Wednesday, November 11, 2009

புதிய தொழில்நுட்பங்கள்

புதுசா கத்துக்கிட்டத முயற்சி பண்ணி பாக்கலாமேன்னு இந்த் பதிவு. இந்த பிடிஎஃப் கோப்பை எப்படி வலையில் இணைக்கிறதுன்னு தேடினப்ப இந்த நண்பர் விளக்கியிருந்தாரு. சரி நாம பெற்ற இன்பம் மத்தவங்களுக்கும் உபயோகப்படட்டுமேன்னு இங்க பதிஞ்சு வெக்கிறேன்.

மேலும் இந்த மர்ஃபியின் விதிகள் மிக சுவாரசியமாக இருப்பதால், அதுவும் ஒருத்தர் தமிழில் மொழிபெயர்த்து கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பு (நன்றி திரு S. ரத்தனகிரி) அதை இங்கே உங்களுக்காக:
மர்ஃபியின் விதிகள்





நேரம் கிடைக்கிரப்ப படிச்சிட்டு உங்களுக்கு பிடிச்ச விதிகள பின்னூட்டத்துல கொடுக்கலாம்..

4 comments:

ஜெயந்தி நாராயணன் said...

இதிலென்ன சுவாரசியம். கோபம்தான் வருகிறது. நான் வாழ்க்கையில் மிகவும் நம்பிக்கை உள்ளவள். என்னால் 30 விதிகளுக்கு மேல் படிக்க முடியவில்லை. அப்படியும் random ஆ அங்க ஒண்ணு இங்க ஒண்ணு என்று ஆயிரம் வரைக்கும் போனேன். எதுவும் என்னைக் கவரவில்லை. இன்று நடக்காதது நாளை நடக்கும் அல்லது நாளை மறுநாள் என்ற நம்பிக்கை வேண்டும். அப்பதான் வாழ்வு ரசிக்கும். இதுல பிடிச்ச விதிய வேற எழுதனுமா??

என்னிக்காவது ஒரு நாள் நம்ம நண்பர்கள் வகுப்பறையில் எழுதுவார்கள் என்ற நம்பிக்கையுடன் தானே நீயும் இருக்கிறாய்?

ஜெயந்தி நாராயணன் said...

வேலன் உண்மையிலேயே கலக்குகிறார். நம்ம கையெழுத்திலேயே ஃபாண்ட் உருவாக்குவதில் லாஸ்ட் ஸ்டெப்பில் நிற்கிறேன். not able to copy my font in windows font folder.

அப்பா..... எல்லா விஷயங்களயும் மிகவும் எளிமையாக சொல்லி இருக்கிறார். நன்றி சுரேஷ் வேலனை அறிமுகப்படுத்தியதற்கு.

கிவியன் said...

அட மர்ஃபியின் விதிகள் நம் வாழ்கையில் அன்றாடம் நடப்பதையே கூறுகிறது. இந்த விதிகள் வாழ்கையை சில சமயம் தவிர்க்க இயலாமல் நிகழ்ந்து விடுவதை கேலியான கண்ணோட்டத்தில் சொல்பவை.

விதி 8 கூறுவதைதான் வள்ளுவரும் சொல்லியிருக்காரு. இடுக்கண் வருங்கால் நகுக.


எதிர்பார்க்காதே, வகுப்பறைல ஒரு பயலும் எழுதப்போவதில்லை- மர்ஃபி விதி 1001.

ஆக ”ஃபாண்ட் ஜெ” தயாராகிக்கொண்டிருக்கிறதா? தமிழ்ல அதுக்கு “த்லையெழுத்து”ன்னு பேர் வெக்கலாமா??

ஜெயந்தி நாராயணன் said...

”தலையெழுத்து” - அது நம்ம லெச்சுவோட ஃபாண்ட்.