்றது..  நாங்கள் எல்லா பண்டிகைகளுக்கும் வித விதமாக உணவு பண்டங்கள் செய்து  கடவுளுக்கு நைவேத்தியம் பண்ணி விட்டு சாப்பிடுவோம்,  விரதம் எல்லாம் கிடையாது என்றேன். (other aspects of the festivals apart)
நினைத்துப் பார்த்த போது சிரிப்பு வந்தது.  பொங்கலில் ஆரம்பித்து (இல்லை என்றால் சித்திரை வருடப் பிறப்பில் ஆரம்பித்து) வரிசையாக எல்லா பண்டிகை வரும் போதும் முதலில் நினைவு வருவது - என்னல்லாம் சாப்பிடலாம்.
கிருஷ்ணன் ஜெயந்தி - குழந்தை அன்றுதான் பிறந்திருக்கிறது - நம் வீட்டில் அவனுக்காக முறுக்கு, தட்டை. சீடை வகைகள். 
நவராத்ரி - இன்னிக்கு என்ன சுண்டல்  அல்லது டெய்லி சுண்டல்தானா, இன்னிக்கி வித்தியாசமா வேற எதாவது ஸ்வீட் பண்ணி நைவேத்யம் பண்ணலாம். 
தீபாவளி கேட்கவே வேண்டாம்.  
கார்த்திகை - இந்த வருஷம் சிம்பிலா வடை, அப்பம், பொறிதான் பண்ண முடிந்தது.
இடையில் பல பண்டிகைகள் வெறும் வடை பாயசத்துடன் செல்லும்.
கொலஸ்ட்ரால் , சுகர் ஏன் வராது??
நேற்று கூட மார்கழி மாதம் 27ம் நாள்.  ஆண்டாள் தன்னுடைய  27 வது திருப்பாவையில்
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!* உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்*
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே*
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்*
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு*
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்*
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.            
என்று பாடியிருக்கிறார்.  அதனால் கண்டிப்பாக வருடா வருடம் இந்த நாளில் கிட்ட தட்ட முழங்கை வழி வார எக்கச்சக்க நெய் விட்டு நிறைய முந்திரி போட்டு ஒரு ஹை கொலஸ்ட்ரால் சர்க்கரை பொங்கல் எங்கள் வீட்டில் செய்வோம். (நான்கு நாட்களில் official ஆக பொங்கல் வேறு வரப்போகிறது) ஆண்டாள் முதலில் பாடிய படி மார்கழி மாத ஆரம்பத்திலிருந்து நோன்பு நூற்காமல் இதை மட்டும் சாப்பிடும் போது சிரிப்பு வந்தது.  
வைகுண்ட ஏகாதசிக்கு கூட ஒரு மெனு போடுவோம்.  இன்னிக்கு சாதமே சாப்டக் கூடாது,  கார்த்தால வெண் பொங்கல், மத்தியானம் தோசை அல்லது இட்லி, அப்புறமா ராத்ரி சிம்பிலா சப்பாத்தி டால் பண்ணிக்கலாம்.
அனைவருக்கும் என்னுடய உளம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்
 
 
1 comment:
நல்ல கேள்விகள், ஆண்டாள் திருப்பாவை பாடினபோது நம்ம முன்னோர் எல்ல்லாம் நல்ல உடல் உழைப்போடு இருந்துரிக்கலம், அதனாலே பால், நெய் எல்லாம் போகியோட எரிந்திருக்கலாம். சும்மா எல்லாரும் ஒன்றாக சேர இது எல்லாம் ஒரு சாக்கு தான் :) . இங்கு அமெரிக்காவில் Thanksgiving என்று ஒரு பண்டிகை, இங்கு எல்லோரும் அன்று குடும்பத்துடன் வான் கோழி இறைச்சி உண்டு, TV' இல் அமெரிக்கன் Football பார்ப்பது ஒரு பழக்கம். பண்டிகை முன்னிட்டு வயிறு முட்ட சாப்பிடுவது எல்லா ஊரு வழக்கம் போல் இருக்குது. கடந்த சில வருடுங்களாக இங்கு "Black Friday, Day after thanksgiving" மிக பிரபலம். டிவி முதல் எல்லா தட்டு முட்டு சாமான் வரை வாங்கும் நாள். இந்த Thanksgiving தினம் சில ஐரோப்பாவிலிருந்து வந்த மக்கள் இங்க வாழந்த மக்களுடன் கொண்டாடிய பண்டிகை என்பது ஒரு ஐதீஹம், ஆனால் இது ஒரு மிகபெரிய புருடா. என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும் இருந்தாலும் ஒரு பூடகம்.
நம்ம ஊரு பண்டிகைகள் விட திருவிழாக்கள் தான் ஒரு மஜா. நம்ம கள்ளழகர் திருவிழாவிற்கு போனவர்கள் இதை அமோதிப்பார்கள் என்று ஒரு நம்பிக்கை. அந்த பஞ்சு மிட்டாய், ராட்டினம், வைகயில் தண்ணீர் எல்லாமே ஒரு அனுபவம். உலகத்திலயே "Wedding Anniversary" சார்ந்த திருவிழா இது ஒன்று தான் என நினைக்கிறன். இதில் அழகர் தங்கை திருமணம் கேட்டு கோபித்து கொண்டு போவது போன்று திடீர் திருப்பங்கள். எல்லாமே கூடி களிப்பதிர்க்கு பலவிதமான சாக்குகள். ஆனால் நம்ம ஊரு தீபாவளி மற்றும் பொங்கல் அல்லது திருவிழாக்கள் வேண்டும் என்று சில சமயம் நினைபதுண்டு.
Post a Comment