Tuesday, August 21, 2012

இதயம் தாக்கியதே

உடன் படித்த  நண்பன் இப்போது அனுபவமிக்க இதயஇயல் நிபுணராக பரிணமித்து, எங்களுடன் தனி அஞ்சலில்  பகிர்ந்து கொண்டதை இவ்விடம் இருத்தி வைத்தால் பலரும் படிக்க பயனுள்ளதாக இருக்குமே என்பதே இந்த பதிவின் நோக்கம்.

நண்பன் ஒருவனுக்கு அடிக்கடி இதத்தில் வலி ஏற்பட்டதால் கேட்ட கேள்விக்கு அளித்த பதிலிலிருந்து:

  
பொதுவாக தற்காலத்தில் மரணமேற்படுவதற்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய்களே முதன்மையான  காரணமாக இருக்கிறது

வருமுன் காப்பதே சிறந்தது

இதயத்தில் வலி ஏற்பட்டால் உதாசீனம் செய்யவே கூடாது.

எனினும் நீங்கள் அருகிலிருக்கும் மருத்துவரையோ அல்லது மருத்துவமனைகோ சென்றாலும் எதனால் இந்த வலி உண்டாகியது என்பதை கண்டறியும் திறன் முற்றிலும் அந்தந்த மருத்துவர்/மருத்துவமனையின் திறனையும் தரத்தையும் பொறுத்ததே.

ஒருவருக்கு இதயத்தில் வலி ஏற்பட்டால் அது இருதய-தாக்குதல் என்பதை அநேகமாக உறுதி செய்ய முடியாது. பொதுவாக ECG எடுப்பது உதவக்கூடியது என்றாலும்,இயல்பான- ECG என்ற முடிவு வந்தாலும்  இருதய-தாக்குதல் என்ற காரணத்தை தள்ளுபடி செய்ய முடியாது. இது  ஏன் என்றால் Echo என்பது ultrasound என்பதை அடிப்படையாக கொண்டது. இதனால் இரத்த ஓட்டத்ததை கண்டுபிடிக்க முடியாது. இருதய-தாக்குதலை உறுதி செய்ய என்ன தேவை என்றால் தொடர்ந்து 18 மணிநேரம் வரை இரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.

இதய வலி எற்பட்டவரை ஒரு மருத்துவனையில் அனுமதிப்பதன் மூலமே தொடர்ந்து 18 மணிநேர கண்கானிப்பில் வைத்து இரத்த பரிசோதனை செய்ய   இயலும்.  இப்படி செய்வதால் மட்டும் கண்டுபிடித்து விடலாம் என முடிவுக்கு வரையிலாது. ஏற்கனவே குறிப்பிட்டது போல், மருத்துவர்/மருத்துவமனையின் திறனை பொறுத்தே இரத்த பரிசோதனையை வைத்து மேற்படி சிகிச்சையை முடிவு செய்யகிறார்கள். இது ஒவ்வொரு இடத்துக்கு தகுந்த மாதிரி வேறுபடும்.

ஆக ECG-யும் அதனை தொடந்த 18 மணிநேர இரத்த பரிசோதனையும் மிக முக்கியமான  குறைந்தபட்ச உடனடியான கவன-சோதனைகள்.

பொதுவாக சென்னையை தவிர மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களில் அதுவும் ஒரு சில மருத்துவமனைகளே இந்த வசதிகளை கொண்டது.

கடும் இருதய-தாக்குதல் ஏற்பட்டால் நேரம் என்பது தசை போன்றது!! தாமதிக்காமல் உடனடியான சிகிச்சை தேவை.



தொடருமா?????

2 comments:

ஜெயந்தி நாராயணன் said...

வகுப்பறைக்கு FB ல ப்ரமோ வா???
எதாவது ஒண்ணு பண்ணித்தானே ஆகனும்:))

கிவியன் said...

அப்படியும் வைத்துக்கொள்ளலாம். ஒரு நல்ல விஷயம் நாலு பேருக்கு தெரியட்டுமேன்னுதான் ட்விட்டினேன். ஆனால் எனது ட்விட்டர்க்கும் FB-க்கும் தொடர்பிருப்பதால் FB-யிலும் வந்துவிட்டது. இரண்டு இடத்துல சொன்னாலும் ஒரே ஒரு ஆள் படிப்பதுதான் இதில் விஷேசம்.