முந்தய பதிவு ஈ ஓட்ட முயற்சி செய்ததால், நான் கொசு ஓட்ட முடிவு செய்து இந்த புதிய பதிவ செய்துள்ளேன் . நம்ம ஊர் கொசுவின் பரிணாம வளர்ச்சி ஒரு அசத்தலான சமாச்சரம். இந்த கொசுவை ஒழிக்க எத்தனயோ சமாச்சாரங்கள் கொசு வத்தி, பூச்சு மருந்து மற்றும் வாசனாதி திரவங்கள்  வந்துவிட்டன அனால்  மாம்பலம் முதல் மதுரை வரை இந்த கொசுவின் ஆட்சி கொடி கட்டி பறக்குது. 
சில பல வருடங்களுக்கு முன்னால் நான் மதுரையில் வசித்த காலத்தில் இந்த கொசு மருந்து அடிக்க வரும் நகராட்சி ஊழியர் வாரம் இரு முறை வரவேண்டும் அனால் பண்டிகை சமயம் மற்றும் தேர்தல் சமயம் மட்டும் வருவார்கள். ஒரு முறை  ஒரு வினோதமான வண்டி புகை கக்கிக்கொண்டே  வந்தது.. அந்த வண்டி சென்ற பிறகு கொசு வழக்கம்போல்(கடி)வேலை பார்க்க தொடங்கும். சமீப காலத்தில் மாம்பலத்தில்நான் பார்த்த ஒரு கொசு சுலுபமாக ஒரு அறையில் உள்ள எல்லோரையும் கடித்து முடித்து அங்கே எரிந்து கொண்டிருந்த கொசு வாதி சுருள் மேலே ஒரு விதமான அலட்சியத்துடன் பறந்து சென்றது.  
இதனால் நான் நாடு மக்களுக்கு கூறும் நல்ல செய்தி என்ன?
அட போங்கப்பா அதெல்லாம் நம்ம வகுப்பறை பேச்சுக்கு ஒத்து வராது :)
அட போங்கப்பா அதெல்லாம் நம்ம வகுப்பறை பேச்சுக்கு ஒத்து வராது :)
 
 
1 comment:
வந்த ஈக்கள ஓட்டின நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்கப்பா
ஈ-ய ஓட்டுவதற்காக போட்டுருக்காங்க பாரு பதிவுகள, ஈ எந்த அளவுக்கு பாதிச்சிருக்குன்னு புரியுது
முதலில் ஈ
இப்ப கொசு
அடுத்து என்ன வரும்?
வகுப்பறையின் நிலை
கண்டு
கொட்டாவி!!
Post a Comment