ஈயை ஒட்டென்றால்
அதற்கொரு பதிவு கேட்கிறாய்
யோசித்து பார்த்தேன்
என்ன எழுதுவது???
ஊட்டிக்கும் போகல
இன்னொரு மீட்டுக்கும் யாரும் ஒத்துக்கல
நாட்டு நடப்பு எழுதலம்னு பார்த்தா
அது எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே..
வம்பு தும்பு என்னிக்கி எழுதி இருக்கோம்:)))
சொந்த கதை எழுதினா
போரடிச்சாலும் பொறுமையா படிப்பீங்க..
ரொம்ப நல்லவங்க..............
அதுதான்....... பள்ளியிலிருந்து தொடங்கினால்
மற்றவர்களும் தொடர வசடியாக இருக்கும்
ஆறாம் வகுப்பில், "as i am suffering from fever" நு
லீவ் லெட்டர் (நுழைவுத்தேர்வுக்கு வந்த ஒரு கேள்வி)
எழுதி இங்கலீஷ் மீடியம் அட்மிஷன்...
பெரிய பள்ளி ஏற்படுத்திய ப்ரம்மாண்டம்.....
காலை ப்ரேயர் அது முடிந்து போடும் ம்யூசிக்
இண்டெர்காமில் வரும் அறிவுப்பு, சிறு சேமிப்பு வங்கி
எல்லாமே எனக்கு ஆச்சரியம்தான்.
படிப்பு பெரிய மேட்டரா தெரியல...
எதோ படிச்சு பத்தாவது முடிச்சேன்....
அதே பள்ளியில் அண்ணன் வேறு நன்றாக படித்து
என் பேரை கெடுத்தான்.......
ஏழாம் வகுப்பில் என் பரீட்சை பேப்பரை கையில் வைத்துக் கொண்டு
உன் பெரியப்பா TST தானே என்று சரோஜா டீச்சர் கேட்ட போது
உள்குத்து புரியாமல் பெருமையுடன்
ஆமோதித்தேன்.....
பத்தாம் வகுப்பில்
“நீ ஸ்ரீநிவாசன் தங்கைதானே” என்று VTN கேட்ட கேள்விக்கும்
பார்த்த பார்வைக்கும்
தூக்கில் தொங்கி இருக்கலாம்.
நாமெல்லாம் யாரு (ஸ்டடியா நின்னோமுல்ல....)
பத்தாவது ரிசல்ட் வந்த அன்று மட்டும் சற்று உதறல்..
மேல மாசி வீதி பிள்ளையார் காப்பாத்தினார்...
எழுதிக் கொண்டே போகலாம்
இது ஆரம்பம்தான்...
மற்றவர்கள் தொடர ஒரு ,
அப்பா.... ஈ போயிருக்கும்....
1 comment:
அட ஈ-ய இப்படித்தான் ஓட்டுவாங்களா? தெரியாம போச்சே?
ஆனா சரியா ஓடல பாரு இன்னும் கொஞ்சம் எழுதியிருந்தாயானால் முழுசா ஓடியிருக்கும்...
தொடருவார்கள் என எத்தன வாட்டி ஆரம்பிக்கரது...
Post a Comment