Tuesday, May 7, 2013

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சியில், சில வாரங்களாக நாட்டு மக்களை மகிழ்விக்க ப்ரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.

முதலில் பத்மஸ்ரீ கமலஹாசன். இந்த ஆளு அலும்பு தாங்க முடியலப்பா.
வர வர கமல் பேட்டி கூட ஹாலில் குடும்பத்துடன் பார்த்தால் நடு நடுவில் நெளிய வேண்டி இருக்கிறது. இதில் தான் நாஸ்திகன் தான் எனபதை யாருக்கு புரிய வைக்க இவ்வளவு ப்ரயத்தனம்னு தெரியல. இருந்துக்கோ.. யார் வேணாம்னு சொன்னாங்க?? வடிவேலு, நானும் ரெளடிதான் நானும் ரெளடி தான்னு சொல்ற மாதிரி… இதுல இன்னொரு காமெடி (என்னப்பா யாரோ கேஸ் போடப் போறாங்கனு சொன்னாங்க), மெட்ரோ ப்ரியா அண்ட் டிடி யால் வந்தது.
கமல் - “எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி நடக்குது” தொடர்ந்து, “ இந்த ப்ரியா டிடி மட்டும் அல்ல பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு என்னிடம் உள்ள ஈர்ப்புக்கு நான் நன்றிக் கடன் பற்றிருக்கிறேன், , , தொடர்ந்து நிறய கமா போட்டு பெரிய வாக்கியமா உங்கள் கற்பனைக்கு அமைத்து கமல் குரலில் சொல்லி கொள்ளவும்.

அடுத்து அரவிந்சாமி – இது கொஞ்சம் சென்சிபிலா இருந்தது. நடிகனை தாண்டி அவருடைய பண்முகம் வெளிக் கொணரப்பட்டது. நடிக்காத காலத்தில் பசங்களுக்கு கணக்கு ட்யூஷன் எடுத்ததாக சொன்னார். - “இந்த மாதிரி ட்யூஷன்லாம் என்னய சேக்கறச்ச உனக்கு தெரியாதே” - என்னுடைய மகள்...

அடுத்து நம் அனைவரின் ஃபேவரைட் மயிலு…. இப்ப இருக்கும் ஸ்ரீதேவி முகத்தில் மயிலை பொறுத்திக் கொண்டே முழு நிகழ்ச்சியும் பார்த்தேன். மூன்று முடிச்சில் 13 வயதுதான் என்ற போது மூர்ச்சை யாகித்தான் போனேன்.
இங்கு நடித்ததில் அல்மோஸ்ட் எல்லா படமும் ஹிட் கொடுத்த ஸ்ரீதேவி பார்க்க பார்க்க பேச பேச பிடித்தது.

லாஸ்ட்டா ரயிலு ராதிகா. சின்ன வயசுல பார்த்தாலே கோபம் வரும். பின்ன மயில பார்த்த கண்ணால ரயிலா….. ஆனா இப்பலாம் பிடிக்கும்
மிகவும் ஸ்ட்ரெயிட் ஃபார்வார்ட் பேச்சு. நோ நான்சென்ஸ். அப்புறம் அந்த தைரியம்.

முக்கியமா நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு எழுத காரணம் ராதிகாவ பார்த்த அப்புறம்தான். ஏன் தெரியுமா. அந்த பேச்சும், ஒரு விஷயத்த சொன்ன உடன் புரிந்ததா என்ற பார்வையும், அப்புறம் எல்லாவற்றிகும் மேலாக அந்த சிரிப்பும் நம் தோழி ஒருவரை நினைவு படுத்தியது. எஸ்…. சங்கரிதான் அது. உங்கள் யாருக்காவது அப்படி தோன்றி இருக்கா??

சங்கரி, உன்னிடம் யாராவது சொல்லி இருக்கிறார்களா???

7 comments:

Siva said...

இந்த பதிவை படித்த பிறகு YouTube மூலமாக கமல் கலந்துகொண்ட நிகழ்ச்சியை பார்த்தேன். ஏனோ நெளிய வேண்டிருக்கவில்லை காலம் மற்றும் சூழலும் என்னை மாற்றிவிட்டது என நினைக்கிறேன். ஏனோ எனக்கு ஆத்திகம், நாத்திகம், சினிமா எல்லவற்றையும் விட கடைசியில் கமல் சொன்ன கதை ரொம்ப உரைத்தது. AIDS - HIV+ve என கணிக்க பட்ட இன்ரண்டு சிறுமிகளை பற்றி கதை.

சிவா

கிவியன் said...

மொதல்ல பதிவெழுதினதுக்கு பாராட்டுக்கள். (இப்படி ஆயிருச்சே)

எனக்கென்னவோ கமல் மிக யதார்தமாக பேசியது போலிருந்தது. எனினும் அவருக்கான கேள்விகளை முன்கூட்டியே ஒத்திகை பார்த்திருக்கலாம்.

ஆனா அரவிந்தசாமி, ஸ்ரீதேவி ராதிகா நிகழ்ச்சியெல்லாம் பாக்க நேரமும்+பொறுமையும் கொடுப்பா என குறிஞ்சி குமரனை வேண்டி கேட்டுக்கொண்டுள்ளேன்.

ராதிகாவில் சங்கரியை தேடி கண்டுபிடித்திருப்பது சுவாரசியமாக இருக்கிறது அதற்காக ராதிகா போல இருக்கிறாய் என்று யாராவது சொன்னார்களா என்று சங்கரியை கேட்டால்? ஏன் என்ன பாத்து இப்படி கேட்ட என்று கோப்பட வாய்ப்பிருக்கிறது.

ஜெயந்தி நாராயணன் said...

நான் சொன்னது ராதிகா பேசும் போதும் சிரிக்கும் போதும் எனக்கு சங்கரிய நினைவு படுத்துவதாக....... நடுவுல புகுந்து கலகம் பண்ணாத.. :)

கமலோட ரொம்ப யதார்த்தம் தான் சில சமயம் எனக்கு ஒத்துக்க மாட்டேங்றது...

அனைவருடய பேட்டி மற்றும் போட்டிக்கான கேள்விகள் ஒத்திகை பார்க்க பட்டதாகத்தான் இருக்கும்.

ஜெயந்தி நாராயணன் said...

//(இப்படி ஆயிருச்சே)// மற்றவர்களை விடு... நீ எங்கே எழுதுகிறாய்?

“ஆளில்லாத கடைல எதுக்கு டீ ஆத்தனும்”ங்ற பதில் வேண்டாம்.

கிவியன் said...

அட ஆளில்லாத கடை என்பதெல்லாம் இல்லை, ஆளை எதிர்பார்த்து டீ போட வந்தவனில்லை.ஆக்ச்சுவலி என்ன விஷயம்னா டீ போட் சரக்கே இல்லை யுவர் ஆனர்.

Pradeep Kannan said...

definetly sankari won't like equating her with Radhika. In my view....Shankari still looks like adolescent girls. Radhika is an aunty (!lol)and shankari is naughty (BMS sir has to forgive me). Only one similarity is.....in my view both are assertive. That is a encouraging positive side of life. About Kamal.... he is a Padikatha Methai.... His conflation scripted in Tamil Magazines during our school days are class....Matchless.... /Kan/

Pradeep Kannan said...

Shankari would certainly object equating her with Radhika aunty. Shankari is still very enthusiastic and lively person. No one can presume that she is over 40 (BSM sir should forgive me for this comment). Certain qualities of Radhika are very nice. She is very assertive and bold. That add color to the feminity in her. The present generation won't appreciate it.
Kamal is a versatile person. He is a padikkatha methai. His conflation published in Tamil Magazines during our school days reflect his personality nicely. so I vote for Kamal.../Kan/