வணக்கம்,
வந்தார்கள் வென்றார்கள் என்று சமீபத்தில் ஒரு புத்தகத்தை படித்தேன். விகடன் ஆசிரியர் மதன் எழுதியது. நம்ம ஊருக்கு வந்து வாழ்ந்த முகலாயர் வம்சங்களை பற்றி நல்ல ஒரு புத்தகம். நாம படித்த History தான், அனால் சற்றே யதார்த்தம் கலந்து நல்ல ஒரு நடை. முஹம்மத் கோரி படை எடுத்து வந்த சமயம் நம்ம ஊரு ராஜேந்திர சோழன் வடக்கு நோக்கி சென்றது, ஆனால் ஏனோ இருண்டுபெரும் மோதாது எல்லாம் நல்ல விளக்கங்களுடன் எழுதிருக்கிறார். மட்ட்றபடி ஹுமாயுன் மற்றும் ஜெஹாங்கிர் பற்றியும் சில பல நல்ல தகவல்கள். மொத்தத்தில் ஒரு நல்ல புத்தகம். முடிந்தால் படியுங்கள் ..
கலைவாணி கூட ரொம்ப நல்ல புத்தகம் என்று சொன்னார். கலைவாணி பற்றி இன்னும் ஒரு தகவல், ஒபாமா எங்க ஊரு " State of the Union" கூட்டத்திற்கு கலைவாணி வர வேண்டும் என்று அழைத்தார், ஆனால் " Giri Traders" மேலாளர் விடுப்பு கொடுக்கமாட்டேன் என்று முரண்டு பிடித்துவிட்டார். பாவம் கலைவாணி :)
சிவா
2 comments:
புத்தக அறிமுகம், வகுப்பறையில் நல்ல பதிவு சிவா.
சரித்திரம் பற்றியதால் எனக்கு ஒரு கேள்வி யருக்காவது நல்ல விளக்கம் தெரிந்தால் பதியவும்:
உலக சரித்திரத்தை எடுத்துக்கொண்டால் அநேகமாக ஐரோப்பியர்களே மற்ற நாடுகளுக்கு படையெடுத்து சென்றிருக்கிறார்கள். ஆசியாவில் பெரும் நாகரீகங்கள் இருந்த போதும் இவர்கள் ஐரோப்பாவையோ இல்லை மற்ற தேசங்களையோ படையெடுத்து சென்றதாக சரித்திரம் (எனக்கு தெரிந்த அளவுக்கு) இல்லை. இது ஏதனால்? படை பலத்தாலா? அறிவியல் வளச்சியினாலா?
நல்ல கேள்வி. எனக்கு தெரிந்த வரையில் அரபு நாட்டை சேர்ந்தவர்கள் கடல் மார்கமாக படையெடுப்பு செய்ததில்லை. பாலைவன வாழ் மக்கள் என்பதாலோ ? ஆறாம் நூற்றாண்டு சமயம் துருக்கியர் இன்றைய இத்தாலி நாடு வரை வென்று வந்தார்கள். மேலும் சமுதாய மற்றும் பொருள் மேம்பாடு ஆகிய இரு மார்கத்திலும் கிழக்கத்திய நகரியங்கள் சற்றே மேலாக இருந்தன என நிறய இடத்தில படித்தேன்.
ஆசியா மற்றும் அரபு அறிவியல் வளர்ச்சி ஐரோப்பா வளர்ச்சிக்கு முன்னோடி, இது எல்லாம் தாண்டி பார்த்தால் ஒரு வித அதிர்ஷ்டம் கூட..
Post a Comment