Friday, August 5, 2011

கான்சர் – விழிப்புணர்வு

நம் குடும்பத்தில், நமக்கு நெருங்கிய ஒருவருக்கு வரும் போதுதான் இந்த நோயின் தீவிரம் நன்கு புரிகிறது. அது வரை ஒரு செய்தியாக அல்லது ஒரு வகையான அனுதாபத்துடன் நம்முடைய ரியாக்ஷன் முடிந்து விடுகிறது.

மருத்துவமனையில் ரேடியேஷனுக்கு காத்திருந்த வேளையில் அங்கு வரும் பல தரப்பட்ட நோயாளிகளை பார்த்த போது மனது மிகவும் பாரமாகி விட்டது.

எஞ்சினியரிங் முடித்து விட்டு கேம்பஸில் செலெக்டாகி இருக்கும் ஒரு பெண், 35 வயது மதிக்க தக்க ஒரு பெண், மூக்கில் ட்யூபுடன் ஒரு முதியவர், 25 வயது மதிக்க தக்க ஒரு பெண், சுடிதார் அணிந்த தன் மகளின் மடியில் படுத்த படி காத்திருக்கும் ஒருவர்……….

இவர்கள் அனைவரையும் விட என்னை டிஸ்டர்ப் செய்தது– ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரப்பட்டு ரேடியேஷனுக்கு காத்திருந்த முப்பது – முப்பத்தைந்து வயது மதிக்க தக்க ஒரு ஆண். நான் கவனித்த அந்த பத்து நிமிடங்களில், கண் இமைக்காமல் மேலேயெ பார்த்துக் கொண்டிருந்த அந்த முகத்தில் ஆயிரம் சிந்தனைகள். என்னவெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தானோ??
என்ன கொடுமை இது, வயது வித்தியாசம் பாராமல் யாரை வேண்டுமானாலும் தாக்கும் இந்த நோய்??

எப்ப வரும்? யாருக்கு வரும்? எப்படி வரும் ? என்பதெல்லாம் தெளிவாக புரியாததால், இப்பொழுது நமக்கு தேவை, இந்நோயைப் பற்றிய ஒரு விழிப்புணர்வும், பீரியாடிகல் மெடிகல் செக்கப்பும் தான். சிறிதளவு தகவல் இங்கு உள்ளது.
http://www.indg.in/health/diseases/b95bbeba9bcdb9abb0bcd-baabc1bb1bcdbb1bc1-ba8bafbcd
அதிகம் தெரிந்து கொண்டால், குழப்பமும் மன உளைச்சலும்தான் வரும்.
அடிப்படையான விஷயங்களை தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
நாற்பது வயதை கடந்த நம்மில் ரெகுலராக மருத்துவ பரிசோதனை செய்பவர்கள் எத்தனை பேர்? இங்கு பதிவு செய்தால் மற்றவர்களுக்கு மோட்டிவேஷனாக இருக்கும். நான் இது வரை போகவில்லை. வழக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறேன்,
பார்க்கலாம்……

5 comments:

கிவியன் said...

மீண்டும் வகுப்பில் இணைந்தது நன்று.

அந்த ஜிலேபி மேட்டர் இதுதான் என்று தெளிவுபடுத்திவிட்டாய்.

புற்றுநோய் விழிப்புணர்வு இப்படி ஏற்படுவதை நான் சமீபகாலமாக பல நட்பு மற்றும் தெரிந்தவர்கள் மூலம் பார்க்கிறேன்.

புற்றுநோயை இன்றைய விஞ்ஞான உலகில் மனிதனின் செல்களில் ஏற்படும் ஒரு பரிணாமவளர்ச்சியாக பார்க்கிறார்கள். அதாவது evolution. அதாவது சுற்றுப்புற சூழலால் காற்றிலிருந்து உண்ணும் உணவு வரை எல்லா வற்றிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் மனிதனின் செல்கள் இந்த பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொண்டு புது அவதாரமெடுப்பதே புற்றுநோய் என ஒரு புதிய சித்தாந்தத்தை வைத்து ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

உன் மாமியார் நலமடைய நம்பிக்கை கொள்.

ஜெயந்தி நாராயணன் said...

எனக்கு புரியல. தற்காப்புக்காக நம் உடலுக்குள்ளேயே புது அவதாரமா? செல்லோட லொள்ளு தாங்க முடியலப்பா... செல் செல்லாவே இருக்க வேண்டியது தானே??

கிவியன் said...

இதை விளக்க நீண்ட பதிவு மற்றும் நேரமும் தேவை, இப்போதைக்கு சுருக்கமாக, செல்கள் இரண்டாக பிரியும் என்பதை பள்ளியில் படித்தது ஞாபகமிருக்கலாம். அப்படி பிரியும் செல்கள் இரண்டுக்கும் ஒரு வித்தயாசமும் இருக்கக் கூடாது. கண்ணாடியின் பிம்பம் போல அச்சு அசலாக இருக்க வேண்டும். ஆனால் இந்த //சுற்றுப்புற சூழலால் காற்றிலிருந்து உண்ணும் உணவு வரை எல்லா வற்றிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களால்// இப்படி உடலில் எங்காவது ஒரு செல் பிரியும் போது வேறு மாதிரி பிரியும். இதைத்தான் புதிய ஆராய்ச்சி evolution of the cell to survive the effect of chemicals and other harmful things that could affect them என்று சொல்லுகிறது.

இந்த புது அவதாரம் இரண்டாக பிரியும் போது அதனுடைய அச்சாக இருக்க்மே தவிர மூல செல்லின் அடையாளங்கள் காணாமல் போகும். மேலும் இந்த மாதிரி பிளந்த செல், இயற்கை விதியான ஒன்று இரண்டாக வேண்டும் என்பதை மீறி ஒன்று மூண்றாக பிரிவது, என்று இஷ்டம் போல பறந்து விரிவதே புற்றுநோய்.

இதன் சிகிச்சை, உடலில் எந்த பகுதியில் இது வளர்கிறதோ அந்த பகுதியில் கதிரியக்கம் செலுத்தி அதனை அழிப்பது. இதில் பக்கத்தில் இருக்கும் சில நல்ல செல்லும் சேர்ந்து கோவிந்தாவாகிவிடும் அதே சமயத்தில் ஒன்று இரண்டு புற்றுநோய் செல்லும் மீதி இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அது மீண்டும் வளர ஆரம்பிக்கும். இதனால்தான் புற்றுநோய் ஒரு-வழி பயன சீட்டு போல.

கதிரியக்கத்தை தவிர இப்போது நேநோ தொழில்நுட்பத்தில் புதிய மருத்துவ ஆராய்ச்சி நடந்து வருகிறது. அதாவது targeted drug delivery. இதன் மூலம் புற்றுநோய் செல்லை மாத்திரம் அடையாளம் கண்டு, அதனுள் மட்டும் புகுந்து அழிக்கும் நவீன மருந்து. இது மார்கெட்டுக்கு வர இன்னும் காலம் பிடிக்கும்.

ஜெயந்தி நாராயணன் said...

சூப்பர் சுரேஷ், இப்ப புரியரது. நன்றி.

மாணவர்களுக்கு நீ ஒரு நல்ல டீச்சர் என்பதும் புரிகிறது.

Siva said...

புற்றுநோய் விழிப்புணர்வு நம்ம ஊரில் மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் சற்றே சூடு பிடித்துள்ளது. இங்கு Standford முதல் பல பல்கலைகழகங்கள் சர்றந்த ஆய்வு கூடங்கள் வெகு உற்சாகமாக ஆரயற்சி செய்ய்ரங்கோ.. கண்டிப்பாக இதுக்கு ஒரு நிவாரணம் வரும் என்று சந்தேகமே இல்லை. கண்டிப்பாக இன்னும் 10 வருடதற்குள் வந்துவிடும் என்று ஒரு பரவலான நம்பிக்கை ( மற்றும் ஆசை).

மேலும் புற்றுநோய் மரபு வழி வருவதிற்கு நம்ம ஊரு பழக்க வழக்கங்களும் ஒரு காரணம். சொந்தத்தில் திருமணம், ஒரே சாதி திருமணம் போன்றவை இதை அதிகரிக்கின்றன என்பது ஒரு கருது. சுற்றுபுற சூழல் மற்றும் ரசாயன உரங்கள் எல்லாம் கூட இந்த நோயை தூடுகிறது..


சிவா