நீங்கள் படிக்கும் புத்தகங்கள் ஒரு list போடுங்களேன். அதை விட படித்த புத்தங்களில் பிடித்தவை பற்றி சற்று எழுதங்களேன். இந்த நாள் தமிழ் எழுத்தாளர்கள் பற்றியும் முடிந்தால் எழுதுங்கள். நான் தற்சமயம் படிக்கும் புத்தகங்கள்
- சந்தன காடு சிறுத்தை - வீரப்பன் வாழ்கை வரலாறு . அப்பா வெறும் மனித மற்றும் விலங்கு கொலைகள்
- உடையார் பாலகுமாரனின் 5 பாக சரித்திர நாவல் ( கொஞ்சம் கொஞ்சம் பொன்னியின் செல்வன் பார்த்து Bit அடித்த மாதிரி தெரியுது.
1 comment:
நான் இப்பொழுது படித்துக் கொண்டிருப்பது ஜெயமோஹனின் “விஷ்ணுபுரம்”.
சுஜாதாவின் அனைத்து படைப்புகளும் (கணேஷ் வஸந்த் கதைகள் நீங்கலாக - அது கூட சிறு வயதில் பிடித்து படித்ததுதான்) நான் ரசித்து படிப்பவை.
ஜெயகாந்தன் சிறுகதை தொகுப்பு கிடைத்தால் படி. (அவருடைய நாவல்களை விட சிறுகதைகள் என்னை கவர்ந்தன.)
இந்திரா பார்த்தசாரதி மற்றும் அசோகமித்திரன் கதைகள் நன்றாக இருக்கும்.
கல்கியின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் மட்டுமே பிடிக்கும். சமூக நாவல் போர்.
லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.
வலையில் நேரம் கிடைக்கும் போது நான் விரும்பி படிப்பது
http://www.jeyamohan.in
http://www.sramakrishnan.com
Post a Comment