Thursday, December 27, 2012
உயர் திரு. குஞ்சம்மாள் ஆசிரியை
உயர் திரு. குஞ்சம்மாள் ஆசிரியை .
இப்பொழுதாவது நன்றி நவில்வோம் !.
நாம் மட்டும் அல்ல .நம் பள்ளியில் படித்த அணைத்து மாணவர்களுக்கும் அவர் மறக்க முடியாத ஆசிரியர் .
மாணவர்களுக்கு ஒழுக்கமும் கட்டுப்பாடும் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே .அதை சிலர் அடித்து போதிப்பார்கள் .
திருமதி . குஞ்சம்மாள் ஆசிரியை அணுகுமுறை கொஞ்சம் வித்தியாசம் . முதலில் வார்த்தையால் மனதை புண்படுத்தி அனைவரையும் கட்டுபாடுக்குள் கொண்டு வந்து பிறகு ஒழுக்கத்தை போதிப்பார்.
அந்த ஒழுக்கம் இன்றுவரை அனைவரிடம் இருக்கிறது ,அது தொடரும் .
நம் நண்பர்கள் அனைவரும் பயந்தான்க்கொள்ளிகள் என்று சொல்ல முடியாது .சேட்டைக்கார பசங்க .
அவர் வகுப்பறையில் நுழைந்தவுடன் எல்லோரையும் ஒரு பார்வையால் அடங்க வைத்து விடுவார் . பின்பு போதனைகள் ஆணி அடித்தார் போல் மண்டையில் இறங்கும் .எனக்கு சில விஷயங்கள் அந்த வயதில் தேவைப்பட்டது .அது அவரிடமிருந்துதான் கிடைத்தது. அவருக்கு என்னுடைய நன்றி என்றும் உரித்தாகும் .
ஒன்பதாவது வகுப்புகள் இருக்கும் தாள்வாரத்தில் நடந்து சென்றால் எல்லா வகுப்புக்குள்ளும் ஒரு விவரிக்க இயலாத சப்தங்கள் அல்லது பெரீறைச்சல்கள் வரும் .ஆனால் , ஒரு வகுப்பறையில் மட்டும் நிசப்தம் இருந்தால் அது திருமதி . குஞ்சம்மாள் இருக்கும் இடமாக கொள்ளலாம் .
நமக்குள் இருக்கும் நல்ல விஷயங்களுக்கு வித்திட்டவர் என்ற வகையில் அவருக்கு நன்றி நவில்வோம் !.
அவருடைய குடும்பததாற்கு நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்கள் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment