Monday, October 1, 2012
தாண்டவம்
இப்பதான் சமீபத்தில் யாரோ ஒருவர், தன்னுடய திரைக்கதையை யு டீ வீ ப்ரொடக்ஷன்ஸ் தனஞ்சயனிடம் கொடுத்ததாகவும், அதை அவர் டைரக்டர் விஜய்யை வைத்து தாண்டவமாக எடுத்து விட்டதாகவும், அதற்காக அவர் போராடி வருவதாகவும் படித்தேன்.
படத்தை பார்த்தவுடன் இந்த திரைக்கதைக்கா இவ்வளவு போராட்டம் என்று தோன்றியது.
கூடுதலாக வயசான தோற்றத்தில் உள்ள விகரம் பார்க்க பாவமாக இருந்தது. கண் தெரியாத விக்ரமிடம், ஒரு காசி, தெய்வத்திருமகன் கலந்த உடல் மொழி இருந்தது. கமலைப் போல இவனும் படுத்த ஆரம்பிப்பானோ என்ற பயம் வருகிறது.
அனுஷ்கா கொஞ்சம் ஆறுதல். டெல்லியில் கண் டாக்டராக இருக்கும் அனுஷ்காவிற்கு, தான் திருமணம் செய்து கொள்ள போகிறவர் என்ன உத்யோகத்தில் இருக்கிறார் என்று கூட தெரியாமல் இருப்பது அபத்தம்
சந்தானம் காமெடி கூட ரொம்ப சிரிப்பு வரல.
நாசர் ஒரு காமெடி போலிஸ். கைல ஒரு ஐ பாடை வைத்துக் கொண்டு அவர் செய்யும் இன்வெஸ்டிகேஷன் பயங்கர காமெடி.
ஜீ வீ ப்ரகாஷ் 25 வது படம்னு கொடுத்த பில்ட் அப் க்கு இசை சுமார்.
வேலை வேலை என்று இருப்பதால் நம்ம எப்ப பாரு டீல்ல விடறாங்களேனு, எனக்கும் சேர்த்து டிக்கட் எடுக்க சொன்னது பிசகு.
Labels:
Jayanthi
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இது நல்ல உபயோகமான பதிவு. தாண்டவத்த பாக்கலாம்னு இருந்தவங்க கொஞ்சம் யோசிச்சு செய்யலாம். இருந்தாலும் விக்ரம் படத்த பாக்குரத விட வேர வேலை செய்யலாம்கிர மாதிரி எப்படி சொல்லலாம்?
சினிமா பத்தி எழுதினாலாவது நம்ம பய புள்ளைங்க ஏதாவது எழுதுவாங்கன்னு தாண்டவம் படத்த குறி வைத்தாயா ?
அந்த படத்த விடுங்கப்பா ... இந்த அனுஷ்கா ... ஊஹ் ... பெத்தாங்களா, செஞ்சாங்களா ...
Post a Comment