கடவுள் நம்பிக்கை  -  எக்கச்சக்கம்.  நம்மை மீறிய சக்தி கண்டிப்பாக இருக்கிறது.
மன்னிப்பு  - வேற யார்கிட்ட புள்ளாண்டான் கிட்டதான்.  தினமும் மதியம் பள்ளியிலிருந்து  நான் தான் அழைத்து வருவேன்.  பள்ளிக்கு மிக அருகில் நூலகம்.  மூன்று  நாட்கள்  தொடர்ச்சியாக அவன் காலையில் ஞாபகப் படுத்தியும் மதியம் அவன் படித்து விட்டு திருப்பி கொடுக்க வேண்டிய புத்தகங்களை எடுத்துப்  போக மறந்து ,  அப்பா...  சமாளிக்கறதுக்குள்ள உன் பாடு என் பாடு.
தேர்தலில் ஓட்டு - எப்பவும்  போடுவேன்.  இந்த முறை  விடுமுறைக்கு ஸ்ரீரங்கம் சென்றதால் முடியவில்லை.
புதிய முயற்சி -  புதுசுன்னு சொல்ல முடியாது.  ஏற்கனவே முயற்சி செய்து  தோல்வி அடைந்த விஷயம்.  பையன்  எப்ப பாரு  பார்க்கறானேன்னு
இந்த கார்ட்டூன் வகையறாக்கள் மற்றும் நம்ம சேனல்ல போடற ஹாலிவுட் படங்கள் பார்க்க முயன்றேன்.     இந்த தமிழாக்க கொடுமைய தாங்க முடியல.  இப்படி கீச் கீச் என்று பெண் குரல்கள் யார் கொடுக்கிறார்கள் தெரியவில்லை.
தமிழாக்க ஹாலிவுட் படங்களில் மேலும் சில கொடுமைகள்
1. நடுவில் ரஜினி பாட்டு
2. நம்ம லோகல் சென்னை பாஷையில் வசனங்கள்.
விளையாட்டு -  வீட்டுக்கு வெளியே குழந்தைகளுடன் ஷட்டில் காக் விளையாடுவது உண்டு.  இப்ப இல்ல.  வேற என்ன காரணம் - வயசாயிடுச்சு
அழுதது -  என்னுடய அஜாக்கிரதையினால்  ஏற்பட்ட அந்த சம்பவத்தை நினைத்து இப்பவும் வருத்த படறது உண்டு.  மூன்று  வருடங்களுக்கு முன்னால் என் பையன் 3ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது பள்ளியில் vandaloor zoo  அழைத்துப் போகப் போகிறார்கள் என்று ஒரு வாரமாய் சந்தோஷக் கனவுகளுடன் இருந்தான்.  முதல்  நாள் friends கிட்ட போன் பண்ணி பேசி ப்ளான் பண்ணி (எப்பவுமே இந்த field trip  போறதுன்ன ரொம்ப  excite ஆயிடுவான்) snack, cool drinks எல்லாம்  பாக்காவா வாங்கி எடுத்து வைத்துக் கொண்டான்.  காலையில்  uniform iron பண்ண மறந்து போய், அவசரத்தில் iron table  எடுக்காமல் பெட் மேலயே வச்சு iron  பண்ணலாம்னு switch on  பண்ணிட்டு, பாதி பண்ணிக் கொண்டு இருக்கும் போது எதற்கோ பெண் அழைக்க அப்படியே வைத்து விட்டு போய் விட்டேன்.  குளித்து விட்டு வந்த குழந்தை அதை கவனிக்காமல் அதன் அருகில் உட்கார வந்தவன் அதில் சாய்ந்து விட்டான்.  பெரிய அலறல்.  வந்து பார்த்தால்  அப்படியே இடுப்பில்  4 அங்குலத்திற்கு தீக்காயம்.  தோல் உரிந்து வந்து விட்டது.  ஐந்தே நிமிடத்தில் கண்களைத் துடைத்துக் கொண்டு, “அம்மா ஸ்கூலுக்கு போகலாம்.”  பர்னால்தான் தடவி இருக்கோம்.  இன்னும் டாக்டர்கிட்ட போகனும்.  zoo trip ஐ மிஸ் பண்ண மாட்டேன் என்று ஒரே அழுகை.  எனக்கு double  குற்ற உணர்ச்சி.  கடைசியில் பள்ளியில் கொண்டு விட்டு டீச்சரப் பார்த்து தனியாக அவனை கவனித்துக் கொள்ள சொல்லிவிட்டு அனுப்பி வைத்தேன்.  கடவுளே பெருசா எதுவும் complicate ஆகக் கூடாதேன்னு வேண்டிண்டு இருந்தேன்.  (ஒரு வாரத்தில் அவனுக்கு பூணுல் function  வேற)
இப்ப நினைத்தாலும் மனசுக்கு கஷ்டமாக இருக்கும்.
வாய் விட்டு சிரித்தது   -  நம்ம கவிஞர்  பா. விஜய்  தானே படம் எடுத்து ஹீரோ வாக நடித்திருக்கிறாரே.  அந்த படத்தில் இருந்து ஒரு பாடல் பார்த்தேன்.
புத்தகம்-  ஸ்ரீவேணுகோபாலனின்  திருவரங்கன் உலா.
தனித்திறமை  - பட்டியலிட ஆசை. தன்னடக்கம் தடுக்கிறது.
சுற்றுலாத்தலம்  -  மஹாபலீஷ்வர், குலு (ரோடங் பாஸ்).   மலைகள் எப்பொழுதுமே ஒரு பிரம்மிப்பை தருகின்றன.
வாழ்வில் சந்தோஷம்  -  என் குழந்தைகளுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும். (”மாம்ஸ் உனக்கே இது ஓவரா தெரியல”
                       “உனக்கு சந்தோஷம்.  எங்களுக்கு  .................”)
 
 
3 comments:
ஆஹா தமிழாக்க ஹாலிவுட் படங்களா இது நிச்சயம் பாராட்ட பட வேண்டிய முயற்சி தான், விரைவில் லிம்கா அல்லது கின்னஸ் சாதனையில் வர முயற்சி செய்யவும்.
//வேற என்ன காரணம் - வயசாயிடுச்சு// இதுதான் நம்ம மக்கள்ட்ட இருக்கும் ஒரு சிறந்த காரணம். அந்ததந்த வயசுக்கு ஏத்தா மாதிரி ஏதாவது தொடர வேண்டும், இந்த ஊர்ல நல்ல வெயில் அடிச்சதுன்னா நடு வயது அம்மாக்கள் மற்றும் பாட்டிகள் குட்டையாக ஸ்கர்ட் அணிந்து கொண்டு, bowling அல்லது, டென்னிஸ் விளையாட கிளம்பிவிடுவார்கள். பின்பு மதியம் மறுபடியும் நன்றாக உடை அலங்காரம் செய்து கொண்டு ஜன்னல் ஷாப்பிங் செய்து விட்டு அப்படியே ஒரு மணிநேரம் காப்பி கடையில் உட்கார்ந்து அரட்டையடித்துவிட்டு கிளம்புவார்கள். இதில நாம் கற்றுக்கொள்ள ஏராளமிருக்கிறது. இதில் முக்கியமானது they just dress to look good for themselves, not for anyone else.
உன் தன்னடக்கம் கண்டு நாங்கள் வியந்து போனோம். இருந்தாலும் ஒன்னு ரெண்ட எடுத்து விட்டிருக்கலாம்.
பதில்கள் நச் ஜெயந்தி.
//அழுதது// எதோ நாங்கள் அனைவரும் அருகில் இருந்து பார்த்து போல் இருந்தது .
நல்லவேளை குளிச்சிட்டு வந்த பையன் தீ புண்ணோடு தப்பிச்சான் .
ஸ்ரீவேணுகோபாலன் யாரு.. புஷ்பா தங்கதுரை ?
Hai Jayanthi
You have written as if you were explaining in person.
Frankly I envy your sense of humour.
Please keep it up.
Post a Comment