Tuesday, June 30, 2009

தோழியே ,உன் மனதை தேற்றிக்கொள் !


திரு. மகாலிங்கம் அவர்களுக்கு,
உங்களை சந்தித்தது இல்லை.

நீங்கள் எங்களுக்கு தெரிந்தவரின் நெருங்கியவர் என்பது தெரிவதற்கு முன்னரே உங்களை குறித்து தகவல்கள் இந்தியாவையே பதற வைத்தது. ஆனால் நீங்கள் சில இழப்புகளுக்கு பிறகு கிடைப்பீர்கள் என்று நம்பிக்கை கொண்டிருதோம்.

நடந்ததோ... நேர்மாறனவை!

ஒரு நாளின் துவக்கத்தை இயற்கையை அங்கீகரப்பதின் மூலம் தொடங்கி வைக்கிறோம் .நீங்களும் அதைத்தான் மழை பெய்தாலும் சரி என்று குடை எடுத்து புறப்பட்டீர்கள்.

இயற்கையின் திட்டமோ வேறாக இருந்திருக்கிறது.

இங்கே அனைவருக்கும் கடமைகள் மிச்சமிருப்பதால்
ஓட்டிக்கொண்டிருக்கிறோம் .உங்களுக்கு கடமைகளில் இருந்து விடுதலை . இருந்தாலும் உங்களுக்குள் இருந்த அந்த கடைசி நொடி எங்களை பதற வைக்கிறது .

எப்படி முடித்து கொண்டீர்கள் ? ஈஸ்வரா .... என்றா?

என்ன இருந்து என்ன .உங்களை காப்பற்ற, உருவி போட வேஷ்டி கூட இல்லையே .

இதுதான் நிஜம் .....

எங்கள் உடன் படித்த தோழியே ,உன் மனதை தேற்றிக்கொள் . இந்த நிஜத்தை ஒப்புக்கொள். உனக்கு கடமைகள் இன்னும் மிச்சமிருக்கிறது.

தாமு

------

My Heartfelt Condolences to Vinayagasundari and Family.I came to understand this fatal incident thro' Asha and I was shellshocked.The other day when we all met I still remember the bright smiling face of hers and I cant imagine to see her without those.Eventhough I dont know her much I join with the entire friend(student) community in giving her support and strength which will give her lots of hope for her future.

Very saddened.

Sathya

--------

Very sorry vinayaka sundari... My heartfelt condolences to you and your family members.May the mans soul rest in peace.

Raju



4 comments:

கிவியன் said...

ஈடு செய்ய இயலாத இழப்புதான்.

//எப்படி முடித்து கொண்டீர்கள் ?// அப்படி என்றால் மகாலிங்கம் தன் முடிவை தானே தேடிக்கொண்டாரா? இது உறுதிப்படுத்தப்பட்டதா?

மிகவும் கோழைத்தனமானது. ஆனால் அப்படி ஒரு மன அழுத்தத்தில் மகா இருந்திருக்க வேண்டும். யாராவது தக்க சமயத்தில் அந்த மன அழுத்தத்தை சற்று குறைத்திருந்தால் கூட இப்படி ஒரு முடிவை மகா தேடியிருக்கமாட்டார்.

விநாய சுந்தரிக்கு வருத்தம் தெரிவிப்பதைவிட வரும் காலத்தில் நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டும். துணை இன்றி எதிர்காலத்தை சமாளித்து வாழும் மன உறுதி அவளுக்கு கிடைக்க வேண்டும்.

மக்கள்ஸ்: வி.சுவுக்கு அவரவர் தனித்தனியே இப்படி வருத்தம் தெரிவித்து பதிவு போட வேண்டாம். யாராவது ஒரு பதிவுக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டியதை பின்னூட்டமாக எழுதலாம்.

தாமு said...

// அப்படி என்றால் மகாலிங்கம் தன் முடிவை தானே தேடிக்கொண்டாரா? இது உறுதிப்படுத்தப்பட்டதா? //.

அபிஷ்ட்டு...!எதுவும் உறுதி படுத்தப்படவில்லை.

மரண அவஸ்தையை எப்படி முடித்து கொண்டீர்கள் என்பது பொருந்தும்.

மேலும் மீடியாக்கள் சொல்வது எல்லாம் பொருந்தாது.

விசு சொல்வதை ஏற்றுக்கொள்வது நல்லது.

தாமு said...
This comment has been removed by the author.
Siva said...

தோழி ,
எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் கணவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

சிவா