தமிழ் அம்மாவையும் ,திரு AN அவர்களையும் ஞாபகம் செய்த சுரேஷுக்கும் ஜெய்யுக்கும் நன்றி.
அவர்களை பற்றி எனக்குள் சில நினைவுகள்.
ஒருமுறை திரு AN (A.Narayanan) 1982 இல் வகுப்பறையில் மதுரை Map தெரியுமா என்று கேட்க நான் எதோ கேள்வி ஞானத்தில் கையை தூக்க ,என்னிடம் chalk கொடுத்து வரைய சொன்னார் .நானும் திட்டினாலும் பரவாயில்லை என்று கட்டம் போட்டு காட்டினேன் .அவரும் good என்று பாராட்டி அனுப்பினார் .அவ்வபொழுது எனக்கு அத்தி பூத்தார் போல் வகுப்பறையில் பாராட்டு கிடைக்கும்.
ஒரு முறை திரு AN. டேபிளில் சாய்ந்த வன்னம் இடது கையால் நெஞ்சை பிடித்து கொண்டு நின்று விட்டார் . மொத்த வகுப்பறையும் ஸ்தம்பித்துவிட்டது. ஸ்ரீ குமாரும் அனந்துவும் பதைத்து போய் கிளாசுக்கும் வாசலுக்கும் அல்லாடினார்கள் . கடைசியில் பக்கத்தில் இருந்த மகாதேவனை அழைக்க .அவர் வந்து அலட்டாமல் என்ன என்று கேட்க .இவரும் பாவம் gas என்று முடித்துக்கொண்டார் .
உப்போ..உப்பு.. என்று நீட்டு தொடருக்கு உயிர் கொடுத்து கற்று கொடுத்த வாசனின் அம்மா நம் எல்லோருக்கும் தமிழ் அம்மா . "கைக்கிளை" என்ற இலக்கண வார்த்தை கூறி உதாரணம் கேட்க "ஒரு தலை ராகம்" என்று தங்கபாண்டியன் கூறி முதல் சொட்டு வாங்கினான் . இன்று வரை எனக்கு அவர்கள் கற்பித்த பகுபத இலக்கணம் புரியவில்லை . திருக்குறளை பகுதி ,விகுதியாக பிரிக்க தெரியாது .
விமர்சனம் தொடரும் ...
 
 
No comments:
Post a Comment