Friday, December 18, 2009

டியூஷன் கதைகள் - பாகம் 1

நண்பர்களே,

சில நாட்கள் முன்பு ஒரு மின்னஞ்சல் தொடரில் இந்த டியூஷன் பற்றி ஒரு சிறு சிந்தனை பரிமாற்றம் நடை பெற்றது, அதை தொடர்ந்து இந்த பதிவு. நம்ம ஊரு டியூஷன் ஒரு விசேஷமான சமாசாரம். இந்த டியூஷன் என்பது ஆரம்ப பள்ளி முதல் கல்லூரி வரை தொடர்கிறது. மேலும் நுழைவு தேர்வுகள் சார்ந்த வகுப்புகள். சற்றே சிந்தித்து பார்க்கையில் ( என் கருத்து ) இந்த டியூஷன் ஒரு விதமான வளர்ந்த குழந்தைகள் காப்பகம்.

நான் படித்த ( சென்றும் படிக்காத ) டியூஷன்அனைத்தும் ஒரு ஜாலியான அனுபவம். நான் ஒன்பதாவது வகுப்பில் படிக்கும் சமயம் ஒரு நாள் திடீரென்று நான் கணக்கில் வீக் என்று குடும்ப மக்கள் முடிவு செய்தனர். எதனால் வீக் என்று ஆராய்ச்சி எல்லாம் நடந்த்து. வழக்கம் போல் Cricket, கதை புத்தகம் படித்தல் போன்ற அணைத்து காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் டியூஷன் தான் இவன் கணக்கு குறைகளை போக்கும் என முடிவு எடுக்கப்பட்டு என் டியூஷன் நாட்கள் தொடங்கின. ராஜகோபாலன் சார் வீட்டில் கணக்கு டியூஷன் ஆரம்பித்தது இது ஒரு விசேஷமான இடம். அவருக்கு எங்கள் குடும்பம் முழுவதும் தெரியும் இது பல இன்னல்களை விளைவித்தது. நான் டியூஷன் கட் அடித்தது, OP அடித்தது எல்லாம தெரிய வந்திடும். வழக்கமான திட்டுகள், வாழ்த்துக்கள் இதனுடன் எனது டியூஷன் தொடர்ந்தது. இந்த சமயம் எனது டியூஷன் நட்பு சங்கலி வளர ஆரம்பித்தது. நான் மற்றும் சுரேஷ், துரைசுவாமி மற்றும் ஒரு சிறைய குழு கணக்கு டியூஷன் போனது ஒரு மறக்க முடியாத அனுபவம். அதே சமயம் டியூஷன் போகும் வழியில் ஒரு வீட்டில் ஜன்னல் வழியாக VCR படம் பார்க்கும் வாய்ப்புகள் மற்றும் டியூஷன் நண்பர்கள் இது எல்லாம் ஒரு பெரிய பொழுது போக்காக மாறியது. நான் கணக்கு படித்தது ரொம்ப குறைந்த நேரம் அனால் இதர கேளிக்கைகளில் செலவு செய்த நேரம் ஏராளம். இந்த நாட்களில் நடந்த ஒரு சம்பவம், ஒரு நாள் நான், சுரேஷ் மற்றும் துரைசுவாமி ஒரு Cycle'இல் triples சென்றோம். பக்கத்தில் உள்ள B-8 Police துணை ஆய்வாளர் எங்களை பிடித்து விட்டார். நங்கள் சென்ற வாடகை சைக்கிள் காபந்து செய்ய பட்டது .

தொடரும்,

சிவா

பி.கு. சுரேஷ் மிச்ச பக்கத்தை நீ எழுத வேண்டும்

5 comments:

கிவியன் said...

(அமெரிக்காவில் இருந்தாலும்) சிவா உன் தமிழ் நடை மிக சுவாரசியமாக இருக்கிறது. மேலும் எழுதவும்.

//இந்த டியூஷன் ஒரு விதமான வளர்ந்த குழந்தைகள் காப்பகம்.// இது மிக சரியான விளக்கம், நல்ல பகுப்பாய்வு (analysis).

அட ஜாலியா போகுதேன்னு படிச்சா முடிவுல நம்ம பக்கம் கைய காட்டிட்டியே சிவா..

சில சம்பவங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் எப்படி பதிந்து கிடக்கிறது? ?நீ குறிப்பிட்ட அந்த சைக்கிள் சம்பவத்தை பற்றி நான் ஏற்கனவே என் வலையில் எழுதியுள்ளதால் அதை இங்கே மறு பதிவு செய்கிறேன்.

Siva said...

சுரேஷ் எனது தமிழ் நடை குறித்து பாரட்டியதற்கு ( இல்லாவிட்டாலும் நான் அவ்வாறு எடுத்து கொள்கிறேன் :) ) மிக்க நன்றி. ஒரே நிகழ்ச்சியை பல கோணத்தில் பார்த்தல் புதிய நினைப்புகள் வரலாம் என்று ஒரு நப்பாசை, அதனால் தான் மிச்ச கதைய நீ எழுத வேண்டும் என்ற வேண்டுகோள். இது சைடு கதை, டியூஷன் கதைகள் கண்டிப்பாக தொடரும் ....

சிவா

sreesnake said...

அட! சிவாவுக்கு கணக்கு வராதுன்னு சொன்னாங்களா!! யார் அப்படி சொன்னது?? இன்னா தெகிரியம்?
என் சிற்றறிவைப் பொறுத்தமட்டில் நம்ம பாட்சிலேயே அவன் தான் அறிவு ஜீவின்னுவேன்!!

sreesnake said...

கிவியா!! "சைக்கிள் சம்பவத்தை" படித்தேன்!! இதை விட சுவையாக(?) யாராலும் எழுத முடியாது!! Hats off பா!!!

ஜெயந்தி நாராயணன் said...

ஸ்ரீ,

சுரேஷோட மெளனத்தை முழுவதுமாக படித்துப் பார். சொல்ல வந்த விஷயத்தை மிக நேர்த்தியாக நகைச்சுவையுடன் சொல்லி இருப்பது ரசிக்கும்படி இருக்கும்.

சுரேஷை பார்த்து நான் எழுத ஆரம்பித்தது ”புலியப் பார்த்து ............. ” கதைதான். ஆசை யாரை விட்டது????